Wednesday, 6 July 2016

மூலிகை ரகசியங்கள்"

"மூலிகை ரகசியங்கள்"

ஆவாரை:-
இதனுடைய பட்டையின் கஷாயம் சாப்பிட சருமத்திற்கு ஒளி தரும், நீரிழிவு தீரும், இதன் பூவை கூட்டு செய்து சாப்பிட மூத்திர சம்பந்தமான நோய்கள் குணமாகும், வெள்ளை வெட்டை தீரும் குளிர்ச்சியை தரும்.

பொன்னாவாரை:-
இதுவே சூரத்து நிலாவாரை, மலத்தை இளக்கும் இதன் பூ சரும நோய்கள் ,தடிப்பு ,மேகப்படைகள்  ,வெடிப்பு, தினவு நீக்கும்

பேய்மிரட்டி:-
கோரசுரங்களை போக்கும், இதை பெருந்தும்பையென்று கூறுவர்.

குன்மகுடோரி:-
இதன் சமூல சூரணம் குன்மத்தை போக்கும்,கஷாயம் செய்து சாப்பிட இருமல் சுவாச காசத்தினை போக்கும்.

விடத்தேர்:-
இதனுடைய பட்டைத்தூள் சுத்தி செய்த பாதரசம் இரண்டும் சேர்த்து தேன் விட்டு நன்றாக மடியும் அளவுக்கு அரைத்து மத்தித்து மெழுகாக செய்து கொண்டு பிரதி தினமும் காலையில் மிளகளவு ஒரு மண்டலம் சாப்பிட்டு பசுவின் பாலன்னம் மட்டும் சாப்பிட்டுவர உடல் வச்சிரகாயமாகும்

நின்றால் சிணுங்கி:-
பெரும்பாடு என்னும் பெண்கள் உதிரப்பெருக்குக்கு இதன் இலைகள் ஒரு கைப்பிடி ஒரு வெங்காயம் கொஞ்சம் சீரகம் வைத்தரைத்து எருமைத்தயிரில் காலை மாலை ஒருவாரம் பத்து நாட்கள் கொடுக்க குணமாகும்
ஆண்பெண் வசியம் செய்யும்.

கோடகசாலை:-
இதன் இலைகளை மிளகுடன் சேர்த்தரைத்து கெச்சக்காயளவு கொடுக்க பாம்புக்கடி விசம் , காணாக்கடி விசங்கள் குணமாகும் உப்பிலாப்பத்தியம்.
இதன் சாறுடன் சமளவு விளக்கெண்ணெய் கலந்து சுடவைத்து தைலமாக்கி காலை மாலை தேக்கரண்டியளவு சாப்பிட சொறி சிரங்கு மேகப்படைகள் விரணம் குணமாகும்.

சூரிய காந்தி:-
வாதரோகங்களை நீக்கும்

ஈசுரமூலி:-
பலவிதமான விசங்களை முறிக்கும், மேகநோய்களை போக்கும்,மாட்டு நோய்களுக்கு இதன் கொடியை கழுத்தில் சுற்றி வைத்தால் நல்ல பயனை தரும் ,பாதரசம், லிங்கம் இவைகளை கட்டி குருவாக்கும்.இதை பெருமருந்தென்றுரைப்பர்.
நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.