Friday, 26 February 2016

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்
நாள்:− 09/03/16
கிரகண நேரம்:− சூரிய உதய நேரத்திற்கு முன்பிலிருந்து
காலை 6.44 வரை
சூரிய உதய நேரம்:− காலை 6.30
சூரிய கிரஹணம் சூரிய உதயத்திற்கு முன்பே ஏற்படுவதால் 08/03/2016 அன்று (மாலை 6.22) சூரிய அஸ்மனத்திற்கு முன்பே இரவு உணவு உண்ணவேண்டும் பிறகு மறுநாள் காலை 7 மணிக்கு மேல் வீட்டை ஜலத்தால் (தண்ணீர்) சுத்தப்படுத்தி ஸ்நானம் செய்து அவரவர் சம்பிரதாயப்படி பூஜை மற்றும் தர்ப்பணம் செய்யலாம்.
கர்ப்பிணி பெண்கள் காலை 6 மணிமுதல் 7 மணிவரை கையில்
எந்தவிதமான சேஷ்டைகளும் செய்யக்கூடாது.
புதன் கிழமையில் பிறந்தவர்கள் மற்றும் புனர்பூசம், விசாகம், சதயம், பூரட்டாதி & உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்துக்கொள்ள வேண்டும்.
கிரஹண தோஷ மந்திரம்;
(சாந்தி மந்திரம்)
இந்த்ரோநல தண்ட தரச்சகால பாஷாயுதோ
வாயு தனேஷ ருத்ரஹ (குபேர ஈஷஹ)
மஜ்ஜன்ம ருக்ஷே மம ராஷி ஸம்ஸ்தாஹ
குர்வந்து சந்திர கிரஹ தோஷம் சாந்திம்.
இந்த மந்திரத்தை செப்புதகடு அல்லது பேப்பரில் எழுதி கையில் கட்டிக்கொண்டு குளிக்க வேண்டும்) ஸ்நானம் செய்ய வேண்டும்.
காலை 7 மணிக்கு மேல் அமாவாசை (திதி, திவசம், சிரார்த்தம், ஆண்டு) தர்ப்பணம் தாராளமாக கொடுக்கலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.