Friday 25 October 2019

osho

எது தன்னிடம் இல்லையோ அதையே இருப்பதாய் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் இது மனதின் முரண்பாடுகளில் ஒன்று

பார்க்கப்போனால் உன்  செல்வத்தை காண்பிப்பதே உள்ளே வறுமை இருப்பதால் தான்.... எந்த அளவுக்கு ஒருவன் ஏழையோ அந்த அளவுக்கு அவன் தன் செல்வத்தை காண்பித்து திரிவான் ...எந்த அளவுக்கு ஒரு கையாலாகாதவனோ அந்த அளவுக்கு காமம் கொண்டவனாக இருப்பதாக காட்டிக் கொள்வான...எந்த அளவுக்கு ஒருவன் அறியாமையில் இருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் தன் அறிவை பறைசாற்றிக்கொண்டு திரிவான்....எந்த அளவுக்கு ஒருவன் பலவீனமாக இருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் தன்னை பலசாலியாக காட்டி கொண்டிருப்பான்...

உண்மையில் எதைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ, அதற்கு நேர் எதிரிடையாக தான் ஒருவன் இருப்பான்.... ஓரளவுக்கு மனோதத்துவம் தெரிந்திருந்தால் போதும்.. யார், எவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.... எங்கே  ஒருவன் இருக்கின்றான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.... உண்மையிலேயே அவன் தன்னை காட்டிக்கொள்ள மாட்டான் ...அது தேவையே இல்லை... தன்னிடம் இருக்கிறது என்பதுதான் அவனுக்கு சர்வ நிச்சயமாக தெரியுமே... ஒருவகையில் அவன்  அதை மறைக்கத்தான் பார்ப்பான்., தன்னை ஒரு முட்டாள் என்று பிறர் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்வான்... தனக்கு ஒன்றுமே தெரியாது என்று பிறர் நினைக்கும் அளவுக்கு நடந்துகொள்வான் ..தான் எந்த வகையிலும் முக்கியமானவன் அல்ல என்றுதான் காட்டிக் கொள்வான் ...எப்படியாவது தன்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான்...

 உன்னிடம் ஒரு பொக்கிஷம் இருக்கையில் உன்னிடம் அது இருக்கிறது என்பதைப் பற்றிய பிறரது அபிப்ராயம் தேவையே இல்லை .,

உன்னிடம் எதுவும் இல்லை எனும் போது தான் பிறர் அப்படி நினைக்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறது... அபிப்ராயங்கள் மட்டுமே இருக்கும் போது அவை உனக்கு தேவையாகின்றன.. அவற்றை சார்ந்தவனாகிப் போகிறாய்.. பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அதிகம் நினைக்க ஆரம்பித்து விடுகிறாய்...
 இதைத்தான் உள்ளே இருக்கும் வறுமை என்கிறேன்...

மிக உயர்ந்த செல்வம் வெகு குறைவாக தெரிகிறது 🌹

இதை தவறாக புரிந்துகொண்டு விடாதே.. பெரும் செல்வந்தனைக் கண்டால் அவனுடைய செல்வதை காண முடியாது.. ஞானியை கண்டால் முட்டாளாகத் தெரிவார்... எதையும் காட்டிக் கொள்ள மாட்டார் ..

அழகான ஒரு பெண்ணை கண்டால் அலங்காரம் ஏதும் செய்யாமலிருக்க காண்பாய்....
நகைகளைப் பூட்டிக் கொள்வதும,ஒப்பனை செய்து கொள்வதும் அசிங்கமானவள் செய்யும் காரியங்கள்... உண்மையாகவே அழகாக இருப்பவள் ஒப்பனையிலோ, அணிகலன்களிலோ நாட்டமுடையவளாகவே இருக்கமாட்டாள்.. அசிங்கம்தான் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிகள் செய்யும்.. உண்மையான அழகுக்குத் தான் அழகு என்பதே தெரியாது...

அழகு தன்னை காட்சிப்பொருள் ஆக்குவதில்லை ..
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.... இதை நீ கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.. அதை நீ தேடிப் போக வேண்டியிருக்கிறது.....   

மிக உயர்ந்த செல்வம் குறைவாகத் தெரிகிறது அதன் பயன் எப்போதும் தவறுவதில்லை.....🌹

 தன்னை காட்சிப் பொருளாக்காமல் வாழ்கின்றவனிடம் எப்போதும் வேண்டியது இருக்கும்... எப்போதும் வேண்டியதற்கு மேலும் அவனிடம் இருக்கும்... அவனுக்கு தேவையானது எல்லாமும் இருக்கும்....

 காட்சிப் பொருளாக இருப்பவன் ,இன்னும் வேண்டும. இன்னும் வேண்டும் என்று அலைகிறவன்...

 இருப்பதைக் காட்டிக் கொள்ளாதே. அப்படி செய்தால்தான் உன் ஆற்றல் தான் வீணாகும்.

 அதிகாரம் இருக்கிறதா ? அதை மறைத்து வைத்துக் கொள். வெகு ஆழத்தில் அதை மறைத்து வைத்துக் கொள் ..உண்மையிலேயே அதிகாரம் இருப்பவர்கள் மட்டும் அதை தெரிந்து கொள்ளட்டும்....

 உன்னுடைய அதிகாரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டால் திவாலாகி போய்விடுவாய்.. மலடாகிப் போவாய்.... உன்னிடமிருந்து பறித்து விடுவார்கள்... திருடிவிடுவார்கள்..  அதை கைவிட வைத்துவிடுவார்கள்... 

உன்னிடம் இருப்பதை காட்டாதே. காட்டி விடாதே... அதில் மகிழ்ச்சி கொள். ஆனால் அது பிறருக்குத் தெரியாமல் இருக்கட்டும் .யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே உன்னிடம் இருக்கும் ஆற்றலை தெரிந்து கொள்வார்கள்.

 அதிகாரம் இருப்பவனை அதிகாரம் இருக்கும் இன்னொருவன் உடனே தெரிந்து கொள்கிறான்.. ஒரு ஞானியை இன்னொரு ஞானி உடனே கண்டுகொள்கிறார்... அதற்கு எந்த வெளிப்படையான அடையாளமும் தேவையில்லை ...

 ஞானிக்கு தேவையில்லை வெளிவேஷம் ..அதை தெரிந்து கொள்ளாமல் இருக்கவே முடியாது.... எனவே ஞானிகள் உன் ஞானத்தை தெரிந்து கொள்வார்கள் ..அதை காட்டிக் கொள்ள வேண்டியதே இல்லை.....

        🌹ஓஷோ 🌹