Sunday, 14 August 2016

கஷ்டம்

*மனதை தொட்ட கதை*

கல்யாணமாகி பதினோரு வருடங்களுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை கிடைக்கின்றது, அவர்கள் இருவரும் நல்ல அன்பான கணவன் மனைவி, குழந்தை அவர்கள் கண்களின் ரத்தினம்.

அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும், ஒரு நாள் காலையில் மருந்து பாட்டல் திறந்திருப்பதை கணவன் பார்கிறார். அவர் ஆபீஸ் போவதற்கு சற்று தாமதமாகிவிட்டதால் தன் மனைவியிடம் அதை மூடி அலுமாரியில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார், மனைவி சமயலறையில் மிகுந்த வேலையில் இருந்ததால் திறந்திருந்த மருந்து பாட்டலை மறந்துவிட்டார்.

குழந்தை அந்த பாட்டலை பார்க்கிறது அதன் வடிவம் அதை கவரும் விதமாக இருந்ததால் உடனே விளையாட்டாக அதில் இருந்த மருந்தை சாப்பிட்டு விடுகிறது, அது பெரியவர்கள் மட்டும் சிறிய அளவு எடுத்துக்கொள்ளக் கூடிய, அதிகமாக அதை உட்கொண்டால் நச்சுத் தன்மையை எட்படுத்தக் கூடிய ஒரு மருந்தாக இருந்திருக்கவேண்டும்.

குழந்தை கீழே விழுந்து விடுகிறது, உடனே தாய் பதறி அடித்துக்கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்கிறாள், அங்கே குழந்தை இறந்துவிடுகிறது, அவள் அப்படியே உறைந்து விடுகிறாள்.

தன்னுடைய கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று அப்படியே அதிர்ச்சிக்கு உள்ளாகி விடுகிறாள்.

கலக்கத்தோடு கணவர் வைத்தியசாலைக்கு வந்து பார்கிறார் குழந்தை இறந்து கிடக்கிறது, தன் மனைவியை பார்கிறார், பார்த்து ஐந்தே வார்த்தைகள் சொன்னார்-

கணவர் சொன்னார் :  “ *நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் அன்பே* .... ” கொஞ்சமே எதிர்பாராத கணவனின் இந்த வார்த்தையை கேட்டதும் கண்ணீர் துளிகள் கட்டுப்படுத்த இயலாமல் கணவனின் தோளில் சாய்ந்து அழுதாள். அவளுக்கு ஏதோ உயிர் திரும்பி வந்ததுபோல் இருந்தது.

குழந்தை இறந்து விட்டது, அவரால் அந்தக் குழந்தையை தங்கள் வாழ்க்கைக்குள் திரும்பி கொண்டுவந்துவிட முடியாது.

தாயிடம் குற்றம் காண்பதற்கு அங்கே எதுவுமே இல்லை, அவர் மட்டும் அந்த பாட்டலை எடுத்து வைப்பதற்கு சில நிமிடம் ஒதுக்கி இருந்தால், இது நடந்திருக்கவும் முடியாது.

இங்கு யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாது, அவள் தன் குழந்தையை இழந்திருக்கிறாள், அந்த நேரத்தில் தன் கணவரிடம் இருந்து அவளுக்கு தேவைப்பட்டது ஆறுதலும் அனுதாபமும் மட்டுமே அதை அவர் கொடுத்துவிட்டார்.

இதே கண்ணோட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையைப் பார்க்க ஆரம்பித்தால், உலகில் பிரச்சினைகள் என்பது மிக அரிதாகவே இருக்கும். “ஒரு ஆயிரம் மைல் தூரப் பயணம் ஒரு சின்ன அடியில் தான் ஆரம்பிக்கின்றது”.

பொறாமை, வஞ்சகம், மன்னிக்காமை, சுயநலம், பயம் போன்றவற்றை உங்களிடம் இருந்து விரட்டி விடுங்கள்.

கஷ்டம் என்று நீங்கள் நினைப்பது போன்று அல்லாமல் வாழ்கையில் நிறைய விஷயங்களை எளிதாகவே அடைந்து விடலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.