பணக்காரங்க மேலும் பணக்காரங்க ஆகறாங்க
ஏழைங்க மேலும் ஏழைங்களா ஆகறாங்க...
ஏ இந்த முரண்பாடு என்று ஒரு பள்ளி மாணவர் கவலையா கேட்டார்.
" இது முரண்பாடு அல்ல. இதுதான் நம்மை போன்ற வளரும் நாடுகளின் அடிப்படை பொருளாதார சமன்பாடு என்றேன்"
புரியவில்லை என்றார்.
உதாரணமாக ஒரு வளரும் நாடு. அந்த நாட்டில் 10 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அந்த நாட்டில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 3000 ம் பேரிடம் மட்டுமே அந்த நாட்டில் 8000 ஏக்கர் நிலம் உள்ளது. இது பாரம்பரியமாக வந்ததாக இருக்கலாம் அல்லது கைப்பற்றப்பட்டதாக இருக்கலாம். மீதமுள்ள 7 ஆயிரம் பேர் வெறும் 2000 ஏக்கர் நிலங்களில் மட்டுமே வாழ்கிறார்கள்.
ம்...
இந்த 3000 பேரிடம் 8000 ம் ஏக்கர் நிலம் உள்ளதால் அவர்கள் மீதமுள்ள 7 ஆயிரம் பேரைவிட பெரிய பணக்காரர்கள்தானே..
ஆமாம்..
சரி, ஆக 10 ஆயிரம் பேருக்கும் நல்ல தண்ணீர் வேண்டும், நல்ல சாலை வேண்டும், நல்ல உணவு பொருட்கள் வேண்டும். நல்ல உடை, வாகனம் வேண்டும் அல்லவா ?
ஆமாம்...
இவற்றை உற்பத்தி செய்ய தொழில் தொடங்க வேண்டும்.
ஆமாம்...
தொழில் தொடங்க பணம் வேண்டும்.
கரெக்ட்.
இப்போ அந்த நாட்டில் யாரிடம் பணம் உள்ளது ?
அந்த 3000 பேரிடம்.
குட்.
அப்போ அவர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்குகிறார்கள்.
சரி..
தொழிற்சாலை தொடங்கினால் மட்டுமே போதுமா ? அதில் உழைக்க ஆள் வேண்டுமே ?
கரெக்ட்..
அப்போ மீதமுள்ள 7 ஆயிரம் பேரையே வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
ஆகா நல்ல விஷயம்தானே ..அத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதே...
உடனே முடிவுக்கு வராதே...இதையும் கேள். இப்போ அந்த நிறுவனங்களில் பணி புரியும் 7000 பேருக்கும் மாசம் ஒரு ஆளுக்கு 1000 ரூபாய் சம்பளம்.
சூப்பர் அண்ணே...நல்ல சம்பளம்தான்..
ஆமாம் நல்ல ..சம்பளம்தான். இப்போ அந்த நிறுவனங்கள்ல உற்பத்தி செய்யற நல்ல தண்ணீர், உடைகள், உணவு பொருட்களை எல்லாம் யார் வாங்குவாங்க ?
ம்ம்..ம்ம்ம்ம்...அந்த நாட்டுல உள்ள பத்தாயிரம் பேரும்தான்.
எக்சல்லண்ட்... சரி பத்தாயிரம் பேர்ல 3000 பேர் முதலாளிகள், பணக்காரர்கள். மீதமுள்ள 7000 பேர் தொழிலாளிகள் அதாவது 3000 பேரைவிட ஏழைகள்.
கரெக்ட்...
இப்போ இந்த 7000 பேர் அந்த பொருட்களை வாங்கணும்னா பணம் செலவு செய்யனுமா ?
ஆமா..இதென்ன கேள்வி...
அவங்க எந்த பணத்துல இருந்து செலவு செய்வாங்க....
என்னண்ணே சின்ன புள்ளதனமா கேள்வி கேட்டுட்டு....அதுதான் சம்பளமா வாங்கறாங்களே...
வெரி குட். அப்போ அவங்க வாங்கற ஆயிரம் ரூபாய் சம்பளத்துல இருந்து மாசம்தோறும் சுமார் 750 ரூபாய் செலவு செஞ்சு அந்த பொருட்களை, வசதிகளை வாங்கறாங்க இல்லையா...
ஆமாம்....
அப்படியானா 7000 பேரோட 750 ரூபாய் எங்க போகுது..?
7000 இண்டூ 750... 52 லட்சத்து 50 ஆயிரம்னே......அது அந்த நிறுவனங்களுக்குத்தான் போய் சேருது...
அந்த நிறுவனங்களோட முதலாளிகள் யார் ?
அந்த 3000 பேர். ..
எக்சல்லண்ட்...
இப்ப யார் பணக்காரர்களாவே இருக்காங்க ?
அந்த 3000 பேர்.
யார் எழைகளாவே இருக்காங்க
அந்த 7000 பேர்....
இப்போ புரியுதா ..நீ கேட்ட கேள்விக்கு பதில் ?
சரி..இதை சரி செய்ய என்ன செய்யணும் ?
என்ன செய்யணும் அந்த 3000 பேரிடம் மட்டுமே உள்ள சொத்துக்களை எல்லாம் அரசு எடுத்துக்கிட்டு 10000 பேருக்கும் சமமா நல்லது செய்யணும்...
அது நடக்குமாண்ணா....
இதை சொன்னா கம்யுனிஸ்ட்னு சொல்லுவாங்க. ஆனா அது இல்ல. எந்த சித்தாந்தமும் சாராம சாதரணமா சிந்திச்சாலே இந்த உண்மை புரியும். பொருளாதார நிபுணர்களே சொல்ற தீர்வு இதுதான்.
சரிண்ணே...அந்த 3000 பேர் மட்டுமே எப்படின்னே பணக்காரங்களாவே இருக்காங்க ? யாரும் கேட்க மாட்டாங்களா ?
3000 பேர் பணக்காரங்க, 7000 பேர் ஏழை..இது கடவுள் கிருபை, விதின்னு சொல்லிட்டா ?
ஆமா..நம்ம பாட்டுக்கு நம்ம வேலைய பார்க்க போயிடுவோம்...
இப்படித்தான்யா இத்தனை 100 ஆண்டுகளா ஓடுது வாழ்க்கை..
படித்ததும் மனதில் பதிந்ததும்...
உங்கள் பார்வைக்கு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.