Sunday 24 July 2016

தரித்திரம் தொலைய பஞ்சமி திதி

தரித்திரம் தொலைய பஞ்சமி திதி

பஞ்சமி திதியில் இன்று வராஹி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளியை தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.

பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணை (பஞ்ச தீப எண்ணெய்) கலந்து ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் ஐந்து திரி இட்டு தீபத்தினை ஏற்ற வேண்டும்.

அதில் தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப்பார்த்தபடி நாம் மனம் உருகி வேண்டினால் தீபத்தில் அம்மன் கொலுவிருக்க வந்து அமர்ந்திடுவா..!
அப்பொழுது நமது குறைகளை எல்லாம் அந்த தீபத்தை பார்த்து கூறவேண்டும் .
108 முறை

              ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ

சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-

ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்தி மாதா மம கிரகம் மே தன சம்ருத்திம் தேஹி தேஹி நமஹ

எனகூறிய படி ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் ஒவ்வொரு கற்கண்டு இடவேண்டும். பூவும் குங்குமமும் அர்ச்சிக்கலாம்.. ! அத்துடன்
தேவிக்கு பழங்களை படைக்கலாம்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.