"தன்னையே தனக்கென்று கொள்ளாதவனுக்கு
மக்களேது செல்வமேது "
தெரியாததைத் தேடிப் போவது தான் ஞானத்தின் ஆரம்பம்
தெரியாததோடு ஐக்கியமாகிப் போவது
ஞானியாகிப் போவது
புத்தனாகிப் போவது
அஞ்ஞானி என்பவன் மனத்தளவில் வாழ்கிறான்
மனம் கழிந்த நிலை பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது
அவன் இரவல் வாழ்க்கை வாழ்கிறான்
பிறரைப் பார்த்து அவ்வாறே தானும் வாழ்கிறான்
தன் இருத்தலில் இருந்து முகிழ்ந்து வரும் எதையும் அறியாதவன்
மனம் கழிந்த நிலையில் தான் சில விஷயங்கள் சாத்தியம் ஆகும்
நீங்கள் திறந்த மனதோடு இருக்கும் போதுதான் சில மாற்றங்கள் நடக்கும்
பரிசுத்தமான அன்பில் தியானம் இருக்கிறது
பரிசுத்தமான தியானத்தில் அன்பு இருக்கிறது
காலம் என்பது ஒரு உளவியல் நிகழ்வு
எல்லாமே உன்னைச் சார்ந்தது உன் மனநிலையைச் சார்ந்தது
காலம் என்பதற்கு எந்த விதமான வடிவமும் கிடையாது
அது முழக்க முழுக்க மனத்தளவிலானது
எனவேதான் ஆழ்ந்த தியானத்தில் நேரம் மறைந்து போகிறது
யேசு சொல்கிறார் : கடவுளின் சாம்ராஜ்ஜியத்தில் நேரம் கிடையாது
மனம் கழிந்த நிலையில் நேரமும் கழிந்து விடுகிறது
காலம் கடந்த நிலையின் ருசியை நீங்கள் அனுபவிக்க வேணடும்
இந்த உலகம் காலத்தாலும் இடத்தாலும் ஆனது
இதைத்தான் ஐன்ஸ்டீன் Spaciotime என்கிறார்
இந்த உலகம் காலம் இடம் தூரம் என்ற முப்பரிமாணங்களை கொண்டது
நீ உனது உடல் இயக்கத்தை நிறுத்தினால் தூரம் மறைந்து விடுகிறது
நீ உன் மன இயக்கத்தை நிறுத்தினால் இடமும் காலமும் மறைந்து விடுகின்றன
நீ தியானிக்கும்போது
இந்த இரண்டையும் கடந்து விடுகிறாய்
அப்போது நீ ஒரு தூய பிரபஞ்ச இருப்பில் இருப்பாய்
தன்னுடைய இருப்பை தியானத்தில் கண்டு கொள்ளும் அந்தக் கணமே நெறியாகிப் போகிறாய்
உன்னுடைய மனதைக் கவனித்துப் பார்
உன்னுடைய மனது செய்ததையே திரும்ப திரும்பச் செய்து கொண்டிருக்கிறது
செய்ததையே திருப்பிச் செய்து கொண்டிருந்தால் நெறியைத் தவற விட்டு விடுவாய்
ஏனெனில் உன் ஆன்மா நித்தியத்துக்கு புதிது
நித்தியம் இளமை கொண்டது அது ஒரு போதும் மூப்படைவதில்லை
மனமும் உடலும் மூப்படைகின்றன
ஆனால் ஆன்மாவுக்கு காலம் பற்றி தெரியாததால் அது எப்போதும் மூப்படையாது
இந்த சமுதாயம் உங்களை தனி ஆளாக இருக்க விடுவதில்லை
கூட்டத்தைச் சார்ந்தே ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்கிறார்கள்
ஒரு ஞானி எந்த பொருளையும் தனக்கு சொந்தம் கொண்டாடுவது இல்லை
உன்னையே நீ உனக்கென்று கொள்ளாத போது வேறு எதை உன்னுடையது என்று கொள்வது
ஓஷோ
தம்ம பதம் II
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.