Tuesday 19 July 2016

தன்னை அறிதல்*

*தன்னை அறிதல்*

இருட்டு என்பதே இல்லை அது வெறும் தோற்றம்தான்

ஒளி இன்மைதான் இருட்டு

ஒளியை உண்டாக்கலாம் அழிக்கலாம்

ஆனால் இருட்டை படைக்கவும் முடியாது
அழிக்கவும் முடியாது

ஒளி இன்மைதான் இருட்டாகிறது

அன்பு இன்மைதான் வெறுப்பாகிறது

கருணை இன்மையே கோபமாகிறது

கோபம் வரும்போது  எல்லாம் நம் உள்ளொளி மறைந்து விடுகிறது

முழு உணர்வோடு இருக்கும் போது கோபம் வராது

உணர்வு என்பது ஒளியைப் போன்றது

கோபம் என்பது இருட்டைப் போன்றது

ஒளியும் இருட்டும் ஒன்றாக இருக்க முடியாது

அதுபோல உணர்வோடு இருத்தலும் கோபமும் ஒன்றாக இருக்க முடியாது

நமது அக இயல்பாம் அக ஒளியை உணர்ந்து புரிந்து கொண்டால் உங்களிடம் எல்லாம் மாற ஆரம்பிக்கும்

பிறகு உங்களுக்கு தூக்கமே தேவையில்லை ஓய்வு மட்டும் போதும்

நமது அக இயல்பு ஒளியாக உள்ளது

ஒளியாகிய நமது  இயல்பை மறப்பதால் விளைவதே

இருள்  ஆகிய கோபம் பேராசை வெறுப்பு பொறாமை போன்ற குணங்கள்

தன்னை மறப்பதால் தான் எல்லா செயல்களும் நிகழ் கின்றன

*ஒரு நிமிடம் தொடர்ந்து " தன்னை நினைப்பதில் "சித்தி பெறுங்கள் நீங்கள் புத்தராகி விடலாம்*

" தன்னை அறிதல் " என்பதே எல்லாவற்றிற்கும் ஆன திறவு கோல்.

ஓஷோ

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏🙏🙏💐

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.