🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#சூரியனும்_சித்தர்களும்
சூரியனைப் பற்றி சித்தர்கள் ஆய்வு நமது பூமி சூரிய மண்டலத்தில், பால் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பதை அன்றே அகத்தியர் கூறுகின்றார்.
‘‘புவி தானும் ஜோதி வெளியின் ஒளியில்
மிதக்க மிதந்தே கண்டோம்
போகனும் புலிப்பாணியுஞ் சாட்சியே
பருதி குலத்து செம்மையான உயிர்
கோளிது புவியாமே’’
என்றார். ஜோதி வெளி ஒளி என்பது MILKY WAY என்று பொருள்பட, பருதி குலம் என்பது SOLAR FAMILY என்றும் பொருள் ஆகிறது.
இனி சூரியனின் தன்மைகளைச் சித்தர்கள் விவரிப்பதை அவர்தம் பாடல்கள் வழி பார்ப்போம்.
••• சூரியனில் இருக்கும் வாயுக்களில் ஹைட்ரஜன், மற்றும் ஹீலியம் என்பது விஞ்ஞானிகளின் ஆய்வு. இதனை கோரக்கர் என்னும் சித்தர்,
‘‘பருதி தனில் பிரணமிலா நீரின்வாயு நிறைய
மீதக் காலே சோம்பல் பிராண காரிரும்பென
கண்டோமே’’
••• என்றார். பிராணமிலா நீர்வாயு என்பது ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும். இது சூரியனின் எடையில் முக்கால் பகுதி எனவும், INERT எனப்படும் ஹீலியம், ஆக்சிஜன், கார்பன், இரும்பு என்றும் பொருள்படுகிறது. இதையே இன்றைய NASA விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர்.
‘‘ பருதி நிறை சூடுமலராம் - புவியெப்ப
அஸ்டோத்திர நிறையாம் - மங்களவர்ண
மாய் புவி காட்ட, மண்டல நீலமே கரு’’
--- என்றார் புலிப்பாணி.
••• HOT PLASMA என்று சூரியனை அக்காலத்திலேயே சித்தர் வர்ணிக்கிறார். சூடுமலர் என்பதே இது. பூமியைப் போன்று நூற்றியெட்டு பங்கு எடை மிகுத்தது என்றும் பேசுகின்றார். பூமியிலிருந்து சூரியனைப் பார்க்க மஞ்சளாகத் தெரிவது - ஆகாயத்தில் ஏற்படும் SCATTERING EFFECT & BLUE OF THE SKY என்று பேசுவது அறிவியலையே வியக்கச் செய்யும் அளவுக்கு எந்த உபகரணமும் இன்றி வானவழி இதனை சித்தர்கள் உணர்ந்து, நமக்கு உரைத்தமை வியப்பளிக்கின்றது.
சூரியனின் மேற்புறத்து வெப்பத்தை போகர் பாட்டினால் உணரலாம்.
‘‘அக்கனியே அடுதி அளவு இருக்க கண்டோமே’’
••• அடுதி என்பதனை ஐந்தாயிரத்து ஐந்நூறு சென்டிகிரேடு என்று நாடி எண்ணிக்கையின் அகராதி பேசுகிறது. ஆக சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 5,500 டிகிரி செல்சியஸ் என்கிறார் சித்தர். வான்வெளி ஆய்வாளர்கள் 5,505 டிகிரி செல்சியஸ் என்று குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு நொடியிலும் சூரியனின் ஹைட்ரஜன் வாயு சிதைவடைகிறது. இதன் அளவை சித்தர் தெளிவாக விவரிக்கின்றார்.
‘‘ அமிலவாயு தாமுமழியுஞ் சிதைவைச் செப்ப
சட்டிச் சதமிரு பாந்தோகை நிறையென
சாற்ற இஃது தாம் மாத்திரை பொழுதன்றோ’’
••• மாத்திரை என்றால் நொடி என்று பொருள். தோகை என்றால் பத்துலட்சம் அல்லது ஒரு மில்லியன் என்பது நாடியின் பொருள். ஒரு நொடியில் ஹைட்ரஜன் வாயுவை சிதைக்கும் - FISION - அளவு 620 மெட்ரிக் டன் மில்லியனில் என்று சித்தர் பேசுவது - கணக்காளர் மத்தியில், ஆய்வாளர் மத்தியில் ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கிறது. ஆம். ஆய்வாளர்கள் 620 மில்லியன் டன் HYDROGEN ஒரு நொடியில் FUSION ஆகிறது என்பது மிகுந்த துல்லியமான சித்தர் சொல் கணக்கைக் காட்டுகின்றது.
