ஒரு மனிதன் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்க்க வருவான்.ஒவ்வொரு வருடமும் துர்கா பூஜை சமயம் நூற்றுக்கணக்கான ஆடுகளை பலிகொடுப்பான்.
அவன் திடீரென பலிகொடுப்பதை நிறுத்தி விட்டான்.பலமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் நிறுத்தச் சொன்னபோது அவன் கேட்கவில்லை.
"இப்போது ஏன் நிறுத்தி விட்டாய்?" என்று கேட்ட பொழுது:
"இதுவரை உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முடியவில்லை.இப்பொழுது என்னுடைய எல்லா பற்களும் விழுந்து விட்டதால் மாமிசம் சாப்பிட முடியாது.அதனால்தான் நான் ஆடுகளை வெட்டுவதில்லை.இப்பொழுது எனக்கு திருப்தியாக இருக்கிறது."என்று கூறினான்.
திருப்தி என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது.அதை பலவகைகளில் உபயோகித்து அதன் உருவை மாற்றி விட்டார்கள்.
மனிதன் எந்த உதவியும் இல்லாமல் உள்ளபோது,திருப்தி அடைகிறான்.ஆனால் அந்த திருப்தி உண்மையானதல்ல.
எல்லா முயற்சிகளும் பலன் கொடுக்காவிட்டால் அது பரவாயில்லை என்று சொல்வது விரக்தியான நிலையைக் காட்டுகிறது.
நாம் மனப்பூர்வமாக எதைக் கொடுக்கிறோமோ அப்பொழுதுதான் சரியான திருப்தி ஏற்படும்.
யாராவது ஒருவன் திருப்தியான மனிதரைப் பார்த்து கேவலமாகப் பேசினாலும் அவன் சொல்வது சரிதான் என்று அவர் ஏற்றுக்கொண்டு நன்றி கூறும் மனப்பாங்கே திருப்தியுடன் இருப்பதாகும்.
--ஓஷோ-- —
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.