Thursday, 8 October 2015

அஜீரணம் - பாட்டி வைத்தியம்

அஜீரண பிரச்னைக்கு - பாட்டி வைத்தியம்

* இஞ்சி சாற்றில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

* இஞ்சிச்சாறு கொதிக்க வைத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் உணவுக்குப் பின்னர் குடித்தால் பெருத்த வயிறு குறையும்.

* தோல் நீக்கப்பட்ட இஞ்சியை உப்பு சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

* இஞ்சியுடன் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு சரியாகும்.

* எலுமிச்சை பழச்சாறு, வெள்ளரிப்பிஞ்சு, உப்பு மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமா னத் தொல்லைகள் தீரும்.

* ஏலக்காய் விதை, ஓமம், சீரகம் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மூன்று வேளையும் உணவுக்குப் பின் மூன்று கிராம் அளவுக்கு சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

* கடுகு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஜீரணக்கோளாறுகள் சரியாகும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை கஷாயம் வைத்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.