Sunday, 31 July 2016

குரு

குரு
ஆதிகுரு தட்சிணாமூர்த்தி
எல்லாம் வல்ல இறைவன் முதன் முதலில் உயிர்களுக்கு தன்னை அடைய வழி காட்டி முதல் குருவாக – ஆதி குருவாக வந்த திறத்தினையும் அவர் கூறி அருளிய மோன உபதேசத்தினையும் இக்கட்டுரையில் காண்போம்.
புராதன காலத்தில் பிரம்ம புத்திரரகள் நால்வர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்கள் பூரணத்துவம் பெறாமல் தவித்தனர்.
எல்லாம் வல்லவனை, எங்கும் நிறைந்தவனை, ஆதி அந்தமில்லா அருட் பெருஞ்ஜோதியினை, பரம் பொருளை, பிரபஞ்சகர்த்தாவை, ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அணுவாக ஒளிர்பவனை அறியவெண்ணாமல் வழி தெரியாமல் பரிதவித்தனர். வேண்டினர் பரமாத்மனிடம், மனம் உருகினர் மன்பதை உய்ய வழியை நாடி! தவித்தனர் செய்வதறியாமல்.
சனகாதிகளின் தவிப்பை உணர்ந்த சர்வேஸ்வரன் அருள்புரிய திருஉளம் கொண்டார். சனகாதி முனிவர்கள் முன் தோன்றினார். திடீரென்று தங்கள் முன் ஒரு உருவம் தோன்றியதை கண்டு திகைத்து நின்றனர். பரம்பொருளை – கடவுளை காண விரும்பினோமே. இப்படி ஒரு உருவம் முன் இருக்கிறதே! ஏன்? யார்? எதற்கு? என மிகவும் ஆச்சர்யத்துடன் தங்களுக்குள் வினவிக் கொண்டனர்.
கல்வி கேள்விகளில் கற்றுத் தேர்ந்த சனகாதிகள் ஒருவாறு யூகித்து அறிந்தனர். நாம் கடவுளை காண விரும்பினோமே, திடீரென்று தோன்றிய இவ்வுருவம் ஒன்றும் கூறாமல் நம்முன் இருக்கிறதே! கடவுளை காண அந்த கடவுளே நமக்கு வழிகாட்டத்தான் வந்த்திருக்கிறார் என யூகித்து அறிந்தனர்.
கடவுளை எல்லாம் கடந்தவனை அவ்வளவு எளிதில் காண முடியுமா என்ன? நாம் அதற்கு பக்குவமாக இருக்க வேண்டாமா? சனகாதிகளுக்கே இறைவன் நேரடியாக அருள்புரியவில்லை!?
சர்வமும் அறிந்த சனகாதி முனிவர்களுக்கு, அதன் மூலம் உலகுக்கே, இறைவன் முதன் முதலாய் குருவாக வந்து காட்சி கொடுத்து மோன உபதேசம் அருளினான்.
தன்னை அடைய குரு உபதேசம் பெற வேண்டியதன் முக்கியதுவத்தை இறைவனே சனகாதி முனிவர்களுக்காக தட்சிணா மூர்த்தியாக காட்சி கொடுத்தார். அதன் மூலம் மீட்சி பெற வழிகாட்டினார்.
தங்கள் முன் பேசாமல் , பாதி கண் திறந்த நிலையில் இடக்காலை மடக்கி வலக்காலை ஊன்றி அசுரனை மிதித்த நிலையில் கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் பகவானை கண்டனர். ஒரு கையில் தீயும் ஒருகையில் உடுக்கையும் ஒரு கையில் வேதமும் ஒரு கை சின்முத்திரையுடன் அருளும் நிலையும் இருக்கக் கண்டனர். நாற்கரமும் கண்டனர்.
சடா மகுட சிரசின் வலப்பக்கம் சூரியன், இடப்பக்கம் சந்திர பிறையுடன் , சாந்தம் தவழும் புன்னகை தவழும் அழகிய முகமும் கண்டனர். யோசித்தனர் – யுகித்தனர் ஒருவாறு உண்மையை உணர்ந்து கொண்டனர். அது என்ன?
ஆதிகுரு தட்சிணாமுர்த்தி தங்கள் முன் தோன்றியுள்ளது. தென் திசையான எமனிடமிருந்து மீள, மரணமில்லாத பேரின்ப பெருவாழ்வு பெற தென்திசை நோக்கி இருக்கும் ஆதி குரு தட்சிணாமுர்த்தியை நோக்கி நாம் வடதிசை நோக்கி அமரவேண்டும். தட்சிண பாகத்தை தென்திசையை நோக்கி அமர்ந்த மூர்த்தம் ஆனதால் தட்சிணாமுர்த்தி என்றனர் சனகாதி முனிவர்கள். ஆதிகுரு தட்சிணாமுர்த்தி ஒன்றும் பேசாமல் இருப்பதால் நாமும் ஒன்றும் பேசாது மௌனமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். இதுவே மோன நிலை.