‘‘ஞாயிறான் ஓட்டமும் பால்வடிவமே
புவிக்கு மூபஞ்சமிரண்டு ஒளியாண்டே
பால்வழியும் பறக்குது பாரு, விழியறியாயளிக்
கற்றை ஒப்பிட கனியான தொலை மாத்திரை
யாகுமே’’
••• இப்பாடல் மிகுந்த நுட்பம் வாய்ந்தமை காண்க. வழியறியா ஒளிக்கற்றை என்பது COSMIC MICROWAVE BACKROUND RADIATION என்பர். இதனொடு ஒப்பிடுகையில் கனியான தொலை என்பது 550 கி.மீட்டரைக் குறிக்கும். ஒரு நொடியில் இவ்வளவு தொலை பால்வழி பறக்கிறது. அதாவது MILKWAY நகர்கின்றது என்று தெளிவாகக் கூறுவது, விஞ்ஞானத்திற்கு சிறிதுகூட மாற்றமில்லாது மெய்ஞானம் விளங்குகிறது என்பதனைக் காட்டுகின்றார் சித்தர்.
••• சூரியனிலிருந்து வரும் ஒளியானது பூமியை வந்தண்ட ஆகும் காலம் எவ்வளவு என்பதனை விளக்கும் பாடல் இதோ.
‘‘பருதி கிரணம் பாய்ந்து வந்திம் மண்ணை
யண்ட,யண்டத்தில் சஞ்சாரமாகுமே
பஞ்சரத மாத்திரை காலமே’’
••• என்றார் போகர். அதாவது ஐந்நூறு வினாடி
கள் என்கிறார் சித்தர். இதனை விஞ்ஞானிகள் 499 நொடிகள் என்கின்றனர்.
‘‘பருதியுமோர் விண்மீனே - கடுதிக்குரு
மீனே. பருதி குலத்து ஈரேழு கடுகித்தப்ப
விழுக்காடு குன்ற யீர்பிலா நிறையாமே.
சூடுமலர் உச்சியிறும் மையத்திலுஞ் சுற்றப் பார்ப்பீரே’’
••• இது ஒரு பழம் பாடல். இது சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்கின்றது. இதனை விஞ்ஞானிகள் G-TYPE MAIN-SEQUENCE STAR என்பர். ஆக சூரிய குடும்பத்தின் நிறையில் 99.86% சூரியனின் நிறை என்கிறது இப்பாடல். கடுதிக்குரு என்பது 0.14% என்பதாகும்.
‘‘மதிப்பிலடங்கா உலோக முடைத்தான்
கதிரோன் - தங்கமுமுண்டு - ஒளியுலோக
முமுண்டு சாற்றுவோம் - இவையே
அணுச்சக்தி தமை யெழுப்பக் கரு’’
••• என்று பாம்பாட்டி. எளிமையாகக் கூறுகின்றார். யுரேனியம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் சூரியனில் நிறைய இருப்பதினால், NUCLEAR REACTION ஆங்கு எளிதில் நடைபெறுகின்றது என்கிறார். இதனாலேயே மிகவும் ஆபத்து வாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெளிவருகின்றன. அவை பூமியை வந்தடைகையில்,
‘‘ கருணை மிகுந்த கடிவாளமிட்டான்
சங்கரன் வடிவாய் பற்பல வடி
கட்டிகளை நிறுத்தி நஞ்சைத்தடுக்க
நன்மையே நன்றான நற்கதிரே
மண்ணடைய வைத்தனனே பைத்தமா
நிதியே’’
••• என்ற கொங்கணரின் பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அண்டத்தில் ஏகப்பட்ட LAYER கள் உண்டு. COSMIC LAYER, OZONE LAYER, APPLETION LAYER என்று பற்பல உருவாக்கி, தீமை பயக்கும் கொடிய வெப்பக் கதிர்களை வடிகட்டி நன்மை மட்டும் தரும் கிரணங்களை நமது பூமிக்கு வந்தடைய கருணையே வடிவான கடவுள் - வைத்த மா
நிதி - அனுகிரத்தனன் என்றார் சித்தர்.
