உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாக உறுதியாக
தெரிய வந்தால், அதை தீர்க்க எளிய வழி உள்ளது.
உங்கள் வீட்டுத் தலைவாசல் நிலையின் நீளம், அகலத்தை அளந்து
கொள்ளுங்கள். அந்த அளவிற்கு அறுகம்புல் மாலையை
நிலையில் மாட்டுங்கள் அதே போல மகாலட்சுமி உங்கள் வீட்டில்
குடியிருக்க, நீள அளவுக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.
நிலையில் சூட்டப்பட்ட அறுகம்புல் மாலையும்,
மகாலட்சுமிக்காகச் சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும்
மறுநாள் காலை கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு
பாத்திரத்தில் போடுங்கள். அறுகம்புல் மாலை மற்றும்
வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை உங்கள் விட்டில்
உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்.
வீட்டின் வெளிப்புறத்திலும் தெளியுங்கள். பிறகு,
அறுகம்புல் மாலையையும், வெற்றிலை மாலையையும் ஒரு
வெள்ளைத்துணியில் முடித்து ஆற்றில் போட்டு விடுங்கள்.
வாஸ்து தோஷம் விலகிவிடும். வாஸ்து தோஷத்துக்கு
செவலூர் ஆலயத்தில் ஒரே ஒரு கல் வாங்கி மனை போட்டால்
போதும் என்கிறார்கள்.
வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு சொம்பில் நீர் ஊற்றி,
அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வாஸ்து
குறைபாடுகளை கலச அமைப்பு நீக்கி விடும். ஜாதகத்தில் குரு
3,6,8,12-ல் மறைந்திருந்தால் வளர்பிறை அல்லது தேய்பிறை பஞ்சமி
திதியில் நவகிரகக் குருவுக்கு பால், பன்னீர், அபிஷேகம்
செய்து, கஸ்தூரி பொட்டிட்டு மஞ்சள் பட்டுத்துணி
சாற்றி, தாமரை பூ மாலை போட்டு, நெய், தீபம் அர்ச்சனை
செய்ய வாஸ்து தோஷத்தால் தடைபட்ட தொழில்,
திருமணம் நடக்கும்.
Thursday, 22 October 2015
வாஸ்து தோஷம் போக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.