*ஏகாதசி ஸ்பெஷல்*
~~~~~~~~~~~~~~~~
📌 *பன்னிரு திருநாமங்கள்*
✍🏽 _Mrs.Padma L.S.Nagarajan_
*கேசவன் - Kesavan*
*****************
கேசவன் தமர்க் கீழ்மே லெமரே ழெழுபிறப்பும்,
மாசதி ரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க் கின்றவா,
ஈசனென் கருமாணிக்க மென் செங்கோலக் கண்ணன்
விண்ணோர் நாயகன், எம்பிரா னெம்மான் நாராயணனாலே
*நாராயணன் - Narayanan*
**********************
நாரணன் முழு வேழுலகுக்கும் நாதன் வேதமயன்,
காரணம் கிரிசை கரும மிவை முதல்வ னெந்தை,
சீரணங்க மரர் பிறர் பலரும் தொழுதேத்த நின்று,
வாரணத்தை மருப் பொசித்த பிரானென் மாதவனே.
*மாதவன் - Madhavan*
*******************
மாதவ னென்றதே கொண் டென்னையினி யிப்பால்பட்டது,
யாதவங்களும் சேர்க்கொடே னென் றென்னுள் புகுந்திருந்து,
தீதவம் கெடுக்கு மமுதம் செந்தாமரைக்கற் குன்றம்,
கோதவ மிலென்கன்னற் கட்டி யெம்மா னென் கோவிந்தனே
*கோவிந்தன் - Govindhan*
**********************
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென் றென்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி, என்னைக் கொண்டென்
பாவந் தன்னையும் பாறக்கைத் தெமர் ஏழ்எழு பிறப்பும்,
மேவும் தன்மைய மாக்கினான் வல்லனெம் பிரான் விட்டுவே.
*விஷ்ணு - Vishnu*
****************
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைபாதம் கைகள் கண்கள்,
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு,
விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக்க ரம்பரிதி,
விட்டிலங்கு முடியம்மான் மதுசூதனன் தனக்கே.
*மதுசூதனன் - Madhusudhanan*
***************************
மதுசூதனை யன்றி மற்றிலே னென் றெத்தாலும் கருமமின்றி,
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி யாட நின் றூழி யூழி தொறும்,
எதிர்சூழல் புக் கெனைத் தோர்பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய,
விதிசூழ்ந்த தாலெனக்கே லம்மான் திரிவிக் கிரமனையே.
*திரிவிக்கிரமன் - Thrivikraman*
***************************
திரிவிக்கிரமன் செந்தாமரைக்க ணெம்மானேன் செங்கனிவாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தன னென்றென்று,
உள்ளிப் பரவிப் பணிந்து பல்லூழி யூழிநின் பாத பங்கயமே,
மருவித்தொழும் மனமே தந்தாய் வல்லை காணென் வாமனனே
*வாமனன் - Vamanan*
*******************
வாமன னென் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய்! என்றென்றுன் கழல் பாடியே பணிந்து,
தூமனத் தனனாய்ப் பிறவித்துழ திநீங்க, என்னைத்
தீமனங் கெடுத்தா யுனக்கென் செய்கேனென்? சிரீதரனே.
*சிரீதரன்-ஸ்ரீதரன் - Sridharan*
**************************
சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ண னென் றென்றி ராப்பகல்வாய்
வெரீஇ, அலமந்து கண்கள் நீர்மல்கி வெவ்வுயிர்த் துயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம்வளர வைகல் வைகல்
இரீஇ, உன்னை யென்னுள் வைத்தனை யென் னிருடீகேசனே!
*இருடீகேசன்-ரிஷிகேசன் - Rishikesan*
*********************************
இருடீகேச னெம்பிரா னிலங்கை யரக்கர்க் குலம்,
முருடு தீர்த்தபிரா னெம்மா னமரர் பெம்மா னென் றென்று,
தெருடியாகில் நெஞ்சே! வணங்கு திண்ணமறி யறிந்து,
மருடி யேலும் விடேல் கண்டாய்! நம்பி பற்பநாபனையே
*பற்பநாபன் - பத்மநாபன் - Padmanabhan*
***********************************
பற்பநாபன் உயர்வு அற வுயரும் பெருந்திறலோன்,
எற்பர னென்னை யாக்கிக்கொண்டு எனக்கே தன்னைத்தந்த
கற்பகம், என்னமுதம் கார்முகில் போலும் வேங்கடநல்
வெற்பன், விசும்போர் பிரா னெந்தை தாமோதரனே.
*தாமோதரன் - Damodharan*
*************************
தாமோ தரனைத் தனி முதல்வனை ஞால முண்டவனை,
ஆமோ தரமறிய வொருவர்க்கு? என்றே தொழுமவர்கள்,
தாமோ தரனுரு வாகிய சிவற்கும் திசைமு கற்கும்,
ஆமோ தரமறிய எம்மானை யென்னாழி வண்ணனையே.
~~~~~~~~
வண்ண மாமணிச் சோதியை யமரர் தலைமகனை,
கண்ணனை நெடுமாலைத் தென்குருகூர்ச் சடகோபன்,
பண்ணிய தமிழ்மாலை யாயிரத்துள் இவைபன் னிரண்டும்,
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல்தாள் அணைவிக்குமே
********************************
Do you know about the twelve names of the lord vishnu?
எண்ணற்ற திருநாமங்களை உடைய பரந்தாமனின் ஆயிரம் திருநாமங்களை தொகுத்து பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் கூறியதுதான் விஷ்ணு சகஸ்ர நாமம். அந்த ஆயிரம் திருநாமங்களை பன்னிரெண்டு திருநாமங்களாக சுருக்கி பரந்தாமனி்ன் பெருமைகளைக் கூறுவதுண்டு. அதற்கு த்வாதச எனப்பெயர். வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்
1. *கேசவ* - துன்பத்தைத் தீர்ப்பவன்
2. *நாராயண* - உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
3. *மாதவ* -திருமகள் மணாளனாக இருப்பவன்
4. *கோவிந்த* - பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் / பசுக்களை மேய்த்தவன்
5. *விஷ்ணு* - அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6. *மதுஸுதந* - புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் / மது என்னும் அரக்கனை வென்றவன்
7. *த்ரிவிக்ரம்* - மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8. *வாமன* - குள்ளமான உருவம் உடையவன்
9. *ஸ்ரீதர* - ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10. *ஹ்ருஷிகேச* - தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11. *பத்மநாப* - தனது நாபியிலே தாமரையை உடையவன்
12. *தாமோதர* - உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.
********************************
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.