Thursday, 8 October 2015

கதை

ஒரு சின்ன பள்ளத்தில். 4 தவளைகள் தவறி விழுந்து விட்டது. அதில் இருந்து வெளியில் வர அந்த 4 தவளைகளும் முயற்ச்சி செய்த பொழுது. பள்ளத்துக்கு வெளியில் இருந்த மற்ற தவளைகள். உங்களால் இந்த பள்ளத்தில் இருந்து வெளியே வருவது கடினம். இது ரொம்ப பெரிய பள்ளமாக இருக்கு. நீங்கள் நால்வரும் இந்த பள்ளத்திலேயே சமாதி ஆக போகிறீர்கள் என்று பேசியது. அதில் 3 தவளைகள். தன்னம்பிக்கையை இழந்து. சோர்ந்து, துவண்டு போய் அந்த பள்ளத்திலேயே செத்து விட்டது. ஒரே ஒரு தவளை மட்டும். மிக கடுமையாக முயற்ச்சி செய்து. வெற்றிகரமாக வெளியே வந்து. தவளை கூட்டத்தை பார்த்து. நண்பர்களே. நீங்கள் எனக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக பேசியதால் தான் நான் உயிர் பிழைத்தேன். இல்லையென்றால். நானும் இறந்து இருப்பேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்றது. அந்த தவளைக்கு காது கேட்காது. தன்னை discourage செய்வதை. encourage செய்வதாக அது மனதினில் நினைத்து கொண்டது. அதனால். அது உயிர் பிழைத்தது.
நீதி- இந்த உலகினில் நிறைய பேருக்கு பழி சொல்ல தான் தெரியும். வழி சொல்ல தெரியாது. பிறர் உங்களை இகழும் பொழுது நீங்கள் செவிடாகி விடுங்கள். ஏற்க்கனவே நான் சொன்னது தான். கடைக்கு போகும் பொழுது. எவ்வாறு உங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் உங்கள் கைகள் வங்குமோ அதே போல். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை மட்டும் உங்கள் காதுகள் வாங்கட்டும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.