இறைவன் தீயை சுமந்து தான் தீயாக அக்னியாக ஜோதி சொருபமாக இருப்பதாய் உணர்த்தினார். அது மட்டுமல்ல ஒளியான அவனோடு உடுக்கை ஒலி, ஓங்காரம் நாதமும் இருப்பதாகவும் உணர்த்துகிறார். அதாவது ஒளியும், ஒலியுமாக விந்து நாதமாக இருப்பவன்.
மற்றொரு கையிலுள்ள வேதங்கள் சொல்வது இதை தான். தட்சிணாமூர்த்தியான இறைவன் பற்றியும் , அவனை அடைய வழியுமே. நான்காவது கை அருள்பொழியும் சின்முத்திரை தாங்கிய கை. ஒலி சேர்ந்த ஒளியாக பரம்பொருள் சின்முத்திரையில் உள்ளார். சின்முத்திரை அறிந்து உணர்ந்து தவம் செய்க.
கண்ணை திறந்து பேசாது “சும்மா இரு” என்பதுவே தட்சிணாமுர்த்தி ஆதிகுரு சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம். வேதங்கள் சொல்லும் மறைபொருள், ஞான இரகசியம்! பரம்பொருளான இறைவன் பேரொளியானவர். ஒளியோடு ஒலியும் இணைந்துள்ளது. அது மனித தேகத்தில் சின்முத்திரையில் உள்ளது. சின்முத்திரை பிடித்தால் சும்மா இருந்தால் நாம் இறைவனை அடையலாம். சனகாதி முனிவர்கள் அறிந்தனர். உணர்ந்தனர். அடைந்தனர். உய்தனர்.
இதில் முக்கியமானது சின்முத்திரை. இதுதான் – மனித தேகத்தில் இறைவன் துலங்கும் இடம். நாம் தவம் செய்ய வேண்டிய ஸ்தலம். சும்மா இருக்க வேண்டிய இடம். இறைவன் தன் வலதுகை பெருவிரலில் மத்தியிலுள்ள கோட்டை ஆள்காட்டிவிரலால் மடக்கி தொட்டு , மற்ற விரலை நீட்டியபடி அருள்பாலிக்கிறார்.
சபரி மலை அய்யபனும் இந்த சின்முத்திரை காட்டியே அருள்புரிகிறார். சின்முத்திரை வைத்தபடியே கையை புரட்டி பார்த்தல் ஆள்காட்டிவிரலும் கட்டைவிரலும் கூடிய பகுதியானது நமது கண்போலவே தோன்றும். கட்டை விரலின் மேல் நுனியிலிருந்து ஆள்காட்டி விரல் தொட்டு உள்ள கோடு வரையிலுள்ள இடமே நம் கண் அளவு. ஆக சின்முத்திரை என்பது “கண்” என்பதை மறைமுகமாக பரிபாசையாக சூட்சமமாக யூகித்து அறிந்து கொள்ள வேண்டியே சொல்லப்பட்டது. உணர்த்தப்பட்டது.
கடோபநிசத்தில் நசிகேதன், மனித தேகத்தில் இறைவன் இருக்கும் இடம் யாது? என எமதர்மரஜனிடம் வினவ, அதற்கு எமன், இறைவன் கட்டை விரல் அளவான இடத்தில் புகை இல்லாத ஜோதியாக விளங்குகிறான் என்று பதில் கூறுகிறார். இதுவே ஆதாரம் இதற்கு.
நம் உடலில் கட்டைவிரல் அளவான இடம் என பரிபாசையாக கூறப்பட்டது நமது கண்ணையே. பேரொளியான அருட்பெரும் ஜோதியான இறைவன் புகையில்லாத ஜோதி. நம் கண்மணி உள் இருக்கும் சுயம் ஜோதி. எவ்வளவு பெரிய ஞான இரகசியம். இது தெரிந்தால் தானே தட்சிணாமூர்த்தி உணர்த்தியது போல கண்ணை திறந்து சும்மா இருந்து தவம் செய்ய முடியும்.
தட்சிணாமுர்த்தியாக ஆதிகுருவாக இறைவன் உணர்த்திய உபதேசம் கண்ணில் ஒளியை உணர்ந்து விழித்து சும்மா இரு என்பதுவே. “சும்மா இரு” என்பதுவே. சனகாதி முனிவர்கள் அதிபுத்திசாலிகள் ஆனதால் அறிவால் அறிந்தனர். ஆதிகுரு சொல்லாமல் சொன்னதால் , அறிவித்ததால் அறிந்து உணர்ந்தனர். இதுவே உண்மை, சத்தியம் என வேதமும் சித்தர்களும் பற்பல ஞானியரும் பறைசாற்றுகிறார்கள்.
