Thursday, 8 October 2015

தூக்கம் துக்கத்தை போக்கும்

'துக்கத்தை' போக்கும் "தூக்கம்..."

நம் உடல் உள்ளுருப்புகளுள் நம்மை வாழ வைக்கும் கடவுள் யார் தெரியுமா..?

நம் உடலின் ராஜ உறுப்பு "கல்லீரல்" தான்...

இந்த கல்லீரல் ஆரோக்கியமாக இருந்து...
சிறப்பாக செயல்பட்டால் தான்... 
நம் ரத்தத்தில் சேரும் கடினமான நஞ்சுக்களை நீக்கி நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்...

மேலும், நம் உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கான அடிப்படை வேலைகளை என 500 க்கும் மேற்பட்ட மிகமுக்கிய வேலைகளை செய்வது நம் கல்லீரல்தான்...

நமது பணத்தை சேமிக்க மற்றும் கடன் வாங்க உதவும் வங்கி போல... நமது அனைத்து நல்லது, கெட்டதுகள் இங்கு தான் கணக்கு வைக்க படுகிறது...

கீழ்கண்ட காரணங்களால்...
நம்மை அறியாமலேயே...
நம் கல்லீரலை நாம் அன்றாடம் கல்லீரலை பல வழிகளில் கெடுத்து வருகிறோம்...

1. ரசாயனங்கள்...

இந்த ரசாயனங்கள்... நாம் குடிக்கும் நீர், சுவாசிக்கும் அசுத்த காற்று, ரசாயன உர உற்பத்தி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும்  ரசாயன மருந்துகள் என பல வகையில் நம் உடலுக்குள் புகுந்து கல்லீரலை பாதிக்கிறது...

2. ஆல்கஹால்...

போதை பொருட்களை உபயோகிப்பதன் மூலம் உடலுக்குள் சென்று கல்லீரலை பாதிக்கிறது...

3. விஷம்...

நாம் அறிந்த விஷங்கள் மட்டுமல்லாமல், கெட்டு போன உணவுகளும் விஷமாக மாறி கல்லீரலை பாதிக்கும்...

4. மனஅமைதியின்மை...

கோபம், வெறுப்புணர்வு, காழ்ப்புணர்வு, எரிச்சல், ஈகோ,  பேராசை  போன்ற கெட்ட உணர்வுகளால் மனஅமைதியின்மை ஏற்பட்டு கல்லீரல் பாதிப்படைகிறது...

5. போதிய தூக்கமின்மை...

உடல் ஆரோக்கிய குறைவு, மனஅமைதியின்மை, இரவு பணியின் நிமித்தம் கண்விழித்தல்  போன்ற காரணங்களால் தூக்கமின்மை கல்லீரலை பாதிக்கிறது.

கல்லீரலின் "ஆரோக்கியம்" காக்க மேற்கண்ட தவறான விஷயங்களை தவிர்ப்பதால்... அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் கொண்டது...

மேலும்,
கல்லீரல் "சிறப்பாக" செயல்பட தூக்கம் மிக அவசியமாகிறது...

அதாவது,
"சரியான நேரத்தில் துாங்குவது..."
"போதிய அளவுக்கு தூங்குவது..."
இதுவே நம் முன்னோர்கள் கடைபிடித்த சரியான முதல் வழி முறையாகும்...

சரியான நேரம் என்றால் ஏன்ன..?

இயற்கையின் இயக்கம் துாங்குவதற்கென்றே சில மணி நேரங்களை விதித்துள்ளது.

என்னவென்றால்,
பகல்... உழைப்பதற்கான நேரமாகவும்,
இரவு... துாங்குவதற்கான நேரமாகவும் அறியப்படுகிறது.

மேலும், நாம் உண்ணும் உணவு, ஜீரணமாக முக்கிய பங்காற்றும் பித்தப்பையும், கல்லீரலும் சிறப்பாக செயல்படும் நேரம் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரையில் தான் என்று சீன மருத்துவம் கூறுகிறது.

துாங்காமல் இருக்கும் போது உடல் மொத்தமும் சோர்வடைகிறது...

யோசிக்கிற, பேசுகிற அனைத்து விஷயங்களிலும் மனம் நிலை கொள்ளாமல் தத்தளிக்கிறது...

