Monday, 5 October 2015

நண்டு வருத்தம்

நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!
ராட்சத கடல் நண்டு ஒன்று கரையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அதன் அழகிய கால் தடத்தை அது ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. அதன் மகிழ்ச்சியை குலைக்கும் விதம், திடீரென தோன்றிய ஒரு பெரிய அலை, நண்டின் அந்த கால் தடத்தை அழித்துவிட்டது.
நண்டிற்கு, தாங்க முடியாத வருத்தம்.
அலையிடம் கேட்டது: “நான் உன்னை என் சிறந்த நண்பன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீ என்னடாவென்றால், இப்படி செய்துவிட்டாயே…?”
“ஒரு மீனவன், உன் கால்தடத்தை பின்பற்றி உன்னை பிடிக்க பின்னால் வந்துகொண்டிருக்கிறான். அவனிடமிருந்து உன்னைக் காக்கவே இவ்வாறு செய்தேன்!”
சில உறவுகள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அன்பையும் அக்கறையையும் நம் மீது கொண்டிருக்கும். அதை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒரு போதும் அவர்கள் நோக்கத்தை சந்தேகிக்காதீர்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.