Thursday 26 October 2017

அன்பென்னும் மலராக

ஓஷோ  துளிகள் .....
🌸🌸🌸🌸🌸🌸🌸
1. ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம், ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான். உனது விழிப்புணர்வு.

2. வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல. மனித மனங்களை தவிர.

3. வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள். வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.

4. நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை.

5. வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்.

6. வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒரு வாய்ப்புதான், ஒரு வாசல்தான்.

7. கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்.

8. அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

9. இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும் ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.

10. தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்கவேண்டும் மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது.

11. ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும். அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.

12. எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும், ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால் மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்.

13. உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார். நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்.

14. நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல. நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை.

15. இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்.

16. ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது.

17. உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி.

*மலரட்டும் உன்னுள் ஜீவியம் அன்பென்னும் மலராக*🌺🌿

Friday 13 October 2017

மனமற்ற நிலை வர

இன்றைய நவீன உளவியலார்
கூறுகின்றனர் !
நோய்களில் எழுபது சதவீதம் மனம்
சம்பந்தப் பட்டவைதான் ...
ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான்
வெளிப்படுத்த முடியும் ...
ஆனால் நோயின் துவக்கம் மனத்தில் தான்
ஆரம்பம் ஆகிறது ...
அது உனது மனதில் துவங்கி உன்
உடலுக்குள் நுழைகிறது ...
உடலில் துவங்கும் எதுவும் மனதிற்குள்
நுழைய முடியும் ...
உங்களுக்கு நோய் தீர்ந்து விட்டது
என்ற எண்ணத்தை மனதிற்குள் ...
செலுத்தி விட்டால் நோய் மறைந்து
விடுகிறது ...
மனதிற்கு உடல் மீது அபாரமான
பலம் உண்டு ...
உங்கள் உடலில் எல்லாவற்றையும்
மனம்தான் நடத்திச் செல்கிறது ...
உங்கள் மனதை மாற்றுவதன்
மூலமாக ...
உடலிலுள்ள எழுபது சதவீத
நோய்களை குணப்படுத்த முடியும் ..
உங்கள் மனம்தான் உங்கள்
ஆரோக்கியம் ...
உங்கள் மனம்தான் உங்கள்
நோய் ..
நீங்கள் உங்கள் மனதோடு வாழ்வதால்
யதார்த்தம் என்பது தெரியாமல் போகிறது ...
நீங்கள் மனதைக் கடந்து செல்லும் போதுதான்
யதார்த்தம் தெரிய வரும் ...
அப்போது உங்கள் சொந்த மனம் மறைந்து
அது பிரபஞ்ச மனம் ஆகிறது ...
அப்போது உங்கள் உள்ளுணர்வே
பிரபஞ்சம் ஆகிறது ...
அப்போது அங்கே நோய் ஏது ?
நோய் நீக்கம் ஏது ?
ஓஷோ
மருத்துவத்திலிருந்து
மனமற்ற நிலை வரை

Wednesday 11 October 2017

வாழ (108) சூத்திரங்கள்

வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்
××××××××××××××××××
1.      கடமையை செய்.
2.      காலம் போற்று.
3.      கீர்த்தனை பாடு.
4.      குறைகள் களை.
5.      கெட்டவை அகற்று.
6.      கேள்வி வேண்டும்.
7.      கை கொடு.
8.      கோவிலுக்குச் செல்.
9.      கொலை செய்யாதே.
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  சேர்க்கப் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  நைந்து பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100.  சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103.  வன்மம் வைக்காதே.
104.  சொல் தவறாதே.
105.  தோள் கொடு.
106.  பேராசைப் படாதே.
107.  புன்னகை அணி.
108.  நீடுழி வாழ்.   
################

மன இறுக்கமும் ஓய்வும்.

மன இறுக்கமும் ஓய்வும்.
-------------------------------------------

🔥 இப்போது ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனோவசியம் செய்பவர்கள், ஒரு அடிப்படை விதியைக் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் அந்த விதியை, எதிரிடை விதி என்று அழைக்கிறார்கள்.
ஒன்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது செய்வதற்கு, நீங்கள் கடின முயற்சி மேற்கொண்டால்,
வெறுமனே அதற்கு எதிரான முடிவுதான் ஏற்படும்.

🔥 இது, நீங்கள் ஒரு சைக்கிளை முதன்முதலாக ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வதைப் போன்றது.

