Wednesday 21 March 2018

உணர்வு

கோபம் வரும்போதெல்லாம் நம் உள்ளொளி
மறைந்து விடுகிறது ...

உண்மையில் ஒளி மறைந்து
இருள் சூழ்வதாலேயே கோபம் வருகிறது ...

முழு உணர்வோடு நாம் இருக்கும்போது
கோபம் வராது ..

நீங்களே முயற்சி செய்து
பாருங்கள் ...

உணர்வு போய் கோபம் இருக்கும் அல்லது
உணர்விருக்கும் கோபம் இராது ...

உணர்வும் கோபமும் சேர்ந்து இருக்கவே
முடியாது ...

இதிலிருந்து என்ன தெரிகிறது ?

உணர்வு ( consciousness) என்பது
ஒளியைப் போன்றது ...

கோபம் என்பது
இருட்டைப் போன்றது ...

இரண்டும் ஒரு சேர இருக்க முடியாது
ஒளி இருந்தால் இருட்டு இருக்காது ...

நாம் முழு உணர்வோடு இருந்தால்
கோபம் சாத்தியம் இல்லை ...

உணர்வு ( consciousness ) அதிகமாக
அதிகமாக ...

கோபம் இருக்காது ...
காமம் இருக்காது ...
பேராசை இருக்காது ...

அப்போது நாம் சரியான பாதையில்தான்
செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம் ...

ஓஷோ ...
தந்த்ரா ஓர் உன்னத ஞானம் ...

Saturday 17 March 2018

மூன்று முறை

மூன்று முறை கவனியுங்கள்.
புத்த மதத்தில் மூன்று முறை கவனிப்பது என்ற ஒரு குறிப்பிட்ட முறை உண்டு. ஒரு பிரச்னை எழுந்தால் – உதாரணமாக, ஒருவருக்கு திடீரென்று காமஉணர்ச்சி ஏற்பட்டால், அல்லது பேராசை, அல்லது கோபம் வந்தால் – அந்த நபர் மூன்று முறை அது அங்கே இருப்பதை குறித்து கொள்ள வேண்டும். கோபம் அங்கே இருந்தால், சிஷ்யர் உள்ளுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும், ``கோபம்…..  கோபம்…. கோபம்’’ – நீங்கள் அதை குறித்துக் கொள்ள வேண்டும். அப்போது நீங்கள் உள்ளுணர்வை இழக்காமல் இருப்பீர்கள். அவ்வளவுதான் – பிறகு அவர் என்ன செய்கிறாரோ அதை தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பார். அவர் எதையும் கோபத்தோடு செய்யவில்லை. ஆனால் அதை மூன்றுமுறை குறித்துக் கொள்கிறார்.
அது அசாத்தியமான அழகு. நீங்கள் அதை தெரிந்துகொண்ட தருணம், அதை கவனித்து விட்ட தருணத்தில் அது போய்விட்டது.  அதனால் உங்களை பிடித்துக் கொள்ள முடியாது. காரணம் அது நீங்கள் மயக்கத்திலிருக்கும் போதுதான் நடக்கும். மூன்றுமுறை கவனிக்கும்போது நீங்கள் அந்த கோபத்திலிருந்து வேறுபட்டவர் என்பது உங்களுக்கு உள்ளே தெரியவரும். நீங்கள் அதை ஒரு பொருளாக்கலாம், காரணம் அது அங்கே இருக்கிறது, நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். இதை எல்லாவற்றினுடனும் செய்ய வேண்டுமென்று புத்தர் தனது சீடர்களுக்கு கூறினார்.
சாதாரணமாக, எல்லா கலாச்சாரங்களும் நாகரீகங்களும், பிரச்னைகளை அழுத்தி வைக்கவே கற்றுக்கொடுக்கின்றன. அதனால் நீங்கள் மெல்ல மெல்ல அதை மறந்தே போகிறீர்கள் – நீங்கள் அது அங்கே இல்லவேஇல்லை என்னும் அளவுக்கு நீங்கள் அதை மறந்து போகிறீர்கள். 
அதற்கு நேர் எதிரானதுதான் சரியான வழி. அதை முற்றிலுமாக தெரிந்து கொள்ளுங்கள், அதை தெரிந்துகொண்டால் அதன் மீது கவனம் செலுத்தினால், அது உருகும்.
ஓஷோ

Friday 16 March 2018

கருணை

🌺ஒரு
*கதை*

ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்து  சலித்து விட்டதால்  ஜென்குருவிடம் வந்து, ஐயா
எனக்கு உலகம் சலித்து போய்விட்டது. உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன்
என கேட்டான்.

குரு
எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதிலாவது
ஈடுபட்டதுண்டா
என கேட்டார்.

