Wednesday, 6 July 2016

விதி,சுயமுயற்சி..

விதி,சுயமுயற்சி..
🙏🍀🍀🍀🍀🍀🙏
கடவுள் சிலை முன் கற்பூரம் ஏற்றப்படுகிறது.அது கரைந்திடும் போது இறைவனின் தரிசனம் நமக்கு கிடைக்கிறது.அதுபோல நம்முடைய வாசனைகள் அழிய அழிய , நம் முன்னால் இருக்கும் இறைத்தன்மை விரிந்து,நாம் நம் புனித சொருபத்தை ஆரம்பிக்கிறோம்,
💐💐💐💐💐💐💐
மனிதனாக இருப்பாதால் ,கடந்ததை ஒரு கணம் கூட நினைத்துப் பார்க்காமல்,மனிதனுக்கு மட்டுமே உரித்தான சுய முயற்சியை சரியாக உபயோகித்து பிரமாண்டமான சாதனைகளைக் கற்றுக்கொண்ட பெருமையான எதிர்காலத்தைத் தோற்றுவித்து வீறுகொண்டு முன்னேறுவோம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁
மனிதன் இன்றைய நிலையை நிர்ணயிப்பது அவனது கடந்தகால செயல்கள்.அவனுடைய பிறப்பிலிருந்து இந்த வினாடி வரையிலான அனுபவங்கள் தூய்மையாகவும்,புனிதமாகவும் இருப்பின்,அவன் இன்று ஒரு தூய்மையான பெருந்தன்மையான மனிதன்,ஒவ்வொரு மனிதனும் உலகை அவனுடைய அகக்கருவி எப்படி பிரதிபலிக்கிறதோ, அப்படியாக மாறுபட்ட வேறுபட்ட காட்சிகளை அது அளிக்கிறது.
🌺🌺🌺🌺🌺🌺🌺

மனிதனுடைய நிகழ்காலம் அவனுடைய கடந்த காலத்தால் உருவாவதால் , அவன் ஒருவழியில்,விதியால் பாதிக்கப்படுகிறான்,ஆனால் அதே சமயத்தில் அவனுடைய நிகழ்காலத்து செயல்களை தேர்ந்தெடுக்கும் சத்தி அவனுக்கு உண்டு.
🌻🌻🌻🌻🌻🌻🌻
ஒருவன் வாழ்க்கையில் எதை எதிர்கொள்கிறானோ,அது விதி.எப்படி எதிர்கொள்கிறானோ அது சுயமுயற்சி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.