**************#ஓஷோ#*************
**********#காமத்திலிருந்து... கடவுளுக்கு#*******
#பகுதி :--------- 41 ---------
...........ஆனால் விரைவிலேயே மீண்டும் காம உணர்ச்சி கொள்கிறான் . எனவே நமது கண்ணுக்குத் தெரிவதை விட நிச்சயமாக மனிதனின் இந்த நடவடிக்கைக்கு வேறு ஏதோ ஒரு ஆழ்ந்த அர்தம் இருந்தாக வேண்டும் ..........
#நமது வழக்கமான உடல் அளவிலான புணர்ச்சி அனுபவத்தில் நமது கண்ணுக்குப் புலப்படாத மட்டத்தில் ஏதோ ஒன்று இருந்தாக வேண்டும் . அந்த ஒன்றுதான் தன்னளவில் மதத்தன்மையை கொண்டிருக்கிறது . இந்த அனுபவத்தை புரிந்து கொள்வதற்கு நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் . இந்த அனுபவத்தின் அர்த்தத்தை நீங்கள் கிரகித்துக் கொள்ளாதவரை நீங்கள் செக்ஸில் உழன்று செக்ஸிலேயே சாக வேண்டியதுதான் .
இரவின் இருளில்தான் மின்னல் மின்னுகிறது . ஆனால் இருள் என்பது மின்னலின் ஒரு பகுதி அல்ல . இரவில் மட்டும்தான் , இருளில் மட்டும்தான் மின்னல் தெரிகிறது என்பதுதான் இரண்டிற்கும் உள்ள ஒரே தொடர்பு , அதே போன்றுதான் காமத்திலும் உடலுறவின் மூலம்தான் அந்த ஒளி மின்னுகிறது . அந்த தெளிவான உணர்வு ஏற்படுகிறது . ஆனால் அந்த உணர்வு ஏற்படுவது உடலுறவில் இருந்து அல்ல . அதோடு அது சம்பந்தமுடையதாக இருந்தாலும் அது அதன்மூலம் நமக்கு கிடைக்கின்ற உபபொருள்தான் . உச்சக்கட்ட பரவசநிலையின் போது மின்னுகின்ற அந்த ஒளி காமத்திற்கு அப்பாற்பட்டது . அது அதைக் கடந்துள்ள ஒன்றிலிருந்து வருவது . எனவே இப்படிக் காமத்திற்கு மேலெழுந்த ஒன்றிலிருந்துதான் இந்த அனுபவம் நமக்கு வருகிறது என்பதை நீங்கள் கிரகித்துக் கொண்டால்தான் நீங்கள் காமத்தின் மேல் எழுந்து செல்ல முடியும் . இல்லையெனில் ஒருபோதும் நம்மால் முடியாது .
செக்ஸை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இக்கருத்துக்களை அதன் முறையான கண்ணோட்டத்தில் ஒருபோதும் பாராட்டுவதில்லை . தீர்க்க முடியாத இந்த காமப்பசிக்கான காரணத்தை , காமத்திற்கான இந்த ஏக்கத்தின் காரணத்தை அவர்கள் ஒருபோதும் அலசி ஆராய்வதில்லை . இப்படி செக்ஸிற்காக அடிக்கடி பலமாக நாம் கவர்திழுக்கப்படுவது சமாதி நிலையை அந்த கண நேரத்தில் நாம் தெளிவாக அறிந்து கொள்வதற்காகத்தான் . என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் .
செக்ஸில் ஈடுபடாமலேயே அந்த சமாதிநிலையை அடைவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள முடிந்தால் நீங்கள் உங்களை செக்ஸிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும் . ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்க விரும்பும் ஒருவனிடம் அந்தப் பொருள் இலவசமாக கிடைக்குமிடம் காண்பிக்கப்படுமானால் அவன் அதை விட்டுவிட்டு மீண்டும் சந்தைக்குப் போய் அதிக விலை கொடுத்து அந்தப் பொருளை வாங்குவானேயானால் அவனுக்கு மீட்பு இல்லை என்றுதான் அர்த்தம் . காமத்தில் , உடலுறவில் அடைகின்ற அதே களிப்பை வேறு வழிகளில் இன்னும் அதிக அளவில் எப்படிப் பெறுவது என்று நாம் ஒரு மனிதனுக்கு காட்டி விட்டால் அவனது மனது தானாகவே செக்ஸை நோக்கி ஓடுவதிலிருந்து நின்றுவிடும் . அவனது மனம் எதிர்திசையில் ஓட ஆரம்பித்துவிடும் .
மனிதன் சமாதி நிலையின் முதல் அனுபவத்தை செக்ஸில் தான் தெளிவாக உணர்ந்தான் . ஆனால் காமம் என்பது விலையுயர்ந்தது . ரொம்பவும் விலையுயர்ந்தது . ஆனால் அந்த இன்பம் நிலைத்து நிற்பதோ கொஞ்சக் கணநேரம் மட்டுமே . அந்த கொஞ்ச நேர உச்ச பரவச நிலைக்குப் பின் நாம் நமது பழைய நிலைக்கு மீண்டும் வந்து வந்துவிடுகிறோம் . ஒரு வினாடி நேரத்திற்கு வேறு ஏதோ ஒரு உலகத்தை அடைகிறோம் . ஒரு வினாடி நேரத்திற்கு நாம் அளவு கடந்த திருப்தியின் உச்சியை நோக்கிச் செல்கிறோம் . அப்போதைய நமது பயணம் ஒரு சிகரத்தை நோக்கித்தான் , ஆனால் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் நாம் மீண்டும் புறப்பட்ட இடத்தில் விழுந்து விடுகிறோம் . ஒரு அலையானது ஆகாயத்தை தொடுவதற்கு முயற்சிக்கிறது . ஆனால் அது குறிப்பிடத்தக்க தூரம் எழுவதற்குள் மீண்டும் கீழே விழ ஆரம்பித்துவிடுகிறது . நாமும் அதே போன்றுதான் . அந்த பேரின்பத்திற்காக , அந்த சந்தோஷத்திற்காக , அந்த தெளிவான உணர்விற்காக நாம் சக்தியை அப்போதைக்கப்போது சேகரிக்கிறோம் . பின் மீண்டும் ஏற ஆரம்பிக்கிறோம் . நாம் கிட்டத்தட்ட அந்த கண்ணுக்குப் புலப்படாத மட்டத்தை தொடுகிறோம் , அந்த உயர்ந்த இடத்தைத் தொடுகிறோம் . ஆனால் கணிசமான அளவு சக்தியையும் , பலத்தையும் இழந்துவிட்டு மீண்டும் நமது பழைய நிலைக்கு விழுந்து விடுகிறோம் ......தொடரும் ........
Friday, 12 February 2016
காமத்திலிருந்து... கடவுளுக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.