சனகாதி முனிவர்களுக்கு மோனமாக உணர்த்திய ஆதிகுரு , அருணகிரிநாதருக்கு, முருகன் ஓர் அந்தணர் வடிவாக வந்து “சும்மா இரு” என்று சொல்லியே காத்தார்.!
இறைவன் நேரடியாக அருளவில்லை. குருவாக உபதேசித்து அருளினார். தன்னை அடைய குரு மிக மிக மிக முக்கியம் என்பதை உணர்த்தி , “சும்மா இரு” எனவும் உபதேசிக்கிறார். சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்து பக்குவம் பெற்றவர்க்கே இறைவன் தன்னை காட்டியும் உணர்த்தியும் அரவணைத்தும் ஆட்க்கொள்கிறார். இதுவே ஞான நிலை. மோன நிலை.
விழி தான் ஞானம் பெற ஒரே வழி என்பதை உணர்வீர். விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் தவம் என்பதையும் உணர்வீர். விழி! விழி!
இன்றைய உலகில் ஜாதகம் பார்க்கும் பலர் குருபெயர்ச்சி பற்றி கூறி குழப்புகிறார்கள். ஜாதகத்தில் உள்ளது நவகிரகங்கள். அதில் உள்ளது குருகிரகம் – பிரகஸ்பதி – தேவகுரு. இந்த குரு தான் பெயர்ச்சி அடைவது. தட்சிணாமூர்த்தியல்ல. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நவ கிரகத்தில் ஒன்றான பிரகஸ்பதி – குரு வேறு! ஆதி குரு தட்சிணாமூர்த்தி வேறு. ஆதி குரு தட்சிணாமூர்த்தி தான் ஞான குரு. ஆதி குரு தட்சிணாமூர்த்தி உணர்த்தியதே ஞானம். நவ கிரகத்தில் ஒன்றான குரு அல்ல தட்சிணாமூர்த்தி.
ஆதி குருவாம் தட்சிணாமூர்த்தி உணர்த்திய சும்மா இருந்து தவம் செய்து இறைவனை அடையும் உபாயத்தை , எதாவது குரு மூலம் உபதேசம் பெற்று அறிந்து தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்பவனே ஞானம் பெற்று அந்த இறைவனை அடைவான். இந்த ஆதி குரு சுட்டிக்காட்டிய விழி வழி தவம் செய்பவரின் பற்பல பிறவிகளில் செய்த கோடி வினைகளையும் இந்த ஆதிகுரு – இறைவன் பார்த்தால் தான் தீரும். ஆதிகுரு நம்முள் இருந்து பார்க்கணும். தட்சிணாமூர்த்தி அருள் கிட்டணும். ஆதிகுருவை அறிய நீ இங்கே ஒரு சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெறு. தவம் செய்.
எதாவது ஒரு குரு கிடைத்தால் போதும். சீடன் உத்தமனாய் இருந்தால் போதும். குரு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவர் குருதான். சீடன் உத்தமனாயிருந்தால் அந்த ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அந்த நல்ல சீடனுக்கு வேறு நல்ல சீடனுக்கு வேறு நல்ல குருவை காட்டி இரட்சிப்பார். தீய ஒரு குருவை நாடிடும் சீடனின் நம்பிக்கையே ஆதி குரு தட்சிணாமூர்த்தி சற்குருவை நல்ல ஒரு குருவை பணியச்செய்து தடுத்தாட்க்கொள்வார். தயா பெருந்தகை. ஞான சொருபம். ஆதி குரு.
ஆக குரு வேண்டும். நல்ல குரு வேண்டும். ஆதி குருவை அறிய வேண்டும். “குருவின் அடிபணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்.”
குருவே தெய்வம்!
குரு வார்த்தையே வேதம்!
குரு தரிசனம் பாவ விமோசனம்!
குருவின் திருவடியே பரம பதம்!
குருவின் வார்த்தையே மந்திரம் !
குரு சேவையே
உன்னத இறைபணி!
குருவை பணிந்தவனே ஞானம் பெறுவான்!
குருவை போற்றுபவனே அறிவு பூரணமாக பெறுவான்!
சர்வமும் குருவே! சகலமும் குருவே!
என்று சும்மா இருப்பவனே இறைவனை அடைவான்!
-ஞான சற்குரு
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?

