Saturday 6 August 2016

நாக சதுர்த்தி

நாக சதுர்த்தி

🐲 ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் மேற்கொள்ளும் விரதம் நாக சதுர்த்தி. வம்சம் விளங்க, நாக பயம், தோஷம் இல்லாமல் இருக்க வேண்டி செய்யப்படும் விரதம். உப்பு இல்லாத ஆகாரத்துடன், நாகராஜனுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

🐲 நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பு+ஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பு+ஜிப்பது நல்லது.

🐲 திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்வார்கள்.

🐲 நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிப்பட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.

🐲 புற்றுக்கு பால் தௌpத்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சு+ட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்யம் செய்து 12 முறை வலம் வந்து வணங்கினால் நன்மை நடக்கும்.

புராண கதை :

🐲 பாம்பு தீண்டி இறந்த தன் சகோதரர்களைக் கண்டு வருந்திய பெண் ஒருத்தி நாகராஜரை வேண்டி பு+ஜித்தாள். நாகராஜரும் மகிழ்ந்து, அவளுடன் பிறந்த ஐந்து சகோதரர்களையும் உயிர் பிழைக்கச் செய்தார். இந்த நிகழ்ச்சி நடந்த நாளை நாக சதுர்த்தி என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.