உடலை, மனத்தை புத்துணர்வளித்து புதுப்பிக்கும் வேலை தான் துாக்கத்தின் போது நடைபெறுகிறது.

இரவுக்கு பதிலாக, பகலில் துாங்கினால் என்ன...? என்பது நம்மில் பெரும்பாலோரின் கேள்வியாக இருக்கிறது...

அப்படி ஒரு நாள் இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு பகலில் நீண்ட நேரம் துாங்கிப் பாருங்கள்...

இரவு துாங்காத சோர்வு, பகல் துாக்கத்தால் நீக்கப்படுவதில்லை...

ஒரு இரவுத் துாக்கத்திற்கு... பல நாள் பகல் துாக்கமும் ஈடாகாது...

அப்படி என்னதான் இரவுத் துாக்கத்தில் இருக்கிறது?

துாங்குவதின் இயற்கை விதியை பார்ப்போம்...

மரபுவழி அறிவியலில் மொத்த உயிரினங்களையும் இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

இரவில் துாங்குபவை...
இரவில் துாங்காதவை...

இரவில் துாங்காத உயிரினங்களுக்கு உதாரணம் நாய், பூனை போன்ற விலங்குகள். இவற்றின் கண்களில் இரவில் ஒளி பட்டால், ரேடியம் நிறம் போலக் காட்சியளிக்கும், எதிரொளிக்கும். இந்த கண்களில் 'டேப்டம் லுாசிடம்' என்ற சிறப்புப் பொருள் உண்டு.

மனிதர்களின் கண்களில் இந்த சிறப்புப் பொருள் இல்லை. எனவே நாம் அவசியமாக இரவில் துாங்க 
வேண்டியவர்கள் என்பது இயற்கை விதி.

இரவில் துாங்க வேண்டிய உயிரினங்கள் துாங்காமல் இருந்தாலும்...
துாங்கக் கூடாத உயிரினங்கள் துாங்கினாலும்...
அது இயற்கை விதி மீறல்.

இரவில் சரியாக துாங்காவிட்டால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு உடலில் கழிவுகள் தேங்கிவிடுகின்றன...

நம்முடைய கல்லீரல் மட்டும் முழுமையாக பழுதடைந்தால், ரத்தத்திலுள்ள ரசாயன நச்சுக்கள் ஓரிரு நாட்களில் நம்மைக் கொன்றுவிடும். அந்த அளவிற்கு நாம் பயன்படுத்தும் உணவுகள் இருக்கின்றன...

துாக்கமும், இரவின் சூழலும், கல்லீரலின் இந்த இயக்கத்திற்கு அவசியம்.

உயிருள்ள ஒவ்வொரு அணுவும் பகலை விட இரவுகளில் தான் வளர்ச்சிதை மாற்றம் அடைகிறது.

இரவுகளில் துாங்குகிறவர்களுக்கு தான் மேற்கண்ட வளர்ச்சிக்கான மாற்றங்களும், நச்சுத்தன்மை அகற்றமும் முழுமையாக நடைபெறுகின்றன.

துாங்கி விழித்து, எழும் போது உடல் கனமாகவும், சோர்வுற்றும் இருந்தால்...  இரவில், உடலில் நடக்க வேண்டிய செப்பனிடும் பணிகள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்பதைக் குறிக்கிறது.

விழித்து எழும் போது சுறுசுறுப்பாகவும், நாம் செய்யப் போகிற வேலைகள் பற்றிய சிந்தனைகளோடும் இருப்பது நல்ல துாக்கத்தின் பலன்தான்.

உடலுக்கு வலிமை தரும் துாக்கம், ஹார்மோன் பராமரிப்பையும் மேற்கொள்கிறது.

தீர்க்க முடியாதது என்று ஆங்கில மருத்துவம் அறிவிக்கிற நோய்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பல நோய்கள் ஹார்மோன் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் வருபவை தான்...

ஹார்மோன்களை கட்டுப்படுத்தி...
ஹார்மோன் சுழற்சியின் பராமரிப்பை நம் துாக்கம்தான் துவங்கி வைக்கிறது.

உடலின் ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்குவதில்லை.

உதாரணமாக அட்ரினலின் ஹார்மோன் சுரக்கும் போது, இன்சுலின் சுரக்காது...

