Wednesday 13 July 2016

தியானம்

தியானம் என்றால் என்ன?
பகுதி (6)

இதில் முக்கியம் நீங்கள் கவனமாய் இருப்பதுதான். கவனமாயிருக்க மறந்து விடாதீர்கள். கவனிப்பவர் மெல்ல மெல்ல உறுதியும் முழுமையும் உறுதியும் பெற்றிட ஒரு நிலைமாற்றம் நிகழ்கிறது. நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தவை மறந்து விடுகின்றன.

அதுவரை உலகப் பொருள்களையே பார்த்துக் கொண்டிருந்தவர் முதல்முறையாக தன்னுள் பார்வையைத் திருப்பும்நிலை உண்டாகிறது. அப்போது காண்பவரே காணப்படுபவராயும் இருக்கிறார்.

இதோ உங்கள் சொந்த வீட்டுக்கு நீங்கள் வந்தாயிற்று.

தியானாத்தில் மலர்தல் (The Flowering of Meditation). – 1

இந்தியாவைப் பொறுத்தவரை தியானம் ஓர் ஒழுங்கு செய்யப்பட்ட முறை (Method) அல்ல. அது வெறும் உத்தியுமாகது அதை நீங்கள் கற்க முடியாது. அது ஒரு வளர்ச்சி – உங்கள் ஒட்டுமொத்த வாழ்தலின் வளர்ச்சி, ஒட்டு மொத்த வாழ்தலின் வெளிப்பாடு. தியானத்தை உங்கள் மீது திணிக்க முடியாது, இணைக்கவும் முடியாது. அது ஓர் அடிப்படையான நிலைமாற்றதில் மட்டுமே நிகழக் கூடியது. அது ஒரு மலர்ச்சி, வளர்ச்சி. வளர்ச்சி எப்போதுமே முழுமையிலிருந்து (Total) வருவது, இணைப்பு அல்ல. அன்பைப் போலவே அதையும் உங்களுக்குள் இணைக்க முடியாது. அது உங்களிலிருந்து உங்கள் முழுமையிலிருந்து வளர்வது. நீங்கள் தியானத்தில் வளர வேண்டும்.

தியானாத்தில் மலர்தல் (The Flowering of Meditation). – 2

பேரமைதி (The Great Silence)
வழக்கமாக அமைதி என்றலே எதிர்மறை (Negative)யான ஒன்றாகவே நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். ஓசையில்லாத, சந்தடியற்ற வெறுமை என்றே அது புரிந்துகொள்ளப்பட்டது. இப்படி தவறாக பொருள் கொள்ளும் நிலை பரவலாகவே கானப்படுவதர்க்குக் காரணம், அமைதி என்கிற அனுபவம் வெகு சிலருக்கு மட்டுமே கிடைத்திருப்பதுதான். அமைதி என்கிற பெயரில் அவர்களுக்குள் அனுபவமானதெல்லாம் சந்தடியின்மை தான். ஆனால் அமைதி முற்றிலும் வேறான நடப்பு. அது முழுக்கவும் நிச்சயமானது. நேர்மறைத்தன்ன்மை கொண்டது. அது உளதாயிருப்பது, வெறுமையானதல்ல.

நீங்கள் இதற்குமுன் கேட்டிராத ஓர் இசையுடன் உங்களுக்குப் பரிச்சயமில்லாத ஒரு நறுமணத்துடன் அது நிரம்பி வழிகிறது. அதன் ஒளியை அகக்கண்ணால் மட்டுமே காண முடியும்.

அது ஒன்றும் கற்பனையல்ல, மெய்யாகவே உணரக்கூடியது. இந்த உண்மை (Reality) எல்லாருக்குள்ளும் முன்னமே இருக்கிறதுதான். என்ன அதை நாம் பார்க்கிறதில்லை அவ்வளவுதான்.

உங்கள் அகவுலகம் தனக்கென்று ஒரு சுவையை, நறுமணத்தை, ஒளியைக் கொண்டிருக்கிறது. அது முழுக்கவும் அமைதியானது. ஆழ்ந்த, சாசுவதமான அமைதி. அங்கே ஒருபோதும் கூச்சல் இருந்ததில்லை. கூச்சல் இருக்காது.

எந்தவொரு வார்த்தையாலும் எட்ட முடியாதது. ஆனால் உங்களால் எட்ட முடியும்.

உங்கள் இருப்புணர்வு மையம் (Center of being) ஒரு சுழற்காற்றின் மையத்துக்குச் சமமானது. அதைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும் அதனால் அது பாதிக்கப்படுவதில்லை. அது சாசுவத அமைதி. நாட்கள் வரும் போகும். ஆண்டுகளும், காலங்களும் வரும்போகும் ஆனால் அது சாசுவதமானது. வாழ்க்கைகள் வந்துபோகும். உங்கள் ஜீவனின் அமைதி மட்டும் அப்படியே இருக்கும். அதே ஆழம் காண முடியாத இசை, அதே தெய்வீக நறுமணம். நிலையற்ற அனைத்தும் கடந்த நிலையான பேரமைதி அது!

அந்த அமைதி உங்களுடையதல்ல, நீங்களே அதுவாகி விடுகிறீர்கள்.

அது உங்களுடைய ஆளுகையில் இல்லை, அதனுடைய ஆளுகையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள். அதன் சிறப்பே அதுதான். நீங்கள் அங்கே இல்லாவிட்டாலும் உங்களுடைய இருப்பே (Presence) அமைதியைக் குலைப்பதாகிவிடும். அந்த அமைதி மிக ஆழமானது. அங்கே நீங்கள் உட்பட யாரும் இல்லை. இது அன்பையும், உண்மையையும் இன்னும் ஆயிரமாயிரம் ஆசிர்வாதங்களையும் உங்களுக்கு வழங்குவது.  ஓஷோ  (தொடரும்)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.