முதன் முதலாக ரயிலில் பிரயாணம் செய்த
ஒரு கிராம வாசியைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.
அவன் தான் காெண்டு வந்த மூட்டைகளை ரயிலில் கிழே
வைத்தால் ரயிலுக்கு அதிக பாரமாக இருக்கும் என்று
எண்ணிக் காெண்டு அதை தன் தலை யில் சுமந்து
காெண்டு பிரயாணம் செய்தானாம் ..
ரயில் அவனையும் அவனது மூட்டைகளையும்
சேர்ந்து தான் சுமந்து செல்கிறது என்பதை அவன் உணர
வில்லை ..அவன் அந்த மூட்டைகளை தரையில் வைத்தாலும்
தலையில் சுமந்தாலும் ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்படப்
பாேவதில்லை ..
உன்னுடைய மனம் என்பது உனக்கு தேவையற்ற
சுமை ..நீ அனாவசியமாக அந்த கிராமவாசியைப் பாேல் மனதை சுமந்து காெண்டு இருக்கிறாய் ..ஆகவே தான் நான் அதை கீழே இறக்கி வை என்று சாெல்கிறேன் ..
இந்த மரங்கள் பறவைகள் மனமின்றி மகிழ்ச்சி
யாக வாழ்கின்றன ..குழந்தைகளைப் பாருங்கள் ..அவர்கள்
இன்னும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்..அவர்கள் மனமின்றித்
தான் வாழ்கின்றனர் ..
இந்த மனம் நமக்குத் தேவையே இல்லை .அது இல்லாமலேயே இந்த உலகம் பாேய்க் காெண்டு இருக்கிறது..
நீ மட்டும் ஏன் அதை சுமந்து காெண்டு திரிகிறாய் ?
ஓரு நிமிட நேரம் அதை உன்னால் கீழே வைக்க
முடியுமானால் உன்னுடை ய முழு வாழ்க்கையும் மாற்றப்
பட்டு விடும் ..அப்பாேது பாரமின்றி இருப்பதை நீ உணர்ந்து
காெள்வாய் ..
ஓஷாே
வெறும் காேப்பை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.