🌿 கோயில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில் அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவர். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மாவிலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.

🌿 விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.

🌿 விழாக்களின் போதும் சுபநிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். அவ்வாறு ஒன்று கூடுவதனால் காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சு+ழல் பாதிப்படைகிறது.

🌿 காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன. நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டீரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.

🌿 மாவிலைகள் புரோஹிஸ்பிடின் என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் புரோஹிஸ்பிடின் வாயு அழிக்கிறது. மாவிலைத் தோரணம் சுற்றுச்சு+ழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.

🌿 மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்களத்தையும் குறிப்பதாகும். கோயில்கள் மற்றும் வீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம�

Saturday, 30 July 2016

இராமகிருஷ்ண மடம

🌹இராமகிருஷ்ண மடம்🌹

🍁சுவாமி விவேகானந்தர்

🌾பிரபஞ்சம் சூன்யத்திலிருந்து படைக்கப்பட்டதா

🍂இது எங்கிருந்து வந்தது? இருப்பு, இல்லாமை எதுவுமே இன்றி இருள் இருளில் மறைந்திருந்தபோது, இந்தப் பிரபஞ்சத்தை யார் படைத்தது? எப்படிப் படைத்தார்கள்? இந்த ரகசியம் யாருக்குத் தெரியும்? மனிதன் படைத்தவற்றுள் மிகமிகப் பழமையான வேதங்களில்கூட இதே கேள்வி எழுவதைக் காண்கிறோம்

🍂இந்தக் கேள்விகள் இன்றும் நம்மிடையே கேட்கப்பட்டு வருகின்றன. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குப் பலகோடி முயற்சிகள் நடந்திருக்கின்றன. இன்னும் பலகோடி முயற்சிகள் நடந்துகொண்டேயிருக்கும்.

🍂இந்தியாவின் புராதனமான தத்துவ ஞானிகள் இந்தக் கேள்விக்கு அளித்த பதிலைத் தற்கால அறிவுடன் இணைத்து உங்கள் முன் வைக்க நான் முயல்கிறேன்.

