அன்னையின் அருள்மொழிகள்
சக்தியை வீணாக்காதே
-------------------
மனிதர்களுக்கு சக்தியை வீணாக்காமல் பாதுகாக்கத் தெரியவில்லை .
ஒரு விபத்தோ ஒரு நோயோ ஏற்பட்டால் அவர்கள் உதவி வேண்டுமென்று கேட்கிறார்கள், அவர்கள் கேட்டதற்கு இரண்டுமடங்கு , மூன்றுமடங்கு சக்தி கொடுக்கப்படுகிறது .
அவர்கள் தங்களால் சக்தியை ஏற்க முடிவதை உணர்கிறார்கள் , ஏற்கிறார்கள் .
இந்த சக்தி இரண்டு காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது :
விபத்தினால் அல்லது நோயினால் ஏற்பட்டு விட்டகோளாறைப் பழுதுப்பார்க்கவும் , அந்த நோய் அல்லது விபத்தின் உண்மைக் காரணமாக இருந்ததைச் சரிபடுத்தவும் ,
அதை மாற்றவும் தேவையான ஓர் உருமாற்றும் ஆற்றலைக் கொடுக்கவும் .
சக்தியை அந்த வழியில் பயன்படுத்துவதற்குப் பதில் அவர்கள் உடனேயே , உடனேயே அதை வெளியே கொட்டிவிடுகிறார்கள் .
அவர்கள் அங்குமிங்கும் ஓடத்தொடங்குகிறார்கள் ,
வேலை செய்யத் தொடங்குகிறார்கள் ,
பேசத் தொடங்குகிறார்கள் ,
இப்படி எதாவது செய்யத் தொடங்குகிறார்கள் ........ தங்களிடம் நிறைய சக்தி இருப்பதாக உணர்கிறார்கள் , எல்லாவற்றையும் வெளியே கொட்டிவிடுகிறார்கள் !
எதையும் வைத்துகொள்ள அவர்களால் முடிவதில்லை .
பிறகு சக்தி அவ்வாறு வீணாக்குவதற்கு அல்லாமல் ஒரு அக உபயோகத்திற்காகக் கொடுக்கப்பட்டதால் , இயற்கையாக , அவர்கள் உயிரற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள் .
இது எங்கும் நடக்கிறது .
அவர்களுக்கு தெரியவில்லை ,
எப்படி உள்ளே சென்று சக்தியைப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை .
அப்படியே வைத்துகொள்ள அல்ல ,
அதை வைத்துக் கொள்ள முடியாது-உடலுக்கு ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்யவும் ,
ஆழ்ந்து சென்று விபத்திற்கு அல்லது நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்து , அதை ஓர் ஆர்வமாக ,
அக உருமாற்றமாக மாற்ற அவர்களுக்குத் தெரியவில்லை .
இதற்க்கு பதில் மக்கள் உடனேயே வளவளவென்று பேசவும் அங்கும் இங்கும் ஓடவும் , இதையும் அதையும் செய்யவும்
தொடங்கி விடுகின்றனர் !
உண்மையில் , மிகப் பெரும்பாலான மனிதர்களுக்கு சக்தியை வீணாக்கினால்தான் தாங்கள் உயிரோடிருப்பதாகத் தோன்றுகிறது ;
இல்லையென்றால் அது வாழ்க்கையாகத் தோன்றுவதில்லை .
சக்தியை அது எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காகச் செலவிடுவதுதான் வீணாக்காதிருத்தல் என்பதன் பொருள் . உருமாற்றதிற்காக , ஜீவனை மேம்படுத்துவதற்காக சக்தி கொடுக்கப்பட்டால் , அதற்காகவே அதைப் பயன்படுத்த வேண்டும் ;
உடலில் சீர்குலைந்துபோன எதையாவது சரி செய்ய சக்திக கொடுக்கப்பட்டால் அதற்காக அதைச் செலவிட வேண்டும் .
ஒருவனுக்கு ஒரு தனிப்பட்ட வேலை கொடுக்கப்பட்டு அந்த வேலையைச் செய்ய சக்தி கொடுக்கப்பட்டால் அதற்காக சக்தியைச் செலவிடுவது சரிதான் , அது சக்தி கொடுக்கப்பட்ட நோக்கங்களுக்காகச் செலவிடுவது தான் .
சக்தி நிரம்பியிருப்பதாக உணர்ந்த உடனேயே மனிதன் செயலில் இறங்கிவிடுகிறான் . அல்லது எதாவது பயனுள்ள காரியம் செய்யவேண்டும் என்னும் அறிவு இல்லாதவர்கள் , அரட்டையடிக்கிறார்கள் . அதை விடவும் மோசம் , தங்களைக்
கட்டுப்படுத்த தெரியாதவர்கள் சகிப்புத் தன்மையற்றவர்களாக வாதமிடத் தொடங்கிவிடுகிறார்கள் ! அவர்களுடைய விருப்பத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் அவர்கள் சக்தி நிரம்பியிருப்பதாக உணர்கிறார்கள் தங்களுடைய கோபம் தார்மீகக் கோபம் என்று கருதிக்கொள்கிறார்கள் !
ஸ்ரீ அன்னை.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.