Thursday, 29 October 2015

அன்பு

அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட
அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த
உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே.
அன்பில் 12 வகைகள் உண்டு.
1.இரக்கம் - எளியவர் மேல் காட்டுகிற அன்பு.
2.கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள்
மீது காட்டப்படுகிற அன்பு.
3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு.
4.பந்தம் - உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு.
5.பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.
6.விசுவாசம் - வேலை செய்பவர் தன் முதலாளியிடம்
செலுத்தும் அன்பு.
7.பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு.
8.நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும்
அன்பு.
9.காதல் - கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு.
10.பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.
11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.
12.அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது
செலுத்தப்படுகிற அன்பு.
அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம்.
நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மை தரும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.