Sunday, 21 February 2016

ஆன்மீகம் வேறு ? வாழ்க்கை வேறா?

ஆன்மீகம் வேறு ?
வாழ்க்கை வேறா?
- ஒரு பகிர்வு

நண்பர்களே வாழ்க்கையே ஒரு ஆன்மீகம் தான் என்பதை இந்த பதிவின் முடிவில் புரிந்து கொள்ள முடியும்,

பெரும்பாலும் இன்றைக்கு இருக்கும் சூழல், நீ எந்த அமைப்பில் இருக்கிறாய், நான் இந்த அமைப்பில்  உள்ளேன்  என்றும் சிலர் வாழ்க்கைக்கும் அதர்க்கும் சம்மந்தம் இல்லாத ஒன்றாக நினைத்து கொண்டு ஆன்மீக தளத்திற்கு செல்பவர்களை ஏளனமாக பேசுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,

உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன தன்னை பற்றி , தன் உயிரை பற்றி உணர்வது என்பது பெரும்பாலும் எல்லாம் அறிந்ததே!  வாழ்க்கையின் உண்மை- என்ன என அறிந்து கொள்வதே ,

சிலர் அதை தெரிந்து என்ன ஆக போகிறது என்று பணத்தை மட்டுமே தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர்,

சரி தன்னையும், தன் உயிரை பற்றி தெரிந்து என்ன ஆக போகிறது என்ற கேள்வி - ஆன்மீக அமைப்புகளில் இருப்பவர்கள் அந்த இடத்துக்கு செல்லும் போது மட்டும் மிக பெரிய ஆன்மீகவாதி போல காட்டி கொண்டு இருப்பது வேடிக்கையே!

ஆன்மீகத்துக்கும்- வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தம்

எல்லோருடைய வாழ்க்கைக்கும் அதாவது தனி மனிதன் முதல் விலங்குகள் , தாவரம் அனைத்துக்கும் மூலமாக இருப்பது இந்த உயிர் தான் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான் ,

சரி அப்படி உயிர் எங்கு உள்ளது என்று பார்த்தால் அது உடம்பில் உள்ளது, சரி நாம் எப்படி இயங்குகிரோம் என்று பார்த்தால் அது மனம் என்ற தன்மையில் இயங்குகிறது என்பதையும் எல்லோரும் அறிந்ததே, 

சரி உடலுக்கும், மனதுக்கும் மையமாக எந்த ஒன்று தாங்கி கொண்டிருக்கிறது என்று பார்த்தால் உயிர் தான் என்பது புரியும்,

சரி அப்படி உயிர் என்ன தான் செய்கிறது உடலையும், மனதையும் அது தானே இயக்கிக் கொண்டிருக்கிறது,  அது உடலில் உள்ள அனைத்து இயக்கங்களையும் சரி வர செய்து கொண்டிருக்கிறது

உதாரணமாக நாம் சாப்பிடும் சாப்பாட்டை ஜீரணம் பண்ணி எழு தாதுக்களாக மாற்றி அமைக்கின்றன, நம் உடம்பில் இருந்து வெளியேறும் விந்து நாத இணைப்பின் மூலம் ஒரு கரு உருவாகின்றன,

அந்த கரு என்ன தான் செய்கின்றன ஒரு கண், காது, மூக்கு, கணையம், இருதயம், நுரையீரல், எலும்பு, நரம்புகள் என அனைத்தையும் உருவாக்குகின்றன இங்கு சிந்திக்க வேண்டியது இந்த உடலுக்கு எவ்வளவு பெரிய சக்தியை இயற்கை கொடுத்துள்ளது என்பதை உணராமல் அதை கெடுத்து கொள்கிறோம்.

எந்த நோயையும் உடலே அந்த நோயை சரி செய்யும் ஆற்றல் உள்ளது, எல்லை மீறுகிற போது அது அதன் இயக்கத்தை சரி செய்ய முடியாமல் நோய் ஏற்படுகிறது.

இந்த அற்புதமான உடலை வைத்து தான் நாம் வாழ்க்கையில் வாகனம் ஓட்டுவதில் இருந்து பணம் சம்பாதிப்பது முதல் ஞானம் அடையும் வரை அனைத்து அசைவுகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று,

அடுத்து மனம் என்ன செய்கின்றது அது ஒரு இடத்தில், ஒரு நிமிடம் கூட  அடங்குவதே இல்லை, ஏதாவது பண்ணனும், அங்க போகணும், அத பார்க்கனும் இத பன்னனும், பணம் சம்பாதிக்க மட்டும் தான் பிறந்திருக்கிரோம், அவன் அப்படி இருக்கிறான் ,இப்படி இருக்கிறான், நாம் இன்னும் முன்னேற வில்லையே என குழப்பிக்கொண்டே தடுமாறி ஓடிக் கொண்டே இருக்கிறது, இதனால் அருகில் இருக்கும் சந்தோசம் என்னவென்று தெரிவதில்லை.