அப்படிக் கற்றுக் கொடுக்கும்போது நீங்கள் ஒரு அமைதியான, போக்குவரத்து இல்லாத சாலையில், அதிகாலையில் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

🔥 அப்போது நீங்கள் சாலையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தப் பட்டுள்ள மைல்கல்லைப் பார்க்கிறீர்கள். சாலையோ அறுபது அடி அகலம் இருக்கும்.
ஆனால், அந்த மைல்கல் மிகவும் சிறியதாக சாலை ஓரத்தில் நிற்கும்.
ஆனால், நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவீர்கள். நீங்கள் சைக்கிளில் அந்த மைல்கல்லில் மோதிவிடுவோமோ என்று பயப்படுவீர்கள்.
இப்போது நீங்கள் அந்த அறுபது அடி சாலையை மறந்துவிடுவீர்கள். உண்மையில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றாலும்கூட அந்த மைல்கல்லில் மோதுவதற்கு அதிக சந்தர்ப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ, கண்களை திறந்து கொண்டு இருக்கும்போதே அந்த அறுபது அடி சாலை மறக்கப் பட்டு உங்களது மனம் அந்த மைல்கல்லில்மீது குவிக்கப்பட்டு விட்டது.

🔥 முதலில் அதன் சிவப்பு நிறம் மனதில் குவிகிறது. எனவே நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். எனவே அதன்மீது மோதுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு சைக்கிளின் மீது இருப்பதையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள்.
இப்போது உங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை அந்த மைல்கல்லில் மோதாமல் இருப்பது எப்படி என்பதுதான். இல்லையெனில் அதன்மீது மோதி உங்களது கை காலை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

🔥 இப்போது நீங்கள் அந்த மைல்கல்லின் மீது மோதுவது தவிர்க்கமுடியாமல் போய்விடும்.
நீங்கள் நிச்சயம் அந்த கல்லின்மீது மோதிவிடுவீர்கள். அதன்பிறகு நீங்களே,
நான் இந்தக் கல்லின் மீது இடிக்காமல் இருப்பதற்கு கவனமாக முயற்சி செய்தேன். என்றாலும் தோற்று விட்டேன்... என்று நினைத்து ஆச்சரியப்படுவீர்கள்.

🔥 உண்மையில் நீங்கள் கடினமாக முயற்சி செய்ததால்தான் நீங்கள் அந்த கல்லின்மீது மோதினீர்கள். நீங்கள் அதை நெருங்கி வர வர, அதன்மீது மோதாமல் இருப்பதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்தீர்கள்.
ஆனால், நீங்கள் எந்த அளவுக்கு அந்த கல்லை தவிர்த்துவிட முயற்சி செய்தீர்களோ அந்த அளவுக்கு உங்களது மனம் அதன்மீது குவிந்துவிட்டது.
அது ஒரு மனோவசிய சக்தியாக ஆகிவிட்டது.
அது உங்களை மனோவசியம் செய்துவிட்டது.
அது ஒரு காந்தம் போல் ஆகிவிட்டது.

🔥 இது வாழ்க்கையின் ஒரு அடிப்படை விதி.
அநேக மக்கள், அநேக விஷயங்களை தவிர்ப்பதற்கு விரும்புகின்றனர்.
ஆனால், அவர்கள் அதே விஷயங்களில் விழுந்து விடுகிறார்கள்.
அதிக முயற்சி செய்து, ஏதாவது ஒன்றை தவிர்த்துவிடப் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் அதே குழியில் விழுந்துவிடுவீர்கள். அதை நீங்கள் தவிர்க்கமுடியாது.
அதை தவிர்ப்பதற்கான வழி அது அல்ல.

🔥 ஓய்வாக இருங்கள்.
கடின முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் ஓய்வாக இருப்பதன் மூலமே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும்.
கடினமாக முயற்சி செய்வதால் இருக்க முடியாது.
எனவே, அமைதியாக, ஓய்வாக, அடக்கமாக இருங்கள்.

♡ ஓஷோ 🌺🌿

ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை

ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை 🌷

1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும்.

நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே.

காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.'

கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம்.

அதுபோல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிச் செல்கிறோம்.

4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது.

ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.'

எழுந்து கடமைகளை செய்யும்போதும் எப்போதும் சொல்ல வேண்டியதும் 'ராம நாமம்.'

அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.

6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும்.

பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் #பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,

7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம்.

எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம்.

இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!

8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்பட வேண்டும்.

ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.

இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .

9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள்.

அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .

10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும்.

எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .

11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும்.

'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும்.

சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.

12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.

'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும், நோயற்ற தன்மையையும் தந்து அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும்.
நோய்கள் இருப்பின் குணமாகும்.

14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.

15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும்.

கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம்.

இதுவும் சேவையே! .....

யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........

அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.

நாமா 'ராம நாமா' சொன்னால் வருவினையும் தாமா தீரும்.