🎁 சுவாமி விவேகானந்தர் 🎁
🌿கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது.
கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.
" வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது நீங்கள் அனுமதித்தால் தவிர "
🌿 நமக்கு நாமே செய்து கொள்கின்ற துன்பத்தை தவிர வேறு எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.
🌿நாம் செய்யும் செயல் எதுவாயினும் நமது முழு மனத்தையும் அதில் செலுத்த வேண்டும்.
🌿 இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கி கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
🌿உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத் தரும்.
🌿நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
🌿 சரியான உற்சாகத்தோடு வேலை செய்ய ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.
🌿 இதயம் சொல்வதையை செய். வெற்றியோ, தோல்வியை அதை தாங்கும் வலிமை அதற்கு மட்டுமே உண்டு.
🌿இந்த உலகில் நீங்கள் வந்துள்ளதால் உங்கள் முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள்....🌹🌹🌹
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.