Thursday 31 March 2016

பார்

எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கவனத்தோடு பார்

எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தியானித்து பார்

தியானம் உன்னை முழுமையாக்குகிறது

ஆழ்ந்து கவனிக்கும் போது  அறிவு கிடைக்கும்

தியானத்தோடு கவனிக்கும் போது அறிவு கழியும்

கூர்ந்த கவனம் இறுக்கத்தை ஏற்படுத்தும்

தியானம் மனதில் எந்த இறுக்கமும் இல்லாமல் தளர்வை ஏற்படுத்தும்

தெரிந்து கொள்வது அறிவு
புரிந்து கொள்வது தியானம்

தியானத்தில் நீ எதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

தியானத்தில் மனம் கழிந்து போய் கேட்கிறாய்

அதில்தான் பரவசம் இருக்கிறது

சத்தியத்தை கேட்கும் போதெல்லாம் அதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை

அது உன்னுடைய இருப்பின் ஒரு பகுதி ஆகி விடும்

அறிவு சாதிப்பது
அறிவு இலக்கு நோக்கியே பயணிக்கும்

பயன் கருதியே எதையும் அறிவு கற்றுக் கொள்ளும்

அறிவு உன்னைக் காரியம் செய்கிறவன் ஆக்குகிறது

அப்போது நீ ஒரு போலியான மையத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்

முழுமைக்கு மட்டுமே மையம் இருக்க முடியும்

நீ கற்றதை கழித்து விடும்போது உனக்கு அகங்காரம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடுகிறது

மக்கள் எல்லோரும் சவால்களையும் சண்டை போடவும் தான் விரும்பு  கிறார்கள்

சண்டையிடும் போது தான் அகங்காரத்தை காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியும்

கற்பது காரியம் ஆற்ற துணை செய்கிறது

காரியம் செய்வது போராடத் துணை செய்கிறது

போராட்டம் அகங்காரத்தை படைக்கிறது

நீ இல்லாமல் போகும் போது எல்லாமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

முழுமை இயங்கிக் கொண்டிருப்பதால்

எல்லாமும் நடந்து கொண்டிருக்கின்றன

செய்வதை நிறுத்தி விடும் போது நீ முழுமைக்கு ஒரு பாதையாகிப் போகிறாய்

அப்போது முழுமை உன் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும்

ஓஷோ
தாவோ
மூன்று நிதியங்கள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.