இந்த நிலை எல்லாம் எப்பொழுது மாற ஆரம்பிக்கும் முதலில் இந்த உடலின் அசைவுகளுக்கும், மனதின் அசைவுகளுக்கும் மூலமாக இருப்பது இந்த உயிர் தான் என்பதை உணர்ந்து கொள்ளும் பொழுது, உயிர் என்றால் என்ன என்ற கேள்வி வரும்.

இங்கு தான் உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்பதை தேடுகிறது நமது உள்ளம் அல்லது அகம்.

இந்த உயிர் என்றால் என்ன, இந்த உயிர் எப்படி உணர்வுகளாக அசைந்து கொண்டிருக்கிறது என்பதை தியானத்தின் மூலம் நம்மை கவனிக்கும் பொழுது ,

ஒவ்வொரு அசைவும் என்ன சொல்கின்றன என்பதை சற்று உணற  முடியும்  - ஒவ்வொரு அசைவுகளிலும் தூய்மையான மாற்றத்தையும் , துல்லியமாக நாம் செயல்படுவதையும் நம்மால் உணர முடியும்.

உதாரணம் நீங்கள் எந்த நிலையில் எந்த வேலை வேண்டுமானலும் செய்யலாம், அந்தந்த வேலைகளை தெளிவாக யாருக்கும் உண்மையான பாதிப்பு இல்லாத வகையில் முதலில் உங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செய்ய முடியும்.

சரி இது தான ஆன்மீகம் என்றால் அதர்க்கு அப்பாலும் ஞானிகள் மரண பயத்தையும் கடந்து சென்றார்கள் - நம் வாழ்வில் மிக பெரிய பயம் என்றால் அது மரண பயம் தான் என்பதை எல்லோரும் தெரிந்ததே !

அவர்கள் எப்படி மரணத்தை கடந்தார்கள், அயரா விழிப்புநிலையில் மனம் என்ற, உடல் என்ற தன்மையை கடந்தனர்,

அதை எப்படி கடந்தனர் உடல் அசைவும் , மனதின் அசைவையும் நன்கு உணர்ந்தார்கள், மனம் ஒரு குரங்கு அது இயங்கும் வரை தனக்குள் இருக்கும் உயிரை ஆழமாக உணர முடியாது என்று உணர்ந்து மனதிற்குள் உள்ள ஒவ்வொரு இயக்கத்தையும் மிக துல்லியமாகவும்   ஆழமாகவும்  சென்று மனதை கடந்தனர்.

இந்த மனதை கொண்டு வாழும் நாம் அதை கடந்து அதர்க்கு மூலம் உள்ள உயிரோடு உயிராக நம்மை இணைத்து சம நிலையில் இருப்பாய் நிற்கும் தன்மையில் மரணம் தாண்டி இயற்கையோடு இயற்கையாக இணைந்து விடுதல் இது தான் மனித பிறவியின் நோக்கம் என்று ஞானிகள் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.

இப்பொழுது கொஞ்சம் இந்த பதிவின் ஆரம்பத்திர்க்கு சென்றால் பதிவின் தன்மை புரியும் அதாவது நாம் உடல் மனம் தான் வாழ்க்கைக்கு மூலம் அது இல்லாமல் வாழ முடியாது, அதை சரியாக வைத்து கொண்டால் வாழ்க்கை புரியும் சந்தோஷமாக வாழ முடியும்

நம்மை நம் உணர்வுகளை ஆழமாக கவனித்தால் தான் இது சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

இதை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால்,  உயிரின் அசைவுகள் மூலம் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அந்த உயிரின் மூலம் தான் ஒவ்வொரு அசைவுகள் நாம் செய்து கொண்டிருக்கிறோம்
இந்த உயிர் அசைவுகளை சீர் திருத்தம் செய்வதே ஆன்மீகம். இதுவே ஆன்மா என்ற உயிரை உணர்வதற்குத்தான் ஆன்மீகம் ஆகும்.

இதை ஆழமாக படித்து உணர்ந்து கொண்டால் ஆன்மீகம் வேறு வாழ்க்கை வேறு அல்ல என்பதையும்

வாழ்க்கையே ஒரு ஆன்மீகம் தான் , தன்னை தன் உயிரை உணர்ந்து கொள்வது தான் வாழ்க்கை என்பது புரியும்.

சரியான குருவை தொடர்பு கொண்டு தியானத்தில் ஈடுபாடுங்கள் நீங்கள் உங்களை உணர்ந்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம்.

இதில் திருத்தம் மற்றும் தெளிவு வேண்டும் எனில் தயங்காமல் குறிப்பிடலாம்

நன்றி
வாழ்க வளமுடன் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.