Saturday, 13 February 2016

சிரிக்க மற்றும் ஆழ்ந்து உணர்ந்து படிக்க வேண்டிய மற்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை

<3 ஓஷோவின் நகைச்சுவை  ஒவ்வொன்றும் ஆழமாக

சிரிக்க  மற்றும் ஆழ்ந்து உணர்ந்து படிக்க வேண்டிய

  மற்றும்  ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை  <3

வாழ்க்கை மிகவும் வேடிக்கையானது. உன்னைச் சுற்றிலும் நடக்கும் வாழ்வின் வேடிக்கையான பக்கத்தைப் பார்க்கக் கற்றுக்கொள். நடக்கும் ஒவ்வொன்றுக்கும் அதற்கேயான வேடிக்கையான பக்கம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்க உனக்கு கொஞ்சம் நகைச்சுவையுணர்வு வேண்டும், அவ்வளவுதான். என்கிறார் ஓஷோ.

*****

இரண்டுபேர் சேர்ந்து ஒரு தொழில் செய்து வந்தார்கள்.

முதல் நபர் இரவில் ஒரு ஊருக்குள் சென்று “தாரை“ ஜன்னல் மற்றும் கதவுகளின் மேல்  பூசிவிட்டு வந்து விடுவான்.

இரண்டு, மூன்று நாட்களுக்குப்பின் இரண்டாவது நபர் அந்த “தாரை“ சுத்தம் செய்து கொடுப்பவனாக அதே ஊருக்குள் வருவான்.

கேட்பவர்களுக்கு சுத்தம் செய்து கொடுத்து பணம் பெற்றுக்கொள்வான். அதேசமயம் முதலாமவன் வேறொரு ஊரில் தார் பூசிக்கொண்டிருப்பான்.

இந்தவிதத்தில் அவர்கள் நன்கு பணம் சம்பாதித்தார்கள்.

சிறந்த வேலை, முதலீடு இல்லை.

ஒருவன் ஐன்னல்களை கெடுத்துக் கொண்டே போகவேண்டியது, மற்றவன் அவைகளை சுத்தம் செய்து தர வேண்டியது.

*****

இதைத்தான் காலங்காலமாக உனது பூசாரிகள், உனது சாமியார்கள், உனது அரசியல்வாதிகள், உனது போலிஸ் எல்லாம் செய்துவருகிறது. அவர்கள் உன்னை அழித்துவிட்டு பிறகு உதவக் காத்திருப்பார்கள். அவர்கள் முதலில் உன்னை புதைகுழிக்குள் தள்ளிவிட்டு, பிறகு புனித காப்பர்களாக உன்னைக் காப்பாற்ற காத்திருப்பார்கள். முதலில் உன்னை புதைகுழிக்குள் தள்ளியது யார்.

ஆனால் உன்னை புதைகுழிக்குள் தள்ளாவிட்டால் அவர்கள் எப்படி காப்பாற்றும் புனிதர்களாக முடியும். ஆகவே அவர்கள் புனிதர்களாக காட்டிக்கொள்ள உன்னை முதலில் புதைகுழிக்குள் தள்ளியே ஆகவேண்டும்.

அப்போதுதான் அவர்கள் உன்னைக் காப்பாற்றமுடியும்.

அவர்களது பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெறும், மேலும் அவர்களது பெருமை பல நூற்றாண்டுகளுக்கு பேசப்படும்.                                                                                                              - ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.