Friday 16 October 2015

அனுமன் கடவுள்

எல்லா கடவுள்களையும் அழகான அணிகலன்களோடு சிங்காரித்து காட்டியவர்கள் அனுமனை மட்டும் இடுப்பு கச்சையோடு ஒரு கட்டுடல் உடம்பாக காட்டியது ஏனோ?அது என்ன குரங்குத்தலை.
குரங்குத்தலை மனித உடம்பு,சிங்கத்தலை மனித உடம்பு,மாட்டுத்தலை மனித உடம்பு,பன்றித்தலை மனித உடம்பு.என நிறைய தெய்வ வடிவங்களை நாம் பார்க்கிறோம் இவை ஒவ்வொன்றின் தாத்பரியமும் ஒவ்வொரு தத்துவங்களின் அடிப்படையில்தான் அமைக்கப்ட்டும் அதற்கு ஏற்றாற்போல் கதைகளும் புனையப்பட்டு , அன்றைக்கு வாழ்ந்த மக்களின் அறிவு நிலைகளுக்கு தகுந்தவாறு அந்த தத்துவங்களை விளக்கினார்கள்.கால ஓட்டத்தில் காரணங்களை விட்டு விட்டு காரியங்கள் மட்டும் நம் எடுத்து கொண்டதன் விளைவு இக்கதைகளை கொண்டாடுகிறோமே தவிர அக்கதை புனியப்பட்டுதற்கு உண்டான தத்துவங்களை விட்டுவிட்டோம்.
அனுமன் வாயு புத்திரன், நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்ல கூடியவர் ,உடல் வலிமை மிக்கவர்,சஞ்சீவம்லையையே அப்படியே பெயர்த்து கொண்டு வருபவர். ராமரும்,லஷுமனரும் மயக்கமுற்ற நிலையில் சஞ்சீவ மூலிகையை கொண்டு வந்தால் அவர்கள் எழுந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்ட பொழுது,சஞ்சீவமலையையே பெயர்த்து கொண்டு வந்தாராம்.ஏன் மலையை பெயர்த்த் கொண்டுவர வேண்டும் சஞ்சீவ மூலிகை செடியை மட்டும் பிடிங்கி வந்திருக்கலாமே?அனுமன் அங்கு சென்றவுடன் மூலிகை பெயர் மறந்து விட்டதாகவும் அதனால்தான் மலையையே பெயர்த்து கொண்டு வந்ததாகவும் கதை செல்லும் இத்தகைய வலிமையையும் சக்தியையும் பெற்ற அனுமனுக்கு அம்மூலிகை மரத்தை தேடுவதா கடினம்? இப்படி கேள்விகள் கேட்டால் அதற்க்கு ஒரு கதை என நம்மை கதை சொல்லியே வளர்த்து விட்டார்கள்.
மனித பிறவியான நம்முள் இரு பலங்கள் உண்டு, 1.மனம் ,2,உடல் இரு வலிமையையும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன.அனுமனில் தலை மன பலம், உடம்பு உடல்பலம் மனோபலம் எவ்வாறு இயங்குகின்றதோ அது போலவே உடல் பலம் இயங்கும்.இந்த மனம் ஒரு நிலையில் நில்லாமல் தாவிக்கொண்டே இருப்பதால் தான் மனதை குரங்குக்கு சம்பந்த படுத்தினர்.மனம்போல் உடலும் இயங்கி கொண்டே இருந்தால் மனம் உடல் இரண்டும் தன்னைத்தானே மரித்து கொள்ளும்.

