Saturday, 3 October 2015

வீட்டில் விளக்கேற்றி வழிபடும்போது

வீட்டில் விளக்கேற்றி வழிபடும்போது பஞ்சால்
திரியிடுவதே மிகவும் சிறப்பானதாகும்.
1. வாழைத் தண்டினை நூலாகத் திரித்து
ஏற்றினால் தெய்வ சம்பந்தமான குற்றங்கள்
நீங்குவதோடு செய்வினைக் கோளாறுகளும்
நிவர்த்தியாகும். மழலைச் செல்வம் ஏற்படும்.
குடும்பத்தில் எவரேனும் சாபமிட்டிருந்தால்
அது நீங்கும்.
2. தாமரைத் தண்டைத் திரிந்து ஏற்றினால்
முன்வினை, பாவம் நீங்கும். செல்வம் நிலைத்து
நிற்கும்.
3. வெள்ளெருக்கு பட்டையை திரியாக்கிப்
போட்டால் செல்வம் அதிகரிக்கும்.
4. புதுச் சிவப்பு சேலைத் துண்டினைத்
திரியாக்கி ஏற்றினால் திருமணத்தடை
விலகுவதுடன், புத்திரப்பேரும் கைகூடும்.
5. மஞ்சள் சேலைத் திரி என்றால் அம்பாள் அருள்
அதிகரிப்பதுடன் மனப்பிரமையும் நீங்கும்.
6. வெள்ளை எருக்கலை திரி என்றால்
பெருமளவில் செல்வம் தரும் பேய், பிசாசு
தொல்லை அகலும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.