Saturday, 3 October 2015

ஓம் நமசிவாய மந்திரம்

ஓம் நமசிவாய மந்திரம்
108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம்.
விரல்களால் என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம்
தரும் என்றால், சங்கு மாலைகளால் ஜபிப்பது
பத்து மடங்கு பலனையும், பவள மாலையால்
ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக
மாலையால் ஜபிப்பது ஆயிரம் மடங்கு
பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ
மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால்
ஜபிப்பது அனந்த மடங்கு பலனையும் அளிக்கும்.
கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால் மோட்சம்
கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு
விநாசனம், நடுவிரலால் தனம் கிடைக்கும்,
மோதிர விரலால் ஜபிப்பதால் சாந்தி கிட்டும்
சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.