🍂இருப்பு, இல்லாமை இரண்டுமற்ற காலம் ஒன்று இருந்தது என்பது முதல் அம்சம். அப்போது இந்த உலகம் இருக்கவில்லை. கடல்கள், சமுத்திரங்கள், ஆறுகள், மலைகள், நகரங்கள், கிராமங்கள், மனிதர்கள், மிருகங்கள், செடிகொடிகள், பறவைகள் இவற்றையெல்லாம் தன்னுள் அடக்கிய நமது அன்னை பூமி, கிரகங்கள், நட்சத்திர மண்டலங்கள், மற்றும் படைப்பின் எல்லையற்ற பல விசித்திரங்கள் எவையுமே அப்போது இருக்கவில்லை. இது நமக்கு நிச்சயமாகத் தெரியுமா? இந்த முடிவு எப்படி வந்தது என்பதை ஆராய முயல்வோம்.

🍂ஒரு மனிதன் தன்னைச் சுற்றிக் காண்பது என்ன? ஒரு சிறிய செடியை எடுத்துக் கொள்வோம். மனிதன் ஒரு விதையைப் பூமியில் நட்டுத் தண்ணீர் விடுகிறான். சிறிது காலம் கழித்து, ஒரு சிறிய செடி பூமியிலிருந்து தலை நீட்டி, வளர்ந்து, பெரிய மரமாகிறது. பிறகு விதையை விட்டுவிட்டு அது அழிகிறது. விதையிலிருந்து முளைத்து, மரமாகி, மறுபடியும் விதையாகி, இப்படி ஒரு சுழற்சியை அது நிறைவு செய்கிறது.

🍂ஒரு பறவையைப் பார்த்தால், அது முட்டையிலிருந்து பிறந்து, வளர்ந்து, எதிர்காலப் பறவைகளை உண்டாக்கும் விதைகளான முட்டைகளை இட்டுவிட்டு இறக்கிறது. மிருகங்கள், மனிதர்கள், ஆகிய அனைவரின் விஷயமும் இப்படித்தான்.

🍂இயற்கையிலுள்ள எல்லாமே சில விதைகள், சில மூலப்பொருட்கள், சில நுட்பமான உருவங்கள் இவற்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. சிறிதுசிறிதாகப் பருத்தன்மை அடைந்து, வளர்ந்து, சிலகாலம் அப்படியே தொடர்ந்து, பின்னர் மறுபடியும் பழைய நுட்பமான ஆரம்ப நிலையை அடைந்து, அடங்கிவிடுகின்றன

🍂ஓர் அணு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ, அதே முறையில்தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது .

🍂பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே விதிதான் நிலவுகிறது . ஒரு பிடி மண்ணை அறிந்துகொள்வதன் மூலம், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா மண்ணின் இயல்பையும் நாம் அறிந்துகொள்ள முடியும் என்று வேதங்கள் கூறுவது சரியானதே ஆகும்.

🍂இதே தர்க்கத்தை இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொருத்திப் பார்த்தால், எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவும் ஒரேமாதிரி இருப்பதை நாம் காணலாம்.

🍂ஆறு, நீராவியிலிருந்து தோன்றி மீண்டும் நீராவியாக மாறுகிறது. தாவரம் விதையிலிருந்து தோன்றி விதையிலேயே முடிகிறது. மனித உயிர், மனித உயிரணுக்களிலிருந்து தோன்றி மனித உயிரணுக்களாக முடிகிறது.

🍂இதோ, இங்கே இருக்கும் மேஜையை உடைத்து, அழித்துவிட்டால், அது, நாம் மேஜை என்று சொல்லும் இந்த உருவத்தை அமைப்பதற்குக் காரணமாக இருந்த அதன் நுட்பமான துகள்களாகிய காரண நிலையை அடைந்துவிடுகிறது.

🍂இந்தப் பூமி அழிந்தால், அதற்கு உருவம் அளித்த மூலகாரணத்தை அடைந்துவிடுகிறது. மூலகாரண நிலையை அடைவதையே நாம் அழிவு என்கிறோம்.

