Thursday 14 July 2016

மனக்குறை – உடல்குறை

*மனிதனுக்கு ஏன் மனக்குறை – உடல்குறை ஏற்படுகிறது?*

அன்பொளி MAY 1988.

இயற்கையில் எள்ளளவும் குறையே இல்லை.

குறைகளுக்கு காரணம், மனிதன் தன்னுடைய விருப்பத்தை (ஆசையை) இயற்கையான தேவையை தாண்டி, கற்பனையினாலும், பழக்கத்தினாலும் எற்படுத்திக்கொள்வதுதான்.

மனித உள்ளத்தில் தேவை உணர்வு, விருப்பம் என்று இரண்டு எண்ணஎழுச்சிகள் உள்ளன. தேவை இயற்கையானது. உடலையும் உயிர் வளர்ச்சியையும் ஒட்டி எழுவது. விருப்பம் தேவையிலிருந்தும் எழலாம். கற்பனையாகவும், பழக்கத்திலிருந்தும் எழலாம்.

*தேவையை ஒட்டியதாகவே விருப்பத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டால் ஞானி*

கற்பனையாகவும், பழக்கத்தைஒட்டியும் ஏழும் விருப்பங்களை அப்படியே செயல்படுத்த எண்ணத்தை, உடலை இயங்க விடும்போது உனக்கு அமைந்த ஞானத்தை பயன்படுத்தாத வீணணாகிறாய். 

*குறிப்பு*

உதாரணமாக பசி உணர்வு இயற்கை தேவையை ஒட்டி எழுவது. உணவு உண்ணவேண்டும் என்கிற விருப்பத்தை பழக்கவழியிலும், கற்பனையிலும் செலுத்தி, இந்த உணவுதான் வேண்டும் என்றும், இப்படித்தான் வேண்டும் என்றும் மனம் எல்லைகட்டிகொண்டு, அந்த எதிர்பார்ப்பு சில சமயம் நிறைவேறாமல்,  அதனால் தன், பிறர்  உடல், மனம் கெடும்போது அந்த இடத்தில்தான் துன்பம் தோன்றுகிறது.

இயற்கையில் கிடைக்கும் தாவரங்களை அப்படியே உணவாக எடுத்துக்கொள்ள முடியாது. தரம்மாற்றி, உருமாற்றி பல தலைமுறைகளாக அனுபவித்தது  உடல் செல்களில், உயிரில் பதிவாகயுள்ளது.

உணர்ந்து, படிப்படியாக மாற்றம் பெற்று அளவு முறை காத்துக்கொள்ளலாம்.

மகரிஷியின் அளவு முறை கோட்பாடு மிக அற்புதமானது. சமுதாயத்தோடு முற்றிலும் விலகாமல் அதோடு இணைந்து வாழ்ந்துகொண்டே இயற்கைக்கு முரண்படாது வாழ உதவுவது.

மேலும் பழக்கத்தாலும், கற்பனையாலும் உணவில் அடிக்கடி அளவு முறை மீறுகிறோம். பசி என்கிற இயற்கை தேவையை ஒட்டி மட்டுமே உணவு பழக்கம் அமையும்போது துன்பம் இல்லை. உடல்குறை, மனக்குறை இல்லை.

இதேபோல்தான் உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவைகள் இயற்கை தேவையை ஒட்டியும், இவற்றின் செயற்கையில் அளவு முறை மீறாமலும் இருந்தால் துன்பம் இல்லை.

ஐந்தில் அளவு முறை மன உறுதியோடு காக்க வேண்டும். எதன் பொருட்டும், எவர்பொருட்டும் மீறாமல் இருக்க முயலவேண்டும்.

*இதற்கான மன உறுதியை அளிப்பது தவம்*

அளவு முறை என்பது ஒவொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கருவமைப்பினாலும் வேறு காரணங்களாலும் அமைந்திருக்கும்.
எனவே நம் அளவு முறையை நாமே உணர்ந்து, பிறர்ரோடு ஒப்பிட்டு பார்க்காமல் பின்பற்றினால் சிறப்பு .

நன்றி,
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.