Thursday, 8 October 2015

கர்ம பலன்

🌹 கண்ணபிரான் ஒர் சமயம் துரியோதனன், தர்மர் இருவரையும் நல்லவன் ஒருவரையும், தீயவன் ஒருவரையும், அழைத்து வரச்சொன்னார். சில நாள் கழித்து அவர்கள் கிருஷ்ணரைச் சந்தித்தபோது துரியோதனன் கூறினான், “இவ்வுலகில் நல்லவன் ஒருவன்கூட அகப்படவில்லை, எல்லோரும் ஒருவகையில் தீயவரே!” என்றான், தருமர், “ஒரு தீயவர்கூட தெரியவில்லை, எல்லோரும் ஒரு வகையில் நல்லவரே!” எனக் கூறியதாக புராணம் தெரிவிக்கின்றது.
இதிலிருந்து தீய எண்ணம் கொண்ட துரியோதனனுக்கு, எல்லோரும் தீயவராகவும், நல்ல எண்ணம் கொண்ட தருமருக்கு, எல்லோரும் நல்லவராகவும் தெரிகின்றனர் என்றால் அது உண்மையில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருந்தும் தருமருக்கும், துரியோதனனுக்கும் எப்படி அவ்வாறு தோன்றியது என்றால் அது அவர்தம் மனநிலையைப் பெறுத்த எண்ணங்கள்.
உலகம் கண்ணாடி போன்றது. கண்ணாடி தன் முன்னே உள்ள உருவத்தைப் பிரதிபலிப்பது போல உங்கள் மனம் நல்ல எண்ணம் உடையவராக நீங்கள் இருந்தால் அதில் உலகில் நீங்கள் சந்திக்கும், மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாகவும் நன்மை செய்பவர்களாகவும் தெரிவர்!
உங்கள் மனம் தீய எண்ணங்கள் நிறைந்தவையாக இருந்தால் அதில் இவ்வுலகில் நீங்கள் சந்தித்த, சந்திக்கப்போகும் மனிதர்கள் எல்லாம் உங்களுக்கு சந்தோஷம் தந்து உங்கள் தீயசெயல்களுக்கு உதவி செய்யும் நல்லவர் (கொடியவர்) களாகவும், நன்மை(தீமை) செய்பவராகவும் தெரிவர்! அவையெல்லாம் சந்தோஷம் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் கர்மபலன். அதிலிருந்து விடுபட முயற்சியுங்கள்.🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.