🍂ஆகவே அழிவு என்பது ஒரு பொருளை முற்றிலுமாக இல்லாமல் ஆக்குவது அல்லது.எந்த பொருளையும் முற்றிலுமாக இல்லாமல் ஆக்க முடியாது.ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதையே நாம் அழிவு என்கிறோம்.

🍂ஆகவே மேஜையாகிய பொருளும் அது துகழ்களாக மாறிய மூலமும் ஒன்றே, வேறு பட்டவை அல்ல என்பது தெரிகிறது. இரண்டும் உருவத்தில்தான் வேறுபடுகின்றன.

🍂விதை மரத்தை உண்டாக்குகிறது. மரம் விதையை உண்டாக்குகிறது. இப்படியே மாறிமாறி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முடிவே இல்லை.

🍂நீர்த்துளிகள், அருவிகளாக மலைகளிலிருந்து இறங்கி ஓடி, கடலில் கலக்கின்றன. அங்கிருந்து நீராவியாக மேலே போய், மறுபடியும் மழையாக மலை உச்சியில் பொழிகின்றன. இதுவும் மாறிமாறி நடந்து வருகிறது.

🍂இப்படி எழுவதும் விழுவதுமாக இந்தச் சுழற்சி நடந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே இப்படித்தான் நடைபெறுகின்றன.

🍂சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, உடல், மனம் மற்றும் பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே மறைந்து, அழிந்ததுபோலாக வேண்டுமானால் தங்கள் நுட்பமான மூல காரணநிலையை அடைய வேண்டும்.

🍂ஆனால் அவை மூல காரணங்களில் நுட்ப உருவத்துடன் இருக்கவே செய்யும். இந்த நுட்ப உருவங்களிலிருந்து மறுபடியும் அவை, புதிய பூமிகள், சூரிய சந்திரர்கள், மற்றும் நட்சத்திரங்களாகத் தோன்றுகின்றன.

🍂மரத்திலிருந்து விதை வருகிறது. அது உடனே மரமாக மாறுவதில்லை. அது சிலநாள் இயக்கமில்லாமல் இருக்கிறது. இதையே வேறுவிதமாகச் சொன்னால், வெளிப்படையாகத் தெரியாத ஒரு நுட்பமான இயக்கத்தில் அது ஈடுபட்டிருக்கிறது. விதை மண்ணுக்கு அடியில் தான் சிலகாலம் இயங்க வேண்டும். அங்கே அது பல துண்டுகளாக உடைந்து, சிதறி, அனேகமாக உருத்தெரியாமல் அழிகிறது. அந்த அழிவிலிருந்துதான், புத்துயிர் பெற்ற தாவரம் உற்பத்தியாகிறது.

🍂பிரபஞ்சமும் ஆரம்பத்தில் சிலகாலம் இதேபோல் தான் நுட்பமான உருவத்துடன் வெளியில் தெரியாமலும் வெளிப்படாமலும் இயங்க வேண்டும். அந்த நிலையிலிருந்துதான் புதிய படைப்பு தோன்றுகிறது.

🍂ஆகவே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சூன்யத்திலிருந்து வெளிவந்திருக்க முடியாது.

🍂அதாவது ஒன்றுமே இல்லாமல் இருந்து பிறகு புதிதாக உருவாகவில்லை.

🍂அப்படியானால் எதிலிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியது? அதற்கு முன்னால் இருந்த நுட்பமான பிரபஞ்சத்திலிருந்துதான்

🍂ஆகவே நுட்பமான உருவில் இருந்த பிரபஞ்சத்திலிருந்து தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தோன்றியிருக்கிறது. அது இப்போது வெளிப்பட்டிருக்கிறது; பின்னர் தன்னுடைய நுட்பமான உருவத்திற்குத் திரும்பிச் சென்றுவிடும், மறுபடியும் வெளிப்படும். நுட்பமான உருவங்கள் வெளிப்பட்டுச் சிறிதுசிறிதாகத் தூலத் தன்மையை அடைகிறது. தூல நிலையிலேயே வளர்ந்து அந்தத் தன்மையின் எல்லையை அடைந்தவுடன், பின்னோக்கிப் போக ஆரம்பித்து, மறுபடியும் சிறிதுசிறிதாக நுட்ப நிலையை அடைகின்றன.

