Tuesday, 13 October 2015

நவராத்திரி கொலு

🙏🙏👌👌🙏🙏👌👌🙏🙏

நவராத்திரி கொலு வைக்கும் முறை
~~~~~~~~~~~~~~~~~~

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து
வைப்பதேயாகும்.
ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா.

இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.

~~~~~~~~~~~~~~~~~~

கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~

1முதலாம் படி :–

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்களின்
பொம்மைகள்.

2. இரண்டாம் படி:-

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :-

மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின்
பொம்மைகள்.                               

4. நாலாம்படி :-

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு  போன்றவற்றின்
பொம்மைகள்.

5. ஐந்தாம்படி :-

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள

6. ஆறாம்படி :-

ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

7. ஏழாம்படி :-

மனித நிலையிலிருந்து
உயர்நிலையை அடைந்த    சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

8. எட்டாம்படி :-

தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி :-

பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

நவராத்திரி வழிபாட்டு முறை.
~~~~~~~~~~~~~~~~~

1. முதலாம் நாள் :-

சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள்.
முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள்.
இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.
இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
மற்றும் இவளது கோபம் தவறு
செய்தவர்களை திருத்தி நல் வழிபடுத்தவே ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.

முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

2. இரண்டாம் நாள் :–

இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும்.
வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.
சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.
பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.
தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.
இவளிற்கு மங்கள மயநாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள்.
அதாவது சுந்தரர் விற்ற விறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும்.
குடும்பபாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தினை வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.

இரண்டாம் நாள் நைவேத்தியம் :-
தயிர்ச்சாதம்.

3. மூன்றாம் நாள் :-

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்தரி,
சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர்.
இவள் இந்திரனின் சக்தி ஆவாள்.
கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.
ஆயிரம் கண்ணுடைய வள். யானை வாகனம் கொண் டவள்.
விருத்திராசுரனை அழித்த வள்.
தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும்.
பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு
இவளின் அருட்பார்வை வேண்டும்.
மற்றும்
வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க,
பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே யாகும்.

இன்று மீனாட்சி அம்மன்
கல் யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.

மூன்றாம் நாள் நைவேத்தியம் :-
வெண் பொங்கல்.

4. நான்காம் நாள் :-

சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும்.
சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப் பவள்.
தீயவற்றை சம்ஹரிப்பவள்.
இவளின் வாகனம் கருடன்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமணகோலத்தில் காட்சியளிப்பார்கள்.

நான்காம் நாள் நைவேத்தியம் :-
எலுமிச்சை சாதம்.

5. ஐந்தாம் நாள் :-

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.
அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.
திரிசூலம், பிறைச்சந்திரன்,
பாம்பு தரித்து . .
இடப வாகனத்தில்
எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.
சர்வ மங்களம் தருபவள்.
தர்மத்தின் திருவுருவம்.
கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிப்பார்கள்.

ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.

6. ஆறாம் நாள் :-

இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான
முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
ஓங்கார சொரூபமானவள்.
சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
வீரத்தை தருபவள்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங்காரத்தில் அருள்புரிவார்கள்.

ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.

7. ஏழாம் நாள் :-

ஏழாம்நாள் அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டு ம். கையில் ஜெபமாலை, கோட ரி, கதை, அம்புவில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகிய வற்றைக் கொண்டிருப்பவள்.
விஷ்ணு பத்தினியாவாள்.
பவளம் போன்ற சிவ ந்த நிறத்தையுடையவள்.
தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னை யாகும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களிற்கு அருள் பாலிப்பார்கள்.

ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.

8. எட்டாம் நாள் :-

இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்கள்.

எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.

9. ஒன்பதாம் நாள் :-

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும்.
அன்ன வாகனத்தில் இருப்பவள்.
வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன் னையின் அருள் அவசியமாகும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அரு ளாட்சி புரிவார்கள்.

ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :-
அக்கர வடசல்.

🙏🙏👌👌🙏🙏👌👌🙏🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.