Monday, 4 July 2016

வானமே எல்லை.

நாற்பது வயதுக்குப் பிறகு வானமே எல்லை.
       இயற்கை  உங்களுக்கு வழங்கும்  எல்லா  மாற்றங்களையும்  முழு மனதோடு ஏற்றுக் கொள்வதைத் தான்  முதலில்  நீங்கள்  கற்றுக்  கொள்ள வேண்டும். 
        இளமைக்கு அதற்கே உரித்தான  அழகு உண்டு.  அதுபோலவே முதுமைக்கும் கூட அதற்கே உரிய அழகு உள்ளது.  முதுமையில்  செக்ஸ்  ரீதியிலான  வாழ்க்கை  இல்லாமல்  போகலாம்.  ஆனால்,  ஒருவன் அடக்கமாக, அமைதியாக, தியானத்தில்  ஈடுபடுவனாக வாழ்ந்திருந்தால்  முதுமை, அதற்கே உரித்தான  பொலிவுடன்  பிரகாசிக்கும்.  'அழகு பொங்கும் வெள்ளிப் பனி மூடிய சிகரம்  போல, முதுமையின் வெளிர்முடி, தனக்கே உரித்தான  தனி அழகுடன்  மின்னும்.  அழகு மட்டுமல்ல, எந்த இளைஞனும் சொந்தம் கொண்டாட முடியாத ஞானமும்  நிறைந்த  பருவம் அது. இளமைக் காலத்தின் அனைத்து நடவடிக்கைகளுமே முட்டாள்தனமானவை. இந்தப் பெண்ணின்  பின்னால்  ஓடிக் கொண்டிருக்கும்  இளைஞன், பிறகு அந்தப்  பெண்ணுக்குப் பின்னால்  ஓடுகிறான். இந்த ஓட்டத்தை எல்லாம்  நிறுத்தி விட்டவன் வயது முதிர்ந்தவன். அவன்  தனக்குள் ஒரு  தெளிவும் அமைதியும் பெற்று ஒரு  நிதானத்தை அடைந்திருக்கிறான். யாரையும்  அவன்  நம்பியிருக்க  மாட்டான். வயது முதிர்ந்த  பெண்ணும் இதை வழியைத்தான் கடைபிடித்தாக வேண்டும்.  இதில் ஆண், பெண் என்ற  பாகுபாடெல்லாம் இருக்க முடியாது.  உடற்கூறு  சார்ந்த  அடிமைத்தனத்திலிருந்து (Biological slavery) நீங்கள்  விடுபடும்போதுதான் காதல் மலரும். உடல் சார்ந்த  உறவு மிக அருவருப்பானது. காலம் காலமாக  மக்கள்  வெளிச்சம்  இல்லாமல்  இருட்டில்தான் காதலில் கலந்து  உறவாட வேண்டும்  என்று  தீர்மானித்திருக்கிறார்கள். எனவேதான், அவர்கள்  என்ன  செய்து  கொண்டிருக்கிறார்கள்  என்பது  அவர்களுக்கே தெரிவதில்லை.
             வாழ்க்கையில்  உடற்கூறு ரீதியிலான மாற்றம்  வரும்போது அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது மட்டுமல்ல. சந்தோஷத்தில் நினைக்க வேண்டிய  தருணமும் கூட. எல்லாவிதமான முட்டானள்தனங்களையும் நீங்கள்  கடநது வந்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள்  உடல்ரீதியான தளையிலிருத்து விடுபட்ட சுதந்திரப் பறவை. நிலைப்படுத்திக் கொள்வதைப் பற்றி  மட்டும்தான்  இனிக் கவனம் செலுத்த  வேண்டும்.       ஓஷோ.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.