🍂ஆகவே சூன்யத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். எல்லாம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது; இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இயக்கம்தான் நுட்பத்திற்குச் செல்வதும், அதிலிருந்து தூலமாக வெளிப்படுவதும், மறுபடியும் நுட்பத்திற்குச் செல்வதுமாக, அலைபோல் எழுவதும் விழுவதுமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

🍂இந்தக் கால அளவு சமஸ்கிருதத்தில் ஒரு கல்பம் அதாவது சுழற்சி என்று சொல்லப்படுகிறது.

ஞானம்

🌹ஞானம் 🌹

ஒரு குடத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது , அந்த குடத்தில் எவ்வளவு லீட்டர் தண்ணீர் இருக்கிறது என்று கேட்டால் எளிமையாக அளந்து பார்த்து சொல்லி விட முடியும் அதற்கு ஒரு அளவு முறையை மனிதன் உருவாக்கி உள்ளான்

ஆனால் அதுவே அந்த குடத்தில்  எத்தனை  சொட்டு தண்ணீர்  உள்ளது என்று கேட்டால் அந்த கேள்வியை பெரிய சுமையாக கருதிக் கொள்கின்றது மனம்

அதுபோல தான் மனம் என்ற அடிப்படையில் உனக்கு  உள்ளே நிரப்பி வைத்த தண்ணீர் போல எண்ணங்கள் நிரம்பிய பாத்திரமாக இருக்கிறாய்

அந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீர் என்பது எண்ணம், இப்பொழுது ஒவ்வொரு சொட்டாக பொறுமையுடன் அளந்து வெளியே உற்று - நீ ஒவ்வொரு சொட்டுகளையும் கவனிக்கும் பொழுது அதன் தன்மை பொருந்தும் ஒன்றா - இல்லை  பொருந்தாத ஒன்றா என்பதை உணர்ந்து பார்க்க முடியும்

இந்த உணர்வில் சுமை போல உள்ள எண்ணங்கள் கரைந்த ஒரு மெல்லிய உணர்வுகளாக  உன்னால் உணர முடியும்

பின்பு உனது எண்ணங்கள் கரைந்த தன்மையில்  உனது பாத்திரம் வெறுமை ஆகும் நிலையை உன்னால்  உணர முடியும்.

அங்கே உனது ஞானம் இயல்பில் மலருவதை மிக உற்சாக மகிழ்ச்சியுடன் உணர முடியும்

எந்த சொல்லுக்கும் ,செயலுக்கும் மூலம் எண்ணங்கள்-
எண்ணங்களை உன்னால் ஒவ்வொரு சொட்டாக பிரித்து பார்க்கும் பக்குவம் வரும் இடத்தில் எண்ணம் எழும் மூலத்தை அறிய முடியும் பின்பு அது ஒரு எண்ணமாகவே தெரிவதில்லை -அது ஒரு அலைத்தன்மை வடிவில் உணர முடியும்

அந்த அலையோடு அலையாக கரையும் தருணத்தில் அங்கு வெற்று மனமாக இருக்கிறாய்

அங்கே அது பிரபஞ்சத்துடன் இணைவதையும் அதை உள் வாங்கும் தன்மையை உணர முடியும்

இந்த நிலை உனது இயல்பு வாழ்க்கையில் மலரும் எனில் அங்கு நீ எந்த ஒன்றிலும் எதனுடனும் ஒட்டி கொள்ள மாட்டாய், தேவை அறிந்த செயல்படும்  விழிப்பில் மட்டுமே இருப்பாய்

நீ சமுதாயத்தில் இருப்பாய் - ஆனால் உனக்குள் சமுதாய தன்மை போகாது

ஏனெனில் உனக்கு உள்ளும் -வெளியும் பரி சுத்தமான அன்பு பரிமாற்றங்கள் மட்டுமே இருக்கும் பற்று இருக்காது

பற்று கரையும் இடங்களில் ஞானம் இயல்பில் மலரும்

நன்றி