Thursday, 22 October 2015

வாஸ்துக்குறை தீர்க்கும் வள்ளல் பெருந்தகை

பாண்டிய மண்டலம் என்று அழைக்கப்படுகிற மதுக்கோட்டை
சமஸ்தான எல்லையில் திருமயத்திற்கு அடுத்ததாக
செவலூர் பூமிநாதர்
ஆலயம் உள்ளது.
இங்குள்ள ஸ்ரீபூமிநாத சுவாமி வாஸ்துக்குறை தீர்க்கும்
வள்ளல் பெருந்தகை போல் அனைவருக்கும் பூமி யோகம் தந்து
அருள்வதோடு நிறை
வளம் தந்திடும் இறைவனாக காட்சி தருகிறார்.
ஒரு சமயம் திருமால் அழைத்த போது பூமாதேவி அவர் அருகில்
காலம் கடந்து சென்ற
போது கோபம் கொண்ட நீலமேகன் தேவியை பார்த்து,
பூமியின் வளம் இல்லாத பகுதிக்கு சென்று சில
காலங்கள் வசித்து வருவாயாக
என்று சாபம் கொடுத்து விட்டார்.
பூமிக்கு வந்து வளம் இல்லாமல் வறண்ட பகுதியில் நின்ற
பூமாதேவி வழியில் நாரதரை சந்தித்து இதற்கு விமோசனம் கேட்ட
போது
புவியில் சிவ பூஜை செய்தால் விரைவில் சாம விமோசனம்
கிடைத்து விடும் என்று அவர் கூறிட அவ்வாறே அந்த பகுதியில்
மூன்று
சிவாலயங்கள் அமைந்திருக்க ஒரு பகுதியில் பதினாறு பட்டைகளை
உடைய சிவலிங்கத் திருமேனியை வைத்து வழிபட்டாள்.
தன்னை
பெற்ற தாயாகிய பூமாதேவியே நேரில் வந்து சிவ
பெருமானை பூஜை செய்யும் காட்சியை கண் விழித்து
பார்த்த வாஸ்து பகவான் அந்த
பகுதியில் உள்ள ஈசனை வழிபடுவோர்களுக்கு வாஸ்து குறை, பூமி
சல்லிய தோஷங்கள், இல்லம் கட்டுகிற போது ஏற்படும் குறைகள்,
தடைகளை நீக்கி அருள்வதாக தன் தாய் பூமாதேவி முன்பு
உறுதியாக கூறினார்.
அதன்படி பூமிநாதருக்கு செய்யப்படுகிற அபிஷேக
ஆராதனை புனித நீர் வாசனை திரவிய தீர்த்தங்கள் அனைத்தும்
பூமி காரகனாம் வாஸ்து புருஷனால் உறிஞ்சப்பட்டு
விடும் என்பது
நம்பிக்கை.
பூமியோகம் பெறவும் வீடு தொடர்பான நிலம்
தொடர்புடைய வழக்குகள் தீர செவ்வாய்க்கிழமை
செவ்வாய் ஓரையில் வாஸ்து ஹோமம்
செய்வதும், வாஸ்து யந்திர பூஜை செய்து வீட்டுக்கு
எடுத்து செல்வதும் வழக்கமாக உள்ளது.
வாஸ்து பகவான் விழித்திருக்கும் ஒரு ஆண்டில் வரும் எட்டு
தினங்களில் கூட்டு வழிபாடு, சிவனுக்கு அபிஷேக ஆராதனை
செய்து
வழிபாடு நடத்திய பிறகு அன்னதான சேவையும்
நடத்துகின்றனர். பூமியில் விளைகின்ற கிழங்கு வகைகளால்
செய்யப்பட விசேஷ உணவு
பதார்த்தத்தை நிவேதனமாக செய்து, வாஸ்து
புருஷனின் ஓமம், பூமா தேவி வழிபாடும் நடத்துவது
குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் விசேஷமாக பூமி நாதரின் தியானத்தையும்,
காயத்ரி மந்திரத்தையும் கூறி நெய் தீபம் ஏற்றி 16 திசை
தீபம் ஏற்றி ஆலய
வலம் வருவதால் வாஸ்து, புவிமகள் அருள் கிடைப்பதாக
தரிசித்த பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.
- புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதியிலிருந்து
செவலூர் செல்ல பஸ் வசதி உண்டு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.