அதனால்தான் நம்முன்னோர்கள் யோகக்கலையில் மனதை ஒரு நிலைக்கு கொண்டு வர தியானமும் .உடலை பலபடுத்த ஆசன்கங்களும் செய்து மன.உடல் பலம்களை பெருக்கி கொண்டனர்.
நாம் விலங்குகலிருந்து பரிணாமம் பெற்று வந்ததினால் பரிணாம வளர்ச்சிகளில் இன்னும் நம்முள் விலகா குணம் போராடுதல் இருக்கத்தான் செய்கிறது. போராடலுக்கு தேவை படுவது உடல் வலிமை ஆக உடல் வலிமையை மிருக குணங்களோடு ஒப்பிடலாம்.பரிணாம வளர்ச்சியின் உன்னதம் மனம். அருசக்தி நிறைந்த இடம் இந்த மனம்,உடலை இயக்கி செயலை தன எண்ணங்களால் சாதித்து கொள்கிறது. மனதின் செயல்பாடுகள்தான் வாழ்க்கையின் மாறுபாடுகள்,இன்பம்,துன்பம்,என்பன.மனத்தின் புரிதல்கள்
மனதின் வலிமையையும் உடல் வலிமையையும் ஒருங்கே இருப்பதுதான் உன்னதம்,மனம் குன்றி உடல் வலிமை பெற்றால் முரடனாகவும்,மனம் பலம் பெற்று உடல் வலிமை குன்றினால் கோழை,வீண் பேச்சு, செயல் படாதவராகவும் இருப்பர்.உடல் வலிமையினால் தான் அனுமன் சஞ்சீவ மலையை தூக்கி வந்தான், மனமும் செயல் பட்டு இருந்தால் மூலிகை செடியை மட்டும் அல்லவா கொண்டுவந்து இருப்பன்.மூலிகை பெயரை மறக்கடித்தது புத்தி குன்றியதுனால்தானே இன்றைக்கு மேம்பட்ட நிர்வாக திறன் (M.B.A)கல்விகளில் (work with effi ciency ) ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பதை விட எவ்வாறு செய்ய வேண்டும் என்ற திட்டமிட்ட செயலே போற்ற படுகின்றது.அன்றைக்கே நம் முன்னோர்கள் சொன்ன இந்த அனுமன் தத்துவம் தான் இது.
மனதின் அரு வலிமையையும் உடலின் திண்மையான வலிமையையும் தெய்வ நிலைகளோடு சம்பந்த படுத்தி தெய்வத்திடம் சரணடைகிற போது நம் பிறப்பின் பிறதி பலன் கிடைக்கும்.
திஎவனிலைக்கு ராமனை ஒப்பிட்டு ஒரு மனிதன் எந்நிலையில் வாழவேண்டும் என்ற தத்துவங்களை ராமனுக்குள் புகுத்தி அந்த நிலையை நோக்கி மனதையும் உடலையும் திருப்பி அல்லது அர்பணித்து வாழும்போது உயர்ந்த நிலையை அடைவோம் என்பதே அனுமனின் தத்துவம்.
மேலும், இந்த அனுமன் என்பதை நம் ஆதார சக்கரங்களில் மூலாதாரத்தில் இருக்கிற குண்டலினிக்கு ஒப்பிட்டு அங்கு இருக்கிற வீரியத்தை மேல் எழுப்பி கிடைக்கிற சக்திகளுக்குள் தெய்வ நிலையான ராமனிடம் சரணடைதல் அனுமன்.
அறிவியலில் மூலை பலமும்,தசை வலிமையையும் அனுமன் மூலை வலிமைபெருகிற பொழுது உடலும் வலிமை பெரும் என்கின்ற தத்துவம்.இந்த இரு வலிமையையும் தெய்வ நிலைகளில் சரணடைய செய்து சீர் பெற வாழ்தலே அனுமன்,
அனுமன் கோவிலில் வழங்கும் பிரசாதங்கள் மூளை துசுக்களை பலப்படுத்தும் வெண்ணெய்,தயிர், உடல் திசுக்களை பலப்படுத்தும் உளுந்து எண்ணெய் கலந்த வடை, துளசி,வயிற்றை சுத்தம் செய்து உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் ,வெத்தலை ஜீரண சக்தியை தூண்டி செரிமானத்தை பலப்படுத்தும் நல்ல செரிமானம் ஏற்பட புத்தி பலம் பெரும். இவைதானே.வலிமையை குறிக்கிற தன்மைகளே தனனகத்தே கொண்டிருக்கும் அனுமன் தத்துவத்தை உருவகமாக சொல்லத்தான் அனுமனை தசை வலிவுடன் வெறும் உடம்பை இடுப்பு கச்சை , கட்டுடல் உடன் காட்டி இருப்பது.
ஜோதிடத்தில் தலை கேதுவாகவும்,உடம்பு ராகுவாகவும் சொல்லலாம், அதாவது தலை மூளை(கேது) பலத்தையும்,உடம்பு(ராகு)யும் குறிக்கும்.ஆதலால்தான் சனிதிசை அல்லது கோட்சாரத்தில் சனி 8,71/2 சனி காலங்களிலும் பயணிக்கிற பொழுது மனதும் உடம்பும் பலம் குன்றிய காலங்களில் அனுமனை பரிகாரமாக வழி பட சொல்கிறார்கள்.
மேலும் ராகு கேதுவின் வலுவுக்கும் அனுமனை வழிபடுதல் பலமே.
ஆதலால்தான் மனம் உடல் வலிமை ஏற்பாடு அனுமன் உருவத்தை அறிமுக படுத்தி கோவில் என்ற இடத்திற்கு கூட்டமாக வாழ்ந்த மக்களுக்கு பயன் ஏற்பாடு அவர்களை வரவழைத்து மேற் கூறிய பொருள்களை வழங்கி மக்களின் மனம் மற்றுமுட்ல் வலிமையை பெருக்கி தன்னம்பிக்கையையும் ஊட்டி வாழ்க்கையை திறம்பட வாழ வைத்தனர்.
அனுமனை வழிபடுவோம் தெய்வ நிலையை சரணடைவோம். பிறவி பலன் பெறுவோம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.