Tuesday 19 July 2016

மெய்ஞானம்

மெய்ஞானம்
*****************
ஆதியின் மூலம் அநாதி தன் சூழ்ந்து அலுத்தும் திறனால் வெட்டவெளியில்
தன்னையே இருக்கி
இருக்கி தனக்குள்ளே
வெடிக்கிறது .

வெடிப்பில் சிதறி செல்லும் போது
சூழல் ஏற்படுகிறது
வெட்டவெளியின்
சூழ்ந்தழுத்தும் திறனால் நிரந்திர சூழற்ச்சியாகி விடுகிறது ( "இறைதுகள்")

இறைதுகள்  இனைந்து விண்கூட்டங்களாகி
அவை இனைந்து
பேரணு ,பேரணுக்கள்
இனைந்து அணுக்கள்

அணுக்களின் கூட்டே
அனைத்து சிருஷ்டிகளும்.

இந்த இறைதுகளே
நமது உயிர் இயக்கத்தில் மூல ஆற்றலாக உள்ளது.

நமது மன இயக்க ஆற்றலை தியானத்தின் மூலம் மன அலைகளை குறைத்தால் உயிரின்
சுழற்சியை புருவமத்தியில்
உணரலாம்.

"நான்" செத்த மனிதனிடம் இருப்பது
இறை மட்டுமே

இந்த உயிருக்கு இறப்பு கிடையாது
இறப்பு என்பது உயிரை
விடுவது. சாதாரண மனிதன் இறப்பான்

ஞானி முக்தி அடைவான்

முக்தி என்பது உயிர் தனக்குள் அடங்குவது

நாமும் உயிரை விடாமல் முக்தி அடைவோம...!!!

இதை அறியாத உன்னிடம் இறந்தவர்களை முக்தி அடைய வைக்கிறேன் காசு குடு என்று பூசாரி வந்து நிப்பான் விழிப்புணர்வும் தேவை...!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.