Thursday, 8 October 2015

முனைவர் N மகாலிங்கம்

🙏🏼🙏🏼அருட்செல்வரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்🙏🏼🙏🏼

🙏🏼முனைவர் என். மகாலிங்கம் (பி. மார்ச் 21, 1923)🙏🏼🙏🏼 அவர்களின் சகாப்தம்🙏🏼🙏🏼

👉🏻தமிழகத் தொழிலதிபரும், குறிப்பிடத்தக்க மக்கள் சேவையாளராவார்.

👉🏻பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சக்தி குழுமத்தின் அதிபர் ஆவார்.

🙏🏼'பொள்ளாச்சி' மகாலிங்கம் என்றும் அழைக்கப்படுவார்🙏🏼

👉🏻1923ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் ஒரு சாதாரண வேளாளவிவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

👉🏻பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார்.

👉🏻அவர் தந்தை நாச்சிமுத்துக் கவுண்டர் நகராட்சித் தலைவராக இருந்த காரணத்தினால் அவரும் அரசியலில் ஆரம்ப காலம் முதல் ஆர்வமாக இருந்தார்.

👉🏻1952 முதல் 1967 ஆம் ஆண்டு வரை அவர் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.

👉🏻அவருடைய உந்துதலால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மற்றும் பல்வேறு சமுதாய மற்றும் விவசாய திட்டங்களை பொள்ளாச்சிக்குப் பெற்று தந்திருக்கிறார்.

👉🏻இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த தொழில் கொள்கைகளைப் பயன்படுத்தி பல்வேறு தொழில் மற்றும் வணிகங்களைத் தொடங்கிருக்கிறார்.

👉🏻இன்று சக்தி குழுமம் சர்க்கரை ஆலை, நிதி தொழில், வாகன உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டிற்கிறது.
இக்குழமத்தில் உள்ள மற்ற தொழில்கள்:
சர்க்கரை ஆலை
நிதி துறை
பேருந்து உற்பத்தி
பாக்கிங்
பானங்கள்
நான்கு சக்கர வாகன உற்பத்தி
காற்று அலை
பேருந்து சுற்றுலா
பால் உற்பத்தி
தேயிலைத் தோட்டம்
ஜவுளித் துறை
90வயதான இவர் பல்வேறு குழுமங்களுக்கு தலைவராகவும் கவுரவ தலைவராகவும் இருந்திருக்கிறார்.

👉🏻மாநில திட்ட குழமத்தில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

👉🏻கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றிற்கும் பல்வேறு சமுதாய சேவைக்கும் பண உதவியும் செய்து வருகிறார்.

👉🏻சென்னையில் அமைந்திருக்கும் ஆசிய ஆராய்ச்சி கழகம் இவரது உந்துதலால் 1981 ஆம் ஆண்டு உருவானது

கவுரவ முனைவர்:
👉🏻1983 - காஞ்சி சங்கராச்சாரியார் பல்கலைக்கழகம்👏🏼👏🏼

👉🏻1984 - பாரதியார் பல்கலைக்கழகம்👏🏼👏🏼

👉🏻1988 - அண்ணா பல்கலைக்கழகம்👏🏼👏🏼

👉🏻1988 - சென்னைப் பல்கலைக்கழகம்👏🏼👏🏼

👉🏻2000 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்👏🏼👏🏼

👉🏻1989 - இந்திரா காந்தி ஒருமைப்பாடு பட்டம்👏🏼👏🏼

👉🏻1989-1992 ஆண்டுகளுக்கான மொரீஷியஸ் அரசின் விருது👏🏼👏🏼

👉🏻2007 - பத்ம பூஷண் விருது (இந்திய அரசு)👏🏼👏🏼

🙏🏼🙏🏼உத்தமரின் ஆத்மா ஆண்டவன் பாதத்தில் சாந்தி பெற பிரார்த்தனை செய்வோம்🙏🏼🙏🏼

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.