Sunday, 21 February 2016

மனதின் கதை

மனதின் கதை

ஓரு பிரபல திபெத்திய கதை……..                                                  

ஓரு மனிதன் ஓரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து வந்தான்.  உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது போன்ற சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய்“ என்று கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது.                              

முடிவில் ஓரு நாள் அந்த மனிதன்,  “நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம் – எனக்கு ஏதாவது ஓர் அதிசயம் – ஒரே ஒரு அதிசயமாவது செய்ய கற்றுக் தர வேண்டும்” என்றான்.                                 

அதற்கு அந்த வயதான குரு, “ஆனால் எனக்கு எந்த அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை தேவையின்றி வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்” என்று கூறினார்.  

ஆனால்  அந்த மனிதனோ,  ”உங்களுக்கு அதிசயம் செய்யத் தெரியாது என்று எப்போதும் நீங்கள் மறுத்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எப்போதும் அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர் என்னிடம் கூறியுள்ளார்கள் – நீ அவர் கூறுவதைக் கேட்காதே. அவருக்கு சேவை செய்துகொண்டே வா. ஓருநாள் அவர் உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார்.  ஆனால் அதற்கு நீ ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான் கூறுவார் என்று கூறியுள்ளனர்.  ஓருவேளை  நான் இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ என்னவோ” என்று கூறினான்.                                                            

சில நாட்கள் கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன் இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக் கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன் என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர்.  “ஒருவேளை அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே நடப்பவை.  நான் அவற்றை செய்வதில்லை.”                       

உயர்ந்த தன்னுணர்வு நிலை அடைந்த மனிதர்களிடம், இப்படிப் பல விஷயங்கள் தானாகவே நடக்கும். எப்படி சூரியன் உதிக்கும்போது பறவைகள் பாடுகின்றனவோ அப்படித்தான். சூரியன் இந்த அதிசயத்தை செய்வதில்லை. மலர்கள் தங்கள் இதழ்களை தாமாகவே திறக்கின்றன. சூரியன் இந்த அதிசயத்தை புரிவதில்லை. சூரியன் இருந்தால் போதும், இந்த அதிசயங்கள் தாமே நடக்கும். இப்படி தன்னுணர்வு நிலையில் விழிப்பு பெற்ற ஓரு மனிதனின் இருப்பே பல மலர்கள் இதழ் மலரவும், பல பறவைகள் கானம் பாடவும் போதுமானதாக இருக்கும்.                                  

அந்த வயதான குரு, “நான் உனக்கு ஏதாவது ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப் போகமாட்டாய் போலிருக்கிறதே” என்றார். அந்த மனிதன், “அது உண்மைதான்” என்றான். ஆகவே குரு “நான் உனக்கு ஓரு ரகசிய மந்திரம் கூறுகிறேன். ஓரு சிறு மந்திரம். திபெத்திய மந்திரம் “ஓம் மணி பத்மீ ஹம்” என்பதை எழுதித்தருகிறேன்” என்றார். ஓம்  என்பது வாழ்விருப்பின் நிரந்தர ஓசை, மணி பத்மீ ஹம் என்றால் தாமரைப் பூவில் இருக்கும் வைரமணி. மணி என்றால் வைரம், பத்மம் என்றால் தாமரை. ஆக அதன் அர்த்தம் நிரந்தர ஓசையும், தாமரை பூவுக்குள் இருக்கும் வைரமும் என்பதாகும். இது முக்தி நிலை என்பதன் அர்த்தமாகும். எங்கும் பரந்து உள்ள நிரந்தர ஓசையும், தாமரையின் அழகும், மேலும் தாமரையின் உள்ளிருக்கும் வைரத்தின் ஓளியும். ஓரு சின்ன மந்திரத்திற்குள் அவர்கள் முக்தி அனுபவத்தின் முழுமையையும் சுருக்கி விவரித்துள்ளனர்.

அந்த வயதான குரு,  “இந்த மந்திரத்தை எடுத்துச் சென்று, இதை ஐந்து முறை, வெறும் ஐந்தே ஐந்து முறை கூறு. முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கொள். கதவுகளை மூடிக்கொண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து  இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.

அந்த மனிதன் வேகமாக வெளியேறத் துவங்கினான். அவன் தன் நன்றி உணர்வைக் காட்டக்கூட முயலவில்லை. நன்றி என்று கூறக்கூட முயலவில்லை. உடனே கோயில் படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன் பாதிதூரம் போனபோது, அந்த குரு, “நில்! ஓன்றைக் கூற மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது ஒன்று நினைவிருக்கட்டும். குரங்கைப் பற்றி  நினைக்கவே கூடாது!“ என்று சத்தமாகக் கூறினார்.

அந்த மனிதன், “நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான் நினைத்ததே இல்லை” என்றான். குரு, “சரிதான், ஆனால் நினைவிருக்கட்டும்! குரங்கு மட்டும் கூடவே கூடாது.  குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை மந்திரம் கூற வேண்டும்” என்றார்.

அந்த மனிதன் “குரங்கு எதற்காக வரும்?” என்றான். குரு, “எனக்குத்  தெரியாது. நான் உனக்கு இரகசியத்தைக் கூறிவிட்டேன். இதுதான் எனது குரு எனக்குக் கூறிய இரகசியமாகும்.” என்றார்.

ஆனால் அவன் பட

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.