Friday, 30 October 2015

அதிசயங்கள்

அதிசயங்கள்
1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ்
கோபுரத்தின் நடுவிலிருந்து மேல்
கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால்,
அது சிவலிங்கப் பெருமான் வழியாகச்
செல்லும். அது போல் வடக்கு - தெற்கு
கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப்
பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை
இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு
அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை
வெளிப்படுத்துகிறது.
2.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு
நாளுக்கு மூன்று விதமான ஆடைகள்
அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி
தருகிறாள்.காலையில் வெண்ணிற
ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி
வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி
தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில்
துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள்.
இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள்
நினைத்தது நிறைவேறும்.
3. திருவண்ணாமலையிலிருந்து 16
கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம்.
இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில்
அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்
கு தினமும் வெந்நீரில் அபிஷேகம்
செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி
நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள்.
சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள்
உண்டு.
4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப்
பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி,
மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால்
அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய
தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில்
நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார்.
இவர் கையில் ரேகையும், காலில் பச்சை
நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று
தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது
முதியவர்போலவும், அருகிலிருந்து
பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி
தருகிறார்.
6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்தில
ுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர்
ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு
தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க
பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால்,
அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு
நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற
நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான்
தெரியும்.
7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி
கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன்
போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு
கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார்.
மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால்
இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.
8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது
திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன்
கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை
மூலிகையால் ஆனவர்.
9. தஞ்சை அருகே தென்குடித்
திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய
கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக்
கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து
கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24
நிமிடங்களுக்கு ஒருமுறை மூல
லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம்
செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில்
உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான்
காணிக்கையாகப் போடுவோம். ஆனால்,
இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில்
காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப்
போடுகின்றனர்.
10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன்
சிலை மலேசியா நாட்டின் தலைநகரான
கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட
சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர்
சேர்ந்துதான் இச்சிலையை
உருவாக்கினார்கள்.
11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார்
சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில்
தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம்
முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம்
சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற
ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம்
முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம்
சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில்
கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும்
காணலாம்.
12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை
ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே
திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு
மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில்
மூடியிருக்கும்.
13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து
கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி
ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள
அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது
நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம்
பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம்
வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய
அரசமரம் தலவிருட்சமாக பெருமை
சேர்க்கிறது.
14. திவ்யதேசமான திருவட்டாறில்
சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று
வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல்
வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது
வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது
வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள
கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை
அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.
இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால்
இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.
15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்
திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு
வலப்புறம் குழந்தையை (முருகனை)
இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி
அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி
எங்கும் காணக் கிடைக்காதது.
16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம்
வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள்
தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில்
உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா
உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி,
பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே
பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு
பாக் என்று பெயர்.
17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான்
வடைமாலை சாற்றுவார்கள். ஆனால்
திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர
வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரரு
க்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும்
நடைபெறுகிறது. சில சமயம் லட்சம்
வடைகளைக் கொண்ட மாலைகள் கூட
சாற்றப்படுவது உண்டு.
18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில்
நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில்
உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள
கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில்
இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக
எரிகிறது. இவ்வாறு விளக்கு
ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி,
மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம்.
இளநீர் விளக்கை அது இருக்கும்
இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும்
அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.
19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல்
திருக்கோயில் என்ற சிறப்பை
புதுக்கோட்டைக்க
ு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம்
பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன்
இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர்.
இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக
யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு
திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு
திருக்கரத்தில் சின்முத்திரையுட
னும் இருந்து அருள்பாலிக்கிறா
ர்.
20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள
விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின்
கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார்
லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில்
இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த
லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால்,
காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம்.
இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம்
செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி
தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர
எல்லையிலும் உள்ளது.
21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம்,
துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள்.
ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக்
கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில்
உள்ள திருவேங்கடநாதப் பெருமாள்
கோயிலில் மட்டும்தான்.
22. நெல்லையிலிருந்த
ு திருச்செந்தூர் செல்லும் சாலையில்,
பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு
பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு
தேங்காய் விடலை போட்டால், சிரட்டை
(கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய்
தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார்
சிரட்டைப் பிள்ளையார் என்றே
அழைக்கப்படுகிறார்.

சிதம்பர ரகசியம்

🙏 சிதம்பர ரகசியம்  🙏

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..

Centre Point of World’s Magnetic Equator.

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?

அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..?
புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?
திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..

வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும்.

அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது.
( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ),
இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள்,
9 வகையான சக்தியை குறிக்கின்றது.

அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள்,
6 சாஸ்திரங்களையும்,
அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்,
18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

குழந்தை வளர்ப்பு ஆலோசனை

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்
- ஹஸன் பஷரி, உளவியல் ஆலோசகர்

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பாட்டுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து  அவர்களை தொட்டு எழுப்பாட்டுங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுருசுருப்புடனும் எழும்புவதற்கு துணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் அவர்களை அன்பாக அணைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடாவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமிடையில் ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செமிபாடடைவதற்கும் காரணமாய் அமைந்து விடும்.

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8. உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துறைங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள். அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது (பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.

இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பொழுது கண்டிப்பாக அனைத்து வியாதிகளியிலிருந்தும் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொண்டு ஆரோக்யமாக வாழ முடியும்.

கழிவின் தேக்கம் வியாதி,
கழிவின் வெளியேற்றம் நலம்.

Thursday, 29 October 2015

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் !!!
” நாளெல்லாம் திருநாளாகும்; நடையெல்லாம் நாட்டியமாகும்... “ எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும். திருநாளில் தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கு என்றுமே திருவிழாதான். இருப்பினும் சிவாலயங்களில் மிகமுக்கியமானது ஆருத்ரா தரிசனம்.
மார்கழி திருவாதிரையன்றும், ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரங்களிலும் நடராஜப் பெருமானை வணங்குவதற்குரிய பிரார்த்தனை சித்சபேச தசகம் என்ற நூலில் இருந்து தரப்பட்டுள்ளது. பக்தியோடு இதை பாராயணம் செய்பவர்கள் எல்லாவித நன்மைகளையும், யோகபலனும் பெறுவார்கள்.
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார்.
நட்சத்திரங்களில் "திரு என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. இதில் திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். மார்கழி மாத திருவாதிரை நாளில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அதிகாலையில் சிவாலயம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.:
"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"
திருநாவுக்கரசரும் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிறப்பினையும் அழகையும் பின்வருமாறு பாடியுள்ளார்.
"முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்"