பிட்யூட்டரியின் டி.எஸ்.ஹெச். ஹார்மோன் சுரந்தால் தான் தைராக்சின் ஹார்மோன் சுரக்கும்...

இப்படி ஒன்றை ஒன்று சார்ந்த சுழற்சிதான் ஹார்மோன்களின் இயக்கம்.

இரவில் நாம் துாங்கும் போது, கண்களின் குளிர்ச்சியால் மூளையின் அருகிலிருக்கும் பீனியல் சுரப்பி துாண்டப்படுகிறது...

இதிலிருந்து மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரந்து, உடலின் பல அடிப்படை வேலைகளுக்கு காரணமாக அமைகிறது.

இந்த ஹார்மோன்கள் சுழற்சியில் இரவுத்துாக்கத்தின் போது சுரக்க வேண்டிய மெலட்டோனின் சுரக்கவில்லை என்றால், படிப்படியாக மற்ற ஹார்மோன்களின் சுரப்பிலும் மாறுபாடு ஏற்படுகிறது.

அதெல்லாம் சரி. மெலட்டோனின் இரவில் தான் சுரக்குமா..?

1950 களில் கண்டுபிடிக்கப்பட்ட கிரிகோரியன் உடல் கடிகாரத்தின் படியும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான மரபுவழி அறிவியலின், உடலியல் விதிகளின் படியும் இரவு 11 மணிக்கு நாம் துாங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே பீனியலில் இருந்து மெலட்டோனின் சுரக்கும்...

எனவே,
ஹார்மோன் சுழற்சியை ஒழுங்காக வைத்துக் கொள்ளவும்...

ரசாயன நஞ்சுகளில் இருந்து தப்புவதற்காகவும்...

நம்மிடம் உள்ள வலுவான ஆயுதம் "துாக்கம்..."

இந்த தூக்கத்தின் போது தான் நம்மை காக்கும் கடவுளான கல்லீரலின் இயக்கம் சிறப்பாக இருக்கும்...

தூக்கத்தின் அளவு வயதை பொருத்து, உடல், மன ஆரோக்கியத்தை பொருத்து ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்...

போதுவாக குழந்தைகளுக்கும், ஆரோக்கிய குறைவானவர்களும் அதிக தூக்கம் தேவைபடுகிறது...

எனவே, நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற, முறையாக தூக்க வேண்டும்...

இலகுவாக ஜீரணமாகும் உணவை தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிட்டு விட்டு...
சரியான நேரத்தில் (பெரியவர்கள்- இரவு9to10)...
உடலை, பல்லை சுத்தமாக்கி...
பருத்தி ஆடையில்...
தளர்ந்த உடையில்...
தேவையான அளவு தண்ணீர் குடித்து விட்டு...
நல்ல இயற்கை காற்றோட்டமுள்ள...
சுத்தமான இடத்தில்...
இயற்கையான பொருளால் ஆன படுக்கையில்...
வடக்கில் தலை வைக்காமல்...
முகத்தை மூடாமல்...
மூச்சு காற்றை கவனித்தபடி...
அனைத்து சிந்தனைகளையும் தவிர்த்து விட்டு...
"எல்லாம் இறைவன் செயல்..."
"நடப்பதெல்லாம் நன்மைக்கே..."
என்ற மனநிலையுடன்...
மனஅமைதியுடன்...
நிம்மதியாக...
அயர்ந்து...
முழுமையாக சோர்வு நீங்கும் வரை...
போதிய அளவுக்கு...
துாங்குங்கள்...

தூங்குபவர்களை நன்றாக தூங்க விடுங்கள்...
குறிப்பாக, நோயாளிகள், குழந்தைகளின் தூக்கத்தை கெடுக்காதீர்கள்...

காலையில்,
ஆரோக்கியமாக, ஆனந்தமாக, உற்சாகமாக எழுங்கள்...
ஆர்வமாக, நம்பிக்கையுடன், சிறப்பாக பணியாற்றுங்கள்...
அனைத்து துக்கங்கள், துயரங்கள், கஷ்டங்களை விரட்டுங்கள்...

வாழ்க்கையை நலமுடன் வாழுங்கள்...
வளமுடன் வாழலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.