Tuesday, 16 February 2016

ஆசை – பேராசை

ஞான கதைகள் – 1.

                                        ஆசை – பேராசை

ஒரு துறவி, தன் குடிலுக்கு அருகில் இருந்த தனக்கு சொந்தமான காலி மனையில், ''இந்த நிலம், வாழ்வில் முழுமையான திருப்தி அடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும்.'' என எழுதி வைத்தார்.

அதைப் பார்த்த பலர் அவரை அணுகி, '' அய்யா,எங்களிடம் எல்லா செல்வங்களும் தேவைக்கு இருக்கின்றன, அதனால் நீங்கள் சொன்ன தகுதி எங்களுக்கு உள்ளது. எனவே இந்த நிலத்தை எங்களுகே தாருங்கள்,'' என ஒவ்வொருவரும் தனித்தனியாக துறவியிடம் கேட்டனர்.

உடனே அந்த துறவி அவர்களிடம் ''உண்மையிலேயே நீங்கள் வாழ்வில் திருப்தியுடன் இருக்கிறீர்களா?" என்ற ஒரு கேள்வியை வினவுவார். வந்தவர்களும், ''உண்மையிலேயே தான் திருப்தியுடன் இருப்பதாகவும், தனக்குத் தேவையானது அனைத்தும் இருப்பதால் தனக்கு வாழ்வில் முழு திருப்தியே,'' எனவும் கூறினார்கள்.

துறவி அதற்கு, ''அன்பரே, நீங்கள் உண்மையிலேயே முழு திருப்தியுடன் இருந்தால் இந்தக் காலி மனையை அடைய ஏன் ஆசைப்படுகிறீர்கள்?''  என சொல்லவும் வந்தவர்கள் தலை குனிந்து அங்கிருந்து சென்றார்கள்.

ஆசைக்கு எல்லையில்லை - திருப்தி என்பது மனதிற்கு இல்லை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.