Tuesday 26 July 2016

சிவபெருமானின்

1.சிவபெருமானின் காளிகா
தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது?
காளிகா தாண்டவம் -
படைத்தல் செய்யும் போது.
தலம் - நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி.
ஆடிய இடம் - தாமிர சபை

2. சிவபெருமானின் சந்தியா
தாண்டவம் ஆடுவது எப்போது? எங்கு?
சந்தியா தாண்டவம் -
காத்தல் செய்யும் போது.
தலம்- மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை.
ஆடிய இடம் - வெள்ளி அம்பலம்

3. சிவபெருமானின் சங்கார
தாண்டவம் ஆடுவது எப்போது?
சங்கார தாண்டவம் -
அழித்தல் செய்யும் போது.

4. சிவபெருமானின் திரிபுர
தாண்டவம் ஆடுவது எப்போது? எங்கு?
திரிபுர தாண்டவம் -
மறைத்தல் செய்யும் போது.
தலம்- குற்றாலநாதர் கோவில், குற்றாலம்.
ஆடிய இடம் - சித்திர சபை.

5. சிவபெருமானின் ஊர்த்துவ
தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
ஊர்த்தவ தாண்டவம் -
அருளல் செய்யும் போது.
தலம்- ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு, ஆடிய இடம் - இரத்தின சபை.

6. சிவபெருமானின் ஆனந்த
தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
ஆனந்த தாண்டவம் - இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம்.
தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம்.
ஆடிய இடம் - கனக சபை.

7. சிவபெருமானின் கௌரி
தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
கௌரி தாண்டவம் -
பார்வதிக்காக ஆடிய போது.
தலம்- திருப்பத்தூர்.

8. அஜபா நடனம் என்பது என்ன?
இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர்

9. உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம்- திருநள்ளாறு.

10. தரங்க நடனம் என்பது என்ன?
இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
தரங்க நடனம் என்பது கடல் அலை போல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார்.

11. குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் - திருக்காறாயில்.

12. பிருங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது. இதை சிவபெருமான் ஆடியது இடம் திருக்கோளிலி ஆகும்.

13. கமல நடனம் என்பது என்ன?
இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-திருவாய்மூர்.

14. ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம் - திருமறைக்காடு (வேதாரண்யம்)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.