‘‘பகுதியானொலியின் ஏகத்துஞ் சற்றே
குன்ற யளி வருமண்டத்தே நம்புவீர்’’
••• என்ற கொங்கணர் வரியிலிருந்து, சூரியனின் புறத்தே ஏற்படும் ஒளி வெள்ளத்தில். 0.8 சதவிகிதமே பூமியை வந்து அடைந்து நம்மை வாழ்விக்கின்றது என்றால், சூரியக் கோளின் தன்மையைக் கண்டு வியப்பு மேலிடுகின்றதான்றோ.
அகத்தியரின் பாடலில்,
‘‘ஆதித்யனவன் ஆற்றலனைத்துமாகாது
அதிலொரு காலே ஒளிக்குதவ, மீதமது
சூடேறி தாமிருப்ப, அμவில் மேலாம்
முப்பானேடு கோடியளவே மாத்திரையில்சலாட
நொடியில் காட்டும் கடுசி துகளே’’
••• சூரியனின் ஆற்றல் அனைத்தும் இனியும் வெளிவரவில்லை. கால்பகுதி சூரியனில்தான் DIF-FUSION,NUCLEAR REACTION நடைபெறுகின்றது. இதனால் ஏற்படும் வெப்பம், மற்ற இடங்களைவெப்பமடையச் செய்கிறது. புரோட்டான் - புரோட்டான் சங்கலி 38 கோடி முறை ஒவ்வொரு நொடியிலும் நிகழ்கின்றது. 3.7---ஜ் 1038 புரோட்டான் ALPHA PARTICLE ஆக உருவெடுக்கின்றது எனப்பேசுகிறார்.
‘‘ஆதித்யனின் அபரிமித வெப்பமது
அளவாய் சாற்ற கேளீர் - ஈர்ப்பிலா
யெடையான சக்தியளி மாற்றமது
தகடேசான நிறையாம் - திறனே கசடானதா
மது மாத்திரை பொழுதெனப் பகரு’’
••• அதாவது சூரியனின் வெப்ப சக்தி வெளிவருதல் 4.3 மில்லியன் மெட்ரிக் டன் (தகடேசான) ENERGY WATT. 9.000 X 1011 MEGATONS TNT PER SECOND (கசடானதாம் - 3.9 X 1026 W) இவ்வளவு துல்லியமான கணிதத்தை அக்காலத்திலேயே சித்தர்கள் கூறியதை விஞ்ஞானிகள் உண்மை என ஆய்ந்து கூறுவது நமது சித்தர்களின் வான்வெளி புலமையைப் பறைசாற்றுகிறதன்றோ.
••• TAKEN FROM : kaviyam.in ., September2013 Month Issue
===============================================
••• குறிப்பு: இஃதே போல் தெய்வத் தமிழ் திருநாட்டில் உள்ள கீழ் சூரிய மூலை சிவாலயத்தில் இருந்து தாம் சூரியனுக்கு தேவையான கதிர்வலைகள் அனுப்படுகின்றன என்று 2004ல் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் [சித்தர்களின் ஞான பத்ர கிரந்த விளக்கங்களே ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் ]இதழில் வந்த போது japanல் இருந்து solar scientists வந்து ஆய்வு செய்து விட்டு சென்றனர்.., அதே போல் சூரியனிடமிருந்து வரும் ஏழு கதிர்களை அவரவருக்கான கர்ம பரிபாலன நியதிப் படி பயன்படுத்தி இரவு பகல் காலங் வேறுபாட்டை கடக்கும் மார்கமும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
••• [விஞ்ஞான பூர்வமாக சூரியனிடமிருந்து ஏழு கதிர்கள் தாம் பூமியை அடைகின்றன என்கிறனர் .., இதை தான் ஏழு குதிரையில் சூரிய பகவான் பவனி வருவதாய் அன்ம நுணுக்கமாய் ஆன்மீகப் பூர்வமாய் விளக்கப்பட்டுள்ளது.... என்பதும் குறிப்பிடத்தக்கது...]
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.