Wednesday, 24 February 2016

ஏற்புத்தன்மை

ஏற்புத்தன்மை - "நமக்கு நாமே வெளிப்படையான நண்பனாகுதல் " - ஒரு பகிர்வு

இந்த பதிவில் ஆரம்ப வரிகள் பல முறை பேசி இருந்தாலும் போக போக ஆழமான புரிதல் வரும் என நினைக்கிறேன்,

நம்மை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் நமக்குள் அக உயர்வு  வரும்

பல சமயங்களில் நம்மையும்- நம் குணங்களையும் வேறு பட்டதாக நாமே கருதிக்கொள்ளும் நிலை இருக்கும் இதே தன்மை மற்றவர்களிடம் அப்படி பட்டவன் இல்லை என்று நிரூபிக்க எல்லா முயற்சிகளும் மனம் செய்து கொண்டே இருக்கிறது.

நான் மிக பொறுமை என்று காட்டி கொள்வதற்காக  வரக் கூடிய எரிச்சல் கோபம் அனைத்துயும்  அடக்கி வைத்து உள்ளே ஒரு  "கிங் காங்" trailer போல படம் ஒட்டி கொள்ளும் தன்மை.

பிறர் வளர்ச்சியை (தொழில் முதல் ஆன்மீகம் வரை) வெளி  அளவில் பாராட்டுவதை போல நடந்து கொண்டு, உள்ளே அவ வளர்ந்துட்டே போரான் என்ற அங்களாப்பு தன்மை,

காரணம் நான் ஒரு நிலையில் உள்ளேன்(நல்லவன் - ஆசிரியன்) என்று கட்டத்தில் இருக்கிறேன் என்று வளர்ந்த பின் இந்த மாறி தன்மையை பொருட்படுத்தவும் ஏற்றுக்கொள்ளும் தன்மை சிறிதும் வருவதில்லை - அப்படி ஏற்றுக்கொண்டால் நம் மீது உள்ள அபிப்ராயம் காணாமல் போய் விடும் என்ற பயம் ஒழிந்து ஆணவ நடனம் ஆடும்.

சற்று விழிப்பு இல்லாமல் எந்த நிலை வந்தாலும்,
எந்த நிலையில் இருந்தாலும் எல்லாமே தொத்திக்கொள்ளும் என்பதை உணர்வதற்கு இடம் கொடுப்பதில்லை , நான் வளர்ந்து விட்டேன், புரிந்து விட்டேன்  என்று எல்லை கட்டி கொள்வது, ஆனால் இது நமக்கு நம் அக வளர்ச்சிக்கு  தடை என்று அரிவதில்லை.

இன்னொரு காரணம் நாம் கோபம் முதல் காமம் வரை அனைத்திலும் தத்துவம் பேசி பெயர் எடுத்திருக்கலாம் ஆனால்  அது அவரவர்க்கு உள்ளே நிகழும் போது ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இப்பொழுது நம்மை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வது

ஒரு சில உதாரணம் பின் வருமாறு

1.ஒரு விவசாயி தன் வேலையை நேசித்து காட்டில் இறங்கி இந்த மொட்டை வெயிலில் வேலை செய்கிறார்கள் காலை முதல் மாலை வரையிலும் அவர்களுக்கு அந்த வெயில் ஒரு பெரிய பொருட்டாக தெரிவதில்லை, அந்த வெயில் கடந்த ஒரு சக்தி அந்த நேசிப்பில் மலர்கின்றது அதனால் வெப்பம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை .

2.ஒரு குப்பை வலிப்பவர்கள் அந்த குப்பையை வேறு படுத்தி பார்ப்பதில்லை அதை ஒரு வகையில் முழுமையாக நேசிக்கிறார்கள் அதனால் அந்த நாற்றத்தை கடந்த ஒரு சக்தி இயல்பாக மலர்ந்து விடுகிறது பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.

3. ஒரு டிச்சு வலிப்பவர் அந்த டிச்சுக்குள் இறங்கி வலிப்பதை நான் பார்த்திருக்கிரேன் அதில் இருக்கும் நோய் கிருமிகள் மற்றும் நாற்றம் அவர்களை தொற்றி கொள்வதில்லை.

