Tuesday, 2 August 2016

காரிய குரு காரண குரு

இரண்டு குரு (காரிய குரு காரண குரு)- கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :-

எல்லாம் வல்ல ஆண்டவர்ஒருவரே என்று யார் நமக்கு உணரச் செய்கிறாரோ-கிடைத்தற்கு அரிதான இம் மானிடப் பிறவியிலேயே அடைதற்கு அரிதான மேலான பேரின்ப பெருநிலைக்கு செல்ல யார் வழி காட்டுகிறாரோ-இவ்வுலக வாழ்க்கையை நமக்கு அறிவித்து வாழ்வாங்கு வாழ வாழ்க்கை நெறியை யார் உபதேசிக்கிறார்களோ-இறைவன் இத்தன்மையன்,நீ இத்தன்மையன்-நீ எப்படி அதுவாக வேண்டும் என உரைக்கிறாரோ அவர்தான் குரு.

குருவாக ஒருவா் வந்துதான் சொல்ல வேண்டும் என்பதல்ல. பல ஞானிகளின் நூற்களை படிக்கும்போது அந்நூலே குருவாகி விடலாம் .அந்நூலாசிரியரே மானசீக குரு ஆகலாம்.ஏதாவதொரு இயற்கை தூண்டுதல் நமக்கு குருவாகலாம்.நூற்களோ,இயற்கையோ,மனிதனோ எப்படியாயினும் சுட்டிக் காட்டிவிட ஒரு குரு தேவை.அவரவா் நிலைக்குத் தக்கபடி அமையும்மெய்ப்பொருள் உணாந்த ஒருவரை குருவாக ஏற்றுக் கொள்வதே சாலச்சிறந்தது.”குருவில்லா வித்தைபாழ்’’ என்ற முதுமொழியை கவனத்தில் கொள்க. நாம் பிறந்ததிலிருந்து நமக்கு ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு குரு உண்டு. முதலில் தாய்,இதுதான் தந்தை எனச் சுட்டிக் காட்டுகிறார்.தந்தை நாம் கல்விகற்க பள்ளியைச் சுட்டிக் காட்டுகிறார்.அரிச்சுவடியை சுட்டிக் காட்டுகிறார் ஒருவா்.படிப்படியாக பல பாடங்களை சுட்டிக் காட்டுகிறார்கள் பலா். நம் நண்பா்கள், வாகனங்கள் ஓட்ட ஒருவா் பயிற்றுவிக்கிறார். இப்படி பலபலவும் பற்பலராலும் சுட்டிக் காட்டப்பட்டு உணர்ந்து வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு வழி காட்டுபவை.

தீயபழக்க வழக்கமுடையவனோடு சோ்ந்தால் அவன் சுட்டிக்காட்டும் தீயவாழ்க்கையில் தன்னை இழப்போர் நல்ல மனிதனாக முடியாது.இவா்களெல்லாம் குரு அல்ல.மனிதன்-மனிதனாக வாழ வழி காட்டுபவரே உண்மையான குரு.இறைவனோடு ஐக்கியமாக விழியாகிய வழியை சுட்டிக் காட்டுபவரே உண்மை குரு.அந்த உண்மை குருவை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும்.

மாதா-பிதா-குரு-தெய்வம் இதுதான் முன்னோர்களால் வரிசைபடுத்தபட்டுள்ளது.மாதா பிதாவை எல்லோரும் அடைந்திருக்கிறோம் குரு என்று ஒருவரை பற்றினால்தான் அவா் இறைவனை சுட்டிக்காட்ட நாமும் உணா்ந்து தெய்வமாகலாம். இன்றைய மனிதன் மனிதனாகவா வாழ்கிறான்!அன்றைக்கே சித்தா்கள் பாடிச் சென்றுள்ளனா். எப்படி என்றால் மனிதரில் பறவையுண்டு, மிருகம் உண்டு,நீர் வாமும் பிராணி உண்டு,நாய்,பேய் உண்டு,மனிதரிலும் மனிதனுண்டு,தேவனுண்டு,தெய்வமுண்டு என பலவாறாக கொண்டுள்ள குணத்திற்குத் தக்கவாறு மனிதன் இருக்கிறான் என்கின்றனா் அவனுக்கு குரங்கு புத்தி-ஏண்டா நாய் மாதிரி அலையுறே-அவனுக்கு பேய்க்குணம் அவனைப்பாரு பண்ணி மாதிரி- இப்படி பலா் பலவாறாக பேசுவதைநாம் அன்றாடம் கேட்கத்தானே செய்கிறோம். என்ன இருந்தாலும் இவ்வளவு துன்பத்திலும் அவன் நம்மை கஷ்டப்படுத்தவில்லையே அவன்தான்யா மனுஷன் இப்படியும் நம்மில் பலரும் பேசுவதையும் கேட்கிறோமல்லவா?

மனிதன் மனிதனாக வாழ வேண்டும்.அதற்கு நம் முன்னோர் அறிவுறுத்திய அறவழி நடக்க வேண்டும் . கீழான எண்ணங்கொண்டு செயல்படும்போது மக்களால் தூற்றப்படும் மனிதன் தன் குண மேம்பாட்டால் தேவனாகவும், முடிவில் தெய்வமாகவும் தன்னை வளா்த்துக் கொள்ள வேண்டும்.மாந்தருள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் நம் தாய்க்கு நம்மை பெற்ற பொழுதைவிட ஊரெல்லாம் நம்மை சான்றோர் என போற்றி வணங்கும் நிலையே பெரும் ஆனந்தம் தருவதாகும். கண்கண்ட தெய்வம் தாய் தந்தையா் மகிழ உத்தமனாக வாழ்ந்து வெளியிலே கண்ட தெய்வத்தை-அல்ல தன் அகத்திலே கண்ட தெய்வத்தை ,கண்மூலமாக கண்ட பரம்பொருளை அடைவதே நாம்பெறும் பேறுகளில் மிகமிகச் சிறந்தது ,தலையானது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.