Saturday, 6 February 2016

தியான முறை – ஆமோதிப்பதின் சக்தி பற்றி ஓஷோ

தியான முறை    : -  எப்போது தினமும் இரவில் தூங்குவதற்கு முன். குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள். பின் மறுபடியும் காலை கண் விழித்தவுடன் செய்யும் முதல் காரியம் குறைந்த பட்சம் மூன்று நிமிடங்கள். மேலும் பகலில்கூட, எப்போதெல்லாம் எதிர்மறையாக சரியில்லாமல் இருப்பதாக உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் உட்கார்ந்து கொண்டு இதை செய்யுங்கள்.
உங்களது சக்தி முழுவதையும் சரி என்று கூறுவதற்கு செலுத்துங்கள். சரி என்பதை ஒரு மந்திரமாக மாற்றுங்கள். உட்கார்ந்து கொண்டு சரி சரி என்று திரும்ப திரும்ப கூற ஆரம்பியுங்கள். அதனுடன் இணக்கம் கொள்ளுங்கள். முதலில் அதை திரும்ப திரும்ப கூறுங்கள். பின் அதை உணர ஆரம்பியுங்கள், அதனுடன் இசைந்து இருங்கள். அது உங்களது இருப்பில் தலையிலிருந்து கால் வரை பரவட்டும். அது உங்களுக்குள் ஆழமாக ஊடுருவட்டும்.
உங்களால் சத்தமாக கூற முடிய வில்லையென்றாலும் மெதுவாகவாவது சரி சரி என்று சொல்லுங்கள்.
ஆமோதிப்பதின் சக்தி பற்றி ஓஷோ
வாழ்க்கையை மறுதலிப்பதன் மூலம் வாழ முடியாது, மறுதலிப்பதன் மூலம் வாழ முயற்சிப்பவர்கள் வாழ்வை தவற விடுகிறார்கள். மறுப்பதன் மூலம் ஒருவர் எதையும் செய்ய முடியாது, ஏனெனில் இல்லை என்பது வெறுமையானது, இல்லை என்பது இருளைப் போன்றது. இருள் உண்மையில் இருப்பதில்லை. அது வெளிச்சம் இல்லாத நிலை. அதனால்தான் நீ இருளை நேரிடையாக எதுவும் செய்ய முடியாது. அதை அறையிலிருந்து வெளியே தள்ள முடியாது. அதை உன் பக்கத்து வீட்டுகாரரின் வீட்டிற்க்குள் தள்ளி விட முடியாது. உன் வீட்டினுள் அதிகமான இருளை கொண்டு வர முடியாது. இருளை நேரிடையாக எதுவுமே செய்து விட முடியாது. ஏனெனில் அப்படி ஒன்று இல்லை.
நீ இருளை ஏதாவது செய்ய விரும்பினால் விளக்கை ஏற்றி வை. இருள் வேண்டாம் எனில் விளக்கை வெளிச்சத்தை கொண்டு வா. ஆனால் நீ செய்யக்கூடியதெல்லாம் வெளிச்சத்தின் மூலம் மட்டுமே செய்யக்கூடும். ஏதாவது செய்ய முடியுமென்றால் அது வெளிச்சத்தை மட்டுமே ஏதாவது செய்ய முடியும்.
அது போன்று சரி என்பது வெளிச்சம், இல்லை என்பது இருள். உன் வாழ்வில் நீ எதையாவது செய்ய விரும்பினால் நீ ஆமோதிக்கும் வழியை கற்றுக் கொள்ள வேண்டும். ஆமோதிப்பது மிகவும் அழகானது. சரி சொல்வதே உன்னை தளர்வுபடுத்தும். அதுவே உனது வாழ்க்கை முறையாகட்டும்.
மரங்களுக்கும், மக்களுக்கும், பறவைகளுக்கும் சரி என்று சொல்லிப் பார். நீயே ஆச்சரியப்படுவாய். வாழ்வே மிகவும் அருள் நிறைந்ததாகி விடும். வாழ்க்கையை எதிர்க்காமல் இருந்தால், வாழ்க்கையை ஆமோதித்தால் வாழ்க்கை ஒரு சாகசமாகி விடும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.