இளைஞன் சிந்தித்து விட்டு ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். எனக் கூறினான்.

குரு; நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.

குரு, அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப்
. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன் என்றவர்
அவனிடம் திரும்பி, இதோ பார், இது வாழ்வா சாவா என்பதற்க்கான
போட்டி
  நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன்
என்பதை நினைவில் கொள் என்றார்.

போட்டி தொடங்கியது.
இளைஞனுக்கு முழு உடலும் நடுங்கியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?

துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது.

அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பனிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே
என்பதை
நினைத்ததுமே
அவர்பால் அவனுக்கு அன்பு ஏற்பட்டது.  இந்த கருணையை உணர்ந்த அந்த கணமே அவனுக்கு, தெரியாத கதவுகள் திறந்தன. பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான்.

அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்
குரு
மகனே நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.

இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக
பிரதிபலனின்றி உன்னை தியாகம் செய்யும் பொழுது
நீ கருணை உடையவனாகிறாய்.

அன்பு எப்போதும் கருணை மயமானது.

அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்.

🙏🏻

Wednesday 14 March 2018

சிரியுங்கள்

*_சிரிப்பு என்னும் உயர் நிலை_*

ஒ ருவித பரவச நிலையில் இருந்தார் குரு. குருவின் தெய்வீக அனுபவத்தை தெரிந்து கொள்ள இதுவே சரியான நேரம் என்று சீடர்கள் நினைத்தனர்.
சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குரு தனது அனுபவத்தை கூறத்தொடங்கினார்.
“கடவுள் என்னை முதன் முதலில் ‘மகிழ்ச்சி’ என்னும் இடத்துக்கு கைபிடித்து அழைத்துச் சென்றார். அங்கே நான் பல வருடங்கள் தங்கியிருந்தேன்.”
திடீரென்று ஒருநாள் கடவுள் வந்து என்னை ‘துயரம்’ என்னும் இடத்துக்கு கூட்டிச் சென்றார். காரணமற்ற பற்றுதல்களிலிருந்து என் மனம் முழுமையாக விடுதலை பெறும் வரையிலும் நான் அங்கேயே இருந்தேன். அங்குதான் ‘அன்பு’ என்னும் கரங்களுக்குள் நான் அகப்பட்டுக்கொண்டதை உணர்ந்தேன். அந்தக் கரங்களின் தீப்பிழம்புகள் எனக்குள் எஞ்சியிருந்த ‘நான்’ என்னும் அழுக்கு படலத்தை எரித்து சாம்பலாக்கியது.
அதன்பின் கடவுள் என்னை ‘அமைதி’ என்னும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே வாழ்வு–மரணம் என்னும் புதிர்கள், என் கண்களின் முன்னால் தம்மை வௌிப்படுத்தி நின்றன.
“அதுதான் உங்கள் நெடும்பயணத்தின் இறுதி நிலையா?” சீடர்கள் கேட்டார்கள்.
“இல்லை” குரு தொடர்ந்து பேசினார்...
கேள்விகள்
1.குரு தன் சீடர்களிடம் என்ன சொல்லியிருப்பார்?
2.இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?
விடைகள்
1.ஒருநாள் கடவுள் என்னிடம் சொன்னார்: “இன்று நான் உன்னை புனிதக் கோவிலின் கருவறையான என் இதயத்துக்குள் அழைத்துப் போகிறேன்” என்றார். தொடர்ந்து ‘பெருஞ்சிரிப்பு’ என்னும் இடத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன்’.
2.சிரிக்கும் போது நீ மகிழ்ச்சியடைகிறாய். நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உன்னிடம் வெறுப்பு, வன்மம், பொறாமை.. என்று எந்தவிதமான எதிர்மறை உணர்வுகளுமே இருக்காது. எதிர்மறை எண்ணங்கள் இல்லாத இடத்தில் அன்பும், பரிவுமே ஆட்சி செய்யும். இதுதான் ஆன்மிக வாழ்வின் இறுதி நிலை. இதை ஒருவர் மிக எளிதாக எட்டிவிடலாம். எப்படி? சிரியுங்கள், மனம் விட்டு சிரியுங்கள், சிரித்துக் கொண்டே இருங்கள்.

Sunday 11 March 2018

மனதை கவனிப்பது

💚 மனதை கவனிப்பது எப்படி...

குழந்தையாய் இருக்கையில் மனம் என்ற ஒன்று தர்க்கங்கள் இன்றி இருக்கும்.

வளர வளர நமது வாழ்க்கைமுறை, கல்வி, சமுதாயச் சூழ்நிலைகள் மனதிற்கு நிறைய சேகரிப்புகளைத் தந்து தர்க்கம் சார்ந்த முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும்.

