Sunday 20 March 2016

அகத்தில் ஆழ்ந்து ஆனந்தம் அடைவோமா

வெளியில் இருந்து மகிழ்ச்சிக்காக எதையும் தேட வேண்டியதில்லை.

இன்றைய கால கட்டத்தில் நம்முடைய மகிழ்ச்சியை வெளியில் தேடி எதையாவது சாதிக்க வேண்டும் என்று அலைந்து திரிகிறோம்.

எதையாவது சாதித்தால் மகிழ்ச்சி கிடைகும் என்று நினைக்கிறோம்.

ஒன்றைப் பெற்றால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்கிறோம்.

ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை.

மகிழ்ச்சி என்பது முழுக்க முழுக்க அகம் சார்ந்தது.

புறம் சார்ந்திருப்பது அனைத்தும் சௌகரியம். Material Comfort.

நாற்காலியில் அமர்வதும், குளிரூட்டப்பட்ட அறையில் உறங்குவதும் ஆனந்தம் அல்ல.

அவைகள் அனைத்தும் பொருள் மூலம் அனுபவிக்கும் சௌகரியம்.

ஆனந்தம் வேறு, சௌகரியம் வேறு.

சௌகரியமாக இருப்பதற்கு பொருள் வேண்டும்.

ஆனால், ஆனதமாக இருப்பதற்கு பொருள் தேவை இல்லை.

ஆனந்தமாக இருப்பதற்கு அகம் மட்டுமே வேண்டும்.

“அகத்தில் அகமாய் அமர்ந்தால், பேரானந்தம், சுயமே சுகம் (self is joy) என்றால் என்ன என்று புரியும்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், சுயம் சார்ந்து இருந்தாலே போதுமானது.

அகத்தில் ஆழ்ந்து ஆனந்தம் அடைவோமா....????

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.