புத்தியின் வகைகள்.....
1.மண் புத்தி:(மிருத்து புத்தி)
மண் சுவரில் ஆணி அடித்தால் உடனே எடுத்து விடலாம்.அது போல கேட்ட விசயங்களை உடனே விட்டு விடுவான்.
2.மரபுத்தி:(தாருபுத்தி)
ஆணி சுலபமாக இறங்கும்.ஆனால் சுலபமாக எடுக்க முடியாது.அதுபோல கேட்ட நல்ல விசயங்களை வெளியே விடாத புத்தி.
3.கல்புத்தி:(சிலாபுத்தி)
வரிசையாகத் துளையிட்டு முதல் துளையில் உளியால் அடித்தால் கல் பிளக்கும்.அதுபோல சொன்னால் முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய புத்தி.
4.மூங்கில் புத்தி:(வேணு புத்தி)
மூங்கில் கணுவின் ஒரு பக்கம் அடித்தால் மறு பக்கம் பிளந்து விடும். அது போல ஒரு விசயத்தைக் கேட்டவுடன் பின் விளைவுகளைப் புரியும்புத்தி.
5.எண்ணெய் புத்தி:(தைலபுத்தி)
தண்ணீரில் ஒருதுளி எண்ணெய் விட்டால் அது எல்லா இடத்திலும் பரவி விடும். ஒரு விஷயத்தை லேசாகச் சொன்னாலும் விபரமாகப் புரிந்து கொள்ளும் புத்தி.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.