இந்த முடிவுகளின் சேகரிப்புதான் நமது தற்போதய மனம்.

இப்படிச் சேர்த்தவைகள் நல்லவைகளுக்காக நம்மால் சுயவிருப்பத்துடன் பயன்படுத்தப்படுகிறது.

மனம் எப்போதுமே முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும், தங்கிக்கிடக்குமே தவிர உரிய கணத்தில் இருப்பதில்லை. அது பயனற்றதைப் பேசிக்கொண்டு இருக்கும்.

மனம் பேசினால் அது பயனற்ற வார்த்தைகளாக, வெளிப்பட்டு நம்மை அந்தகணத்தில் இருக்கவிடாமல் செய்துவிடும்.

பயனற்ற பேச்சு, பயனற்ற எண்ணங்களில் மனம் ஓடிக்கொண்டிருக்க எதோ வாழ்கிறோம் என்ற அளவில் வாழலாமே தவிர வாழ்கையை முழுமையாக வாழ முடியாது.

கண்ணை மூடி உடல் உணர்வை, சூழலை, ஒலியை கவனிக்க முற்படுங்கள்.

எவ்வளவு நேரம் முடியும்?

சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் கவனிக்க இயலாது. மனம் தாவ ஆரம்பித்துவிடும். இன்னும் என்னென்ன வேலை இருக்கு இப்படி உட்கார்ந்திருக்கே என்றோ., ஆபீஸ், குடும்பம், நட்பு, திரைப்படம் என வெளியேஓடிவிடும்.

அந்த கணத்தில் நாம் இருக்க உதவி செய்யாது இந்தமனத்தை சரி செய்ய ஒரே தீர்வு அதை சாட்சி பாவனைக்கு ஆட்படுத்த வேண்டும். அதாவது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைக் கவனிக்கப் பழக்க வேண்டும்.

சாட்சி பாவம் என்பது விலகி நின்று கவனித்தல், வருகின்ற எண்ணங்களோடு தவறான அல்லது தர்க்க ரீதியான அபிப்ராயம் ஏதுமின்றி இருத்தல்.

இதுவே தியானத்தில் நடப்பது.

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே நின்று கவனியுங்கள்.

எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம்.

உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதில் அந்தக் கணங்கள் இருக்கின்றன்.

கவனிக்கும் நுட்பம் வாய்த்தால் நான் என்பது வேறு.. தோன்றுகின்ற எண்ணங்களோ, கவலைகளோ, கருத்துகளோ நான் அல்ல என்பது அனுபவமாகும். இது அவைகளுடனான உங்களின் உறவை செம்மைப்படுத்தும்.

தியானத்தில் நடப்பதை வாழ்க்கையாக்க முடிகிறதா... நீங்களே ஞானி வேறு எங்கும் தேடவேண்டாம்.

மனதினால் செய்ய முடியாத விஷயம் நடுநிலையில் இருப்பதாகும்.ஒரு துருவத்திலிருந்து எதிர் துருவத்திற்கு செல்வது மனதின் இயல்பாகும்.

நீங்கள் நடு நிலையில் இருந்தால் மனது மறைந்துவிடும்.இது கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது.ஊசல் நடு நிலையில் நின்று விட்டால் கடிகாரம் நின்று விடுகிறது.

நடு நிலையில் நிற்பதே தியானம்.

இந்த மனம் அதிக தூரத்தில் உள்ளதையே நாடுகிறது.

அருகாமை உங்களுக்கு சலிப்பைத் தருகிறது.

தூரத்தில் உள்ளது நம்பிக்கை தருகிறது.

கனவைத் தருகிறது.

மிகவும் வசீகரமாக இருக்கிறது.

நீங்கள் அந்தக் கோடிக்குப் போய்விட்டால் , நீங்கள் புறப்பட்ட இடம் மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறது.

மனம் முரண்பாடுகள் நிறைந்தது.
மனம் முழுமையாக இருக்க முடியாது.

யாரையாவது நீங்கள் நேசிக்கும்போது உங்கள் வெறுப்புத் தன்மையை அடக்கி வைக்கிறீர்கள்.
நேசித்தல் முழுமையாக இல்லை.

உங்கள் வெறுப்பு எந்நேரமும் வெளிப்படலாம்.

நீங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள்.

எல்லா உறவுகளும் விருப்பும் வெறுப்பும் உடையவை.

மனம் உங்களுக்கு எதிரானதற்கே செல்ல வற்புறுத்தும்.எதிரானதற்குச் செல்லாதீர்கள்.

மையத்தில் நின்று இந்த மனம் செய்யும் ஏமாற்று வேலையைக் கவனியுங்கள்.

இந்த மனம் உங்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது.💚