பஞ்சாங்கம் என்றால் என்ன?
பஞ்சாங்கம் என்பது வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்.
அவை :
1. வாரம் 2. நட்சத்திரம் 3. திதி 4. யோகம் 5. கரணம்
★ வாரம் : ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7-யை குறிக்கும்.
★ நட்சத்திரம் : அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.
★ திதி : ஒரு வானியல் கணக்கீடாகும். வானில் சு+ரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.
★ யோகம் : வானில், குறித்த இடத்திலிருந்து சு+ரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.
★ கரணம் : திதியில் பாதியாகும்.
பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன.
1 சௌரமான முறை 2 சந்திரமான முறை.
சௌரமான முறை
⚙ இம்முறை சு+ரியனின் இயக்கத்தை அடைப்படையாக கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவை : 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை
சந்திரமான முறை
⚙ சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பு+ர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.