மேலே குறிப்பிட்டு உள்ள மூன்று விதமான உதாரணத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, அந்த பணிகளை செய்யும் பொழுது  மனதளவில் அந்த பணியை அவர்கள் வேறுபடுத்தி பார்ப்பதில்லை அதோடு அதுவாக இணைந்து விடுகிறார்கள், அதனால் அதில் இருக்கும் பாதிப்புகள் அவர்களை தொற்றி கொள்வதில்லை அதை கடந்து இயல்பான நிலையில் உள்ளனர். இயற்கையோடு கிடைத்த வாய்ப்பில் இணைகின்றனர்,

ஆனால் இதை சாதாரணமாக நாம் இந்த வேலைகளை நம் விட்டு அருகில் சுத்தம் செய்யலாம் எனறு நினைக்கும்  முன் - அய்யோ இந்த நோய் தோற்றி விடுமோ, வெய்யில் சுட்டு எரித்து விடுமோ, அய்யோ நாற்றம் என்று 100 கற்பனைகள் முன் கூட்டியே மனதளவில் முரண்பட்டு நினைத்து கொண்டு  செய்வதால், அங்கு ஏற்புத்தன்மை மறைந்து அதில் ஏற்படும் கற்பனையின் தன்மையில் வரும்  நோய் பாதிப்பு ஏற்படும் நிலை வருகின்றது.

இங்கு நாம் matter கு வருவோம்

இது போல நம் மனதளவில் தோன்றும் குணங்களை முரண்படுத்தி பார்க்காமல், எந்த குணமாக இருந்தாலும் அதை குற்ற உணர்வு இல்லாமல், நேசிக்க கற்று கொண்டால் தான் நாம்  கொஞ்சம் கொஞ்சமாக அதை கடந்து செல்ல முடியும்.

நம்முள் தோன்றும் கோபம், காமம் , விருப்பு , வெறுப்பு , ஆசைகள் , பொறாமை , தட்பெருமை , கவலைகள், போட்டி, உயர்வு தாழ்வுகள்,
ரசிப்புத்தன்மை , சிரிப்பு,வாழ்த்து ,மன்னிப்பு ,ஈகை, நடனம் , அழுகை என நமக்குள் தோன்றும் குணங்களை அப்படியே ஆம் எனக்குள் இந்த குணங்கள் உள்ளது என்பதை உணர்ந்து  அதை குற்ற உணர்வு இன்றி ஏற்றுக்கொள்வது.

இந்த புரிதல்  எப்பொழுது வரும் என்றால் நாம் உண்மையில் நமக்குள்  மாற்றம் வேண்டும் என்ற தேடுதல் வேண்டும்.

ஒவ்வொரு நாள் ஆரம்பம் முதல் இறுதி வரை  நமக்குள் தோன்றும் குணங்களை முடிந்த வரை முழுமையாக கவனித்து  நம் குணங்களுடன் நட்புறவு ஏற்படுத்திக்கொள்ளுதல்,

இந்த முழுமை என்பது அந்த குணங்கள் தோன்ற காரணம், சூழ்நிலை, விளைவு அதன் மூலம் நமக்கு ஏற்பட்ட உள் உணர்வு என்ன என்பதை ஆழமாக அந்த குணத்தை( skip அல்லது தப்பித்து கொள்ளும் தன்மை இல்லாமல் ) பற்றிய தெளிவை அதன் வேறுக்கு சென்று  கண்டறிதல்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் குணங்களுக்கு உள்ளே ஆழமாக ஒரு சிறு சுற்றுலா சென்று வருவதை உணர வாய்ப்பு உள்ளது.

இதற்கு பின் வரும் தெளிவில் நாம் ஒவ்வொரு குணங்களையும் கடந்து செல்வதை உங்களுக்கு உள்ளே நீங்கள் உணரலாம், நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

இது நம் குணங்களை கடந்த நிலை, என்ன என்பதை சிறுக சிறுக ஒரு புள்ளி அளவில் உணர்த்துகின்றது.

இன்னும் ஆழமாகவும் செல்ல ஒரு உத்வேகம் நிகழுகின்றன.

இந்த உணர்வின்  வெளிப்பாடு நாம் ஒவ்வொரு செயலையும் ரசிக்க செய்கின்றது, நடப்பது முதல் தூங்கும் வரை ஒரு ஆனந்தம் வருகின்றது விழிப்புடன் நம்மை பார்க்கும் இடங்களில் மட்டும்.

முதலில் நம் குணங்களுடன் முழுமையான ஏற்புத்தன்மை, நட்புறவு, நேசிப்பு, ரசிப்புத்தன்மை என எந்த வார்ததை
கோணங்களில் வேண்டுமானலும் எடுத்து கொள்ளலாம், மொத்தத்தில் நம்மை நம் குணங்களை வேறுபடுத்தி பார்க்காமல்  சந்தோஷமாக ஒரு வெளிப்படையான நட்புடன்  எடுத்துகொள்ளும் தன்மை வேண்டும்.

இதில் மாற்றுக் கருத்து இருந்தால